நடிகை ஸ்ரீவித்யா என் அம்மா தான்! அவங்க தோளில் சாய்ந்த போது கேட்ட சத்தம்! கண் கலங்க பேசிய மீரா கிருஷ்ணன்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் சீரியல்களில் அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்து வரும் நடிகை மீரா கிருஷ்ணன் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீவித்யாவுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை
நடிகை ஸ்ரீவித்யா 1953 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் டி.எஸ். பாலையாவின் மருமகள். இவர் 1966 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் 'குமாரி' மூலம் சினிமா உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ் மலையாளம் உட்பட பல மொழிகளிலும் கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தார். இவர் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் பலருடைய மனம் கவர்ந்திருந்தார்.
கமல்ஹாசனுடன் காதல்
ஸ்ரீவித்யா தமிழில் கமல்ஹாசனுடன் 'அபூர்வ ராகங்கள்' உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் அவர்கள் இருவரும் பிரிந்தனர். பிறகு ஸ்ரீவித்யா 1976 ஆம் ஆண்டு கேரள திரைப்பட இயக்குநரான ஜார்ஜ் தாமஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. பின்னர் அவரை பிரிந்து விட்டார்.
மறைவு
புற்றுநோய் காரணமாக அவதிப்பட்ட ஸ்ரீவித்யா 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி காலமானார். அப்போது கூட தன்னுடைய சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை மீரா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் ஸ்ரீவித்யாவுடன் நடித்த அனுபவங்களை மனம் உருகிப் பகிர்ந்து கொண்டார். "ஒரு மலையாளப் படத்தில் நான் ஸ்ரீவித்யா மேடமுடன் நடித்திருந்தேன். அப்போது அவங்களுக்கு மகளாகத்தான் நடித்திருந்தேன். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அவங்க என்னுடைய அம்மா போலத்தான் நடந்துகொண்டாங்க.
அவங்க எவ்வளவு பெரிய நடிகையானாலும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பழகுவாங்க" என்று மீரா நெகிழ்ந்துபோனார். அப்போ அவங்களுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு வரும் நான் அதை பிரம்மிப்பாக பார்ப்பேன் ஏனென்றால் நான் அப்போதுதான் சினிமாவில் என்ட்ரியான சமயம் அதனால் நமக்கு அப்படி எல்லாம் வாய்ப்பு கிடையாது. அவங்க வீட்டில் இருந்து வரும் சாப்பாடை அங்கு இருக்கும் எல்லோருக்கும் தருவாங்க.
துயரம்
"அவங்க என்னுடைய படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அவங்களுக்கு புற்றுநோய் இருந்தது. அந்த நேரத்தில் அவங்க மூச்சு விடுவதற்கே அதிகமாக கஷ்டப்பட்டாங்க. நான் அவங்க தோளில் சாய்ந்து அழுவது போன்ற ஒரு காட்சி இருந்தது. அந்த நேரத்தில் அவங்க தோளில் சாயும்போது அவங்களுடைய மூச்சுக்காற்று வேகம் அவ்வளவு சத்தமாக இருந்தது. அதை பார்ப்பதற்கே பாவமாகவும் இருக்கும்" என்று மீரா கூறினார்.
மறக்க முடியாத அனுபவம்
"அவங்க இன்னொரு படத்தில் என்னை ஞாபக பெண்ணாக நடிக்க சொல்லி இருந்தார். 'மீரா என்னுடன் நடித்திருந்தால் அது நல்லா இருக்கும்' என்று அவர் சொன்னது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது" என்று ஸ்ரீவித்யா பற்றி மீரா கிருஷ்ணன் பேசிய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மீரா கிருஷ்ணனின் மாற்றம்
நடிகை மீரா கிருஷ்ணன் இப்போது உடல் எடையைக் குறைத்து கதாநாயகி போல மாறி இருக்கிறார். 'தமிழின் சரஸ்வதியும்', 'கார்த்திகை தீபம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications