மோனிஷா மறுபடியும் வருகிறார்.. எந்த சீரியல் தெரியுமா.. அடேங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலில் ஜானு வாக நடித்துவந்த மோனிஷா தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க போகிறார் அதுவும் ஜீ தமிழில் என்ன சீரியலில் தெரியுமா.. அதுதான் சஸ்பென்ஸ்!

இந்த கொரோனா கடந்த ஒரு வருடமாக அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கை முதல் பிரபலங்களின் வாழ்க்கை வரை அனைத்துமே பலருக்கும் மாறி இருக்கிறது.

அந்த மாதிரி தான் கடந்த வருடம் ஊரடங்குக்கு முன்னாடி வரைக்கும் தமிழ் சீரியலில் கலக்கிக் கொண்டிருந்த பல சீரியல்கள் திடீரென முடிக்கப்பட்டது .

இப்போது 2ம் பாகம்

இப்போது 2ம் பாகம்

அதுவும் விஜய் டிவியில் அதிகமான சீரியல்கள் நல்ல டிஆர்பி ரேட்டிங்கில் இருந்தாலும் தொடர்ந்து ஒளிபரப்ப பட முடியாமல் சூட்டிங் எடுக்க முடியாமல் திடீரென முடிக்கப்பட்டது .அதில் அரண்மனைக்கிளி ,நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களும் அடங்கும். ஆனால் லாக் டவுனுக்கு பிறகு மீண்டும் இந்த சீரியலில் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்து விட்டனர் .

ஹீரோயின் வேட்டை

ஹீரோயின் வேட்டை

ஆனால் முதல் பாகத்தில் நடித்து வந்த நடிகைகளை அப்படியே தூக்கி விட்டனர். அதனால் பலர் ரசிகர்கள் இந்த ஹீரோயின்களை தேடிக் கொண்டிருக்கின்றனர் .அப்படித்தான் அரண்மனைக்கிளி சீரியலில் ஜானு வாக ரசிகர்களின் மனதில் பசைபோட ஒட்டிக்கொண்ட மோனிஷா தற்போது மீண்டும் தமிழ் சீரியலில் அறிமுகமாக போகிறார் என்னும் செய்தி வந்துள்ளது.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். இந்த சீரியலில் வீட்டு வேலைக்கார பெண்ணிற்கும் அந்த வீட்டு முதலாளிக்கும் திருமணம் எதிர்பாராத விதமாக நடைபெற்று அதற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்திருக்கின்றனர் .இந்த கதை விஜய் டிவியில் பல சீரியல்களில் வந்து கொண்டிருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தனர் .

மோனிஷா ஜானு

மோனிஷா ஜானு

அதிலும் ஜானு வாக நடிக்கும் மோனிஷா அந்த கேரக்டராகவே அப்படியே மாறி விட்டார். அதனால் அவரை இந்த சீரியலில் திடீரென முடிக்கப்பட்டதும் சீரியல் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி கொண்டிருந்தனர். இவருக்கு சொந்த ஊர் கேரளா திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் வீட்டில் வசித்து வந்த இவர் இந்த சீரியலுக்காக தான் சென்னைக்கு வந்து நடித்துவிட்டு சென்று கொண்டிருந்தார் .

ஊருக்குப் போனவர் வரலை

ஊருக்குப் போனவர் வரலை

ஆனால் திடீரென போன வருடம் போட்ட ஊரடங்கு காரணமாக இவரால் கேரளாவில் இருந்து சென்னைக்கு வர முடியவில்லை .அதனால் இந்த சீரியலில் இவரால் தொடர முடியவில்லை .தற்போது மீண்டும் ஊரடங்கு போட்டிருக்கும் இந்த நேரத்தில் இவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதில் விஜய் டிவியில் இதுவரைக்கும் நடித்து வந்த இவர் தற்போது ஜீ தமிழில் நடிக்க போகிறார் .

பூச்சூட வருகிறார்

பூச்சூட வருகிறார்

அதுவும் பூவே பூச்சூடவா சீரியலில் புது கேரக்டராக நடிக்கப்போகிறார் .இதை அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கின்றனர். அவருடைய ரசிகர்கள் எப்போது அவர் என்ட்ரி ஆவார் என காத்திருக்கின்றனர் .அதுவும் இவர் யாருக்கு பதிலாகவும் இல்லை புது கேரக்டரில் அறிமுகமாக போகிறார் என கூறியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+