இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள்.. அதுவும் முதல் ஐந்து சீரியல்கள் யாருமே எதிர்பார்க்காதது
சென்னை: முன்னணி தொலைக்காட்சிகளின் டிஆர்பி வரிசையில் எந்த சீரியல்கள் கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எப்போதும் போல வழக்கமாக சன் டிவி சீரியல்களே அதிகமான இடங்களை பெற்றிடுகிறது. அதைத் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்கள் பெற்றிருக்கிறது.

9, பாக்கியலட்சுமி சீரியல் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் ஏரியா தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்த நிலையில் அதைக் குறித்து பல திருப்பங்கள் வந்தபோதிலும் இந்த சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 7.85 பெற்றிருக்கிறது.

10, பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் சூப்பர் மார்க்கெட்டை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மூடிவிட்ட பிறகு அவர்கள் மீண்டும் தங்களுடைய பழைய கடையில் வியாபாரத்தை தொடங்கி இருக்கும் நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்தில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி அளவில் 7.04 பெற்றிருக்கிறது.

8, ஆனந்த ராகம் சீரியல்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனின் மனைவி யார் என்ற விறுவிறுப்பான எபிசோடுகள் இந்த வாரத்தில் ஒளிபரப்பானதால் இந்த சீரியல் டிஆர்பியில் 8.08 அளவை பெற்றிருக்கிறது.

7, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடங்கிய இரண்டு வாரங்களிலேயே ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் கிராமபுறம் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 8.36 அளவை பெற்றிருக்கிறது.

6, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் அப்பத்தாவை காணவில்லை என பரபரப்பான எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில், இந்த சீரியல் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. இது கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் 8.95 அளவைப் பெற்றிருக்கிறது.

5, கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அப்பா மகள் பாச போராட்டத்தை பற்றிய இந்த கண்ணான கண்ணே சீரியல் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்தாலும் டிஆர்பி அளவில் 9.33 அளவைப் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

4, பாரதிகண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து இருந்த டி என் ஏ டெஸ்ட் முடிவு வெளியான எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து 9.36 அளவைப் பெற்று நான்காவது இடத்தில் இருந்து வருகிறது.

3, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் துளசியின் மனமாற்றம் சின்ராசுவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் என பரபரப்பான எபிசோடுகளின் காரணமாக இந்த சீரியல் 9.77 அளவைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

2, சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் அனுவை கடத்திய எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இந்த சீரியல் 11.16 அளவைப் பற்றி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

1, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கு அடுத்தடுத்ததாக கடந்த வாரத்தில் அதிகமான பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று கயல் ஜெயித்த எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11.62 அளவைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications