நயன்தாரா- விக்னேஷ் சிவன் சந்தோசமாய் இருக்க காரணமே நான் தான்.. மிர்ச்சி சிவா சொன்ன ரகசியம்
சென்னை: நடிகர் மிர்ச்சி சிவா பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இன்று சந்தோசமாய் இருப்பதற்கு முக்கிய காரணம் நான் தான் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அகில உலக சூப்பர் ஸ்டார் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் மிர்ச்சி சிவா படங்களில் மட்டுமல்ல எந்த பேட்டிகளிலும் கலகலப்பாக பேசுபவர். இவர் நடிக்கும் தமிழ் படங்கள் நார்மலான படங்களைப் போல இல்லாமல் சொன்னா புரியாத ரகளையான தில்லுமுல்லு கலந்த கலவையாகத்தான் இருக்கும். இவருடைய படங்கள் என்றாலே அங்கு காமெடிக்கும், கிருஞ்சிக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும்.

ஒரு திரைப்படம் வெற்றி பெற்று விட்டால் அதை டூப் செய்து, எந்த டாப் நடிகராக இருந்தாலும் அவர்களை கலாய்த்து விடுகிறார். அதனால் ஏன் இவருக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதுபோல ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் பல வருடங்களாக போராடி தன்னுடைய கடின உழைப்பாலும், விட முயற்சியாலும் ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளம் சிவாவுக்கு இல்லை என்றாலும் இவருடைய டைமிங் கவுண்டருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் இருக்கிறார்கள்.
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான சூது கவ்வும் 2 திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது அவர் மிஸ் பண்ணிய படங்கள் பற்றி அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க எனக்கு தான் வாய்ப்பு வந்தது. நான்தான் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.

நான் அந்த படத்தை மறுத்ததால் தான் இன்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சந்தோஷமாக இருக்கிறார்கள்." நானும் ரவுடிதான் படத்துல நான் நடிக்காதது தான் பெரிய பிளஸ். ஏன்னா நான் அந்த படத்துல நடித்திருந்தால்..., நயன்தாரா மேடம் அந்த படத்தில் ஹீரோயினியாக இல்லை என்றால்..,
விக்னேஷ் சிவன் முதலில் அவங்கள பார்த்து இருக்கவே மாட்டாரு, அப்படி பார்க்காமல் இருந்திருந்தால் கல்யாணம் ஆகி இருக்காது.. இன்னைக்கு அவங்க ஹாப்பியா இருக்குறதுக்கு நானும் காரணமே என்று பதிவு செய்து கொள்கிறேன்" என்று கலகலப்பாக சிவா சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications