Naam Iruvar Namakku Iruvar Serial: உன்னை ஏன் எனக்கு இவ்ளோ பிடிக்குது...உன் மேல எனக்கு ஏன்...?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் எதிர்பார்த்த வார்த்தைகள் தேவியின் வாயில் இருந்து அருவி மாதிரி வந்து விழுந்து அவனுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைப்பது பார்க்க நன்றாக இருந்தது.
இன்னும் ஓரிரு நாட்களில் தேவிக்கும் மாயனுக்குமான விவாக ரத்து வழக்கின் தீர்ப்பு வர உள்ளது.எப்போதும் விளையாட்டாக இருக்கும் மாயன், இதற்கு இப்போது ஃபேர்வெல் பார்ட்டி வச்சு எல்லாரையும் அழைக்கிறான்.
மாயன் வரலேன்னா ஏதாவது ஏடாகூடமாக செய்துவிடுவான்னு நினைச்சு,எல்லாரும் வந்துடறாங்க.அவங்கவங்களுக்கு தோணினதை பேசறாங்க. மாயனும் தன் பங்குக்கு பேசி அழுது தீர்த்துடறான்.

உசிரு உங்களுக்காக
நான் தெய்வத்தை நேரில் பார்த்ததில்லைங்க. தெய்வமே எனக்கு கொடுத்ததுதான் தேவி என்கிற உயிருள்ள இந்த பொண்ணு.அவங்களுக்காக நான் வாழணும்னு நினைக்கிறேன். இந்த உசிரை அவங்களுக்காவே தரவும் நினைக்கிறேன்.எப்போது இருந்தாலும் இந்த உசிரு உங்களுக்காகத்தேன் போகும்ங்கன்னு மாயனும் பேசிட்டு,அழுதுடறான்.

தேவி இப்போது
இப்போது மேடையில் பேச தேவியை அழைக்கிறார்கள். முதலில் மாயன் ஒரு சார்லி சாப்ளின் மாதிரி, அவன்தான் என்னை சிரிக்க வச்சான்.எல்லாரையும் மகிழ்விச்சான்னு சொல்லிட்டு இறங்கப்போக, அவளை விடவில்லை மாயன். என்னங்க இன்னும் பேசணும்.. அதுவும் மனசில் இருந்து வார்த்தைகள் வரணும்ங்கன்னு கேட்க, மறுபடி பேச ஆரம்பிக்கிறாள் தேவி.

செய்யத்தான் அழைச்சு
மாயன்னு தெரிஞ்சுதான் அவனை காதலிச்சேன்.. ஆனால், அது எனக்குள் தெரிஞ்சப்போ இது என்னோட கேரக்டர் இல்லையேன்னு அவனுக்காக நான் அழுதேன். எனக்கு இப்படி புருஷன் இருக்கணும், அப்படி புருஷன் இருக்கணும்னு எந்தவித கனவும் இருந்ததில்லை.இவன் என்னை ஏமாத்திட்டான்னு அவனை வச்சு செய்யணும்னுதான் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தேன்.ஆனா, அப்புறம்தான் எனக்கு புரிஞ்சுது, அவன் மேலுள்ள காதலால், அவனை பிரிஞ்சு இருக்க முடியாமத்தான் அழைச்சுட்டு வந்திருக்கேன்னு.

எனக்கு வலிச்சுது
அவனை அடிச்சேன்..எனக்கு வலிச்சுது.அவனை கத்தியால் குத்தினேன், அவனை விட எனக்கு காயம் அதிகம் பட்டுச்சு. முதன் முதலில் அவனோட மார்பிலே சாய்ந்தேன். ரொம்ப பாதுகாப்பை உணர்ந்தேன்.முதலின் கை விரலை பிடிச்சவனும் அவன்தான். என்னைத் தொட்டவனும் அவன்தான். எனக்கு ஏன் அவனை இவ்ளோ பிடிச்சு இருக்குன்னு தெரியலை.அவன் மேல எனக்கு எதுக்கு இவ்ளோன்னு சொல்லி கண்ணீர் வீட்டபடியே வெளியில் போயிடறா.












Click it and Unblock the Notifications