கபாலி, மெர்சல், அறம், தீரன் அதிகாரம் ஒன்று ... டிவியில் பொங்கும் பொங்கல் சினிமாக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் டிவி சேனல்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் வரிசைகட்டுகின்றன. மெர்சல், கபாலி, அறம், கருப்பன் என பல புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

பொங்கல் திருநாள் விடுமுறை இந்த ஆண்டு 13ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 16ஆம் செவ்வாய்கிழமை வரை வருகிறது.

தியேட்டர்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் நான்கு நாட்களும் டிவி சேனல்களில் சினிமாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் களைகட்டுகின்றன.

சன்டிவியில் அறம், கபாலி

சன்டிவியில் அறம், கபாலி

சன் டிவியில் பொங்கல் சிறப்பு திரைப்படமாக அறம், பைரவா ஒளிபரப்பாகிறது. மாட்டுப்பொங்கல் தினத்தில் கருப்பன், ரஜினி நடித்த கபாலி திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

விஜய், ஜெயம் ரவி

விஜய், ஜெயம் ரவி


ஜீ தமிழ் டிவியில் காலையில் மரகத நாணயம், மாலையில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
15ஆம் தேதி காலையில் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, மாலையில் ஜெயம் ரவி நடித்த வனமகன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவி ஸ்பெஷல்

விஜய் டிவி ஸ்பெஷல்

விஜய் டிவியில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் சூட்டோடு சூட்டாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

விஜயகாந்த் விருத்தகிரி

விஜயகாந்த் விருத்தகிரி

விஜயகாந்த் நடித்த விருத்தகிரி திரைப்படம் கேப்டன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகளும் கேப்டன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளன.

சத்தியம் டிவி

சத்தியம் டிவி

சத்தியம் தொலைக்காட்சி சேனலில் பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழர்கள் "அறம் காத்து வாழ்கிறார்களா?" இல்லை "அறம் இழந்து வீழ்கிறார்களா?" என்ற தலைப்பில் ஒரு காரசாரமான பட்டிமன்றம் 14ஆம் தேதி தை திருநாள் அன்று காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ரிமோட்டை கைப்பற்றுங்க மாத்தி மாத்தி படம் பார்த்து பொங்கல் கொண்டாடுங்க.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Zee Tamil announces special line-up for Pongal festival; to premier hit movies Mersal and Vanamagan. SunTV on Kabali, Aram, Karuppan, Vijay TV on Theeran Athikaram Ondru,the joy and celebrations of Pongal.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X