Naam iruvar Namakku Iruvar Serial: தாமரை அரவிந்தை விட்டுட்டு வேற கல்யாணமா? செய்துப்பாளா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தன்னை விவாகரத்து செய்த அரவிந்தை மறந்துட்டு வேற கல்யாணம் செய்துக்குவாளா?
தாமரை மீது ரொம்ப லவ்வில் இருந்த அரவிந்த், அம்மாவின் மனம் கோணாமல் நடந்துக்கறேன் பேர்வழி என்று, கோர்ட்டில் தாமரையை விவாகரத்து செய்ய சம்மதிக்கறேன்னு சொல்லிடறான்.
ஆனால், தாமரையை அழைச்சுக்கிட்டு ஏற்கனவே கோர்ட்டுக்கு போயி, தாமரையை விவாக ரத்து செய்வதில் விருப்பம் இல்லை என்று கணவன் மனைவியாக சென்று கை எழுத்து போட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.

அம்மா அரவிந்த்
எப்போதும் முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு இருந்த அம்மாவை உட்கார வச்சு அரவிந்த் மனம் விட்டு பேசறான். அம்மா அப்போதும் தாமரையை எனக்கு பிடிக்கலை. ஆனால், உனக்கு பிடிச்சு இருக்கு. அதனால் நீங்க சேர்ந்து வாழுங்கன்னு சொல்லிட்டுத்தான் நான் தூக்க மாத்திரை சாப்பிட்டேன்.இப்பவும் அதுதான் சொல்றேன்.நீ உன் விருப்பப்படி வாழு அரவிந்த். நான் முமபைக்கு போயி இருந்துக்கறேன்னு சொல்றாங்க.

அம்மா பேசியது
அம்மா பேசிய வார்த்தைகளை மட்டும் வச்சு, இனிமேல் தாமரையுடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து, தாமரையின் ஆசைகளை கேட்டு, ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றி வைக்கிறான். அம்மா விரும்பாத பெண்ணுடன் நம்மால் வாழ முடியாது என்று நினைத்து,அவளை அங்கு இங்கு என்று அழைத்துச் சென்று தாமரையுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

சந்தோஷமாக கோர்ட்டுக்கு
தாமரை அரவிந்துடன் சந்தோஷமாக கோர்ட்டுக்கு கிளம்புகிறாள். அதுதான் அன்னிக்கு விவாகரத்து செய்வதில் விருப்பம் இல்லை என்று கை எழுத்து போட்டுட்டு வந்தாச்சேன்னு சந்தோஷத்தில் மிதக்கிறாள் தாமரை. ஆனால், அங்கு கூண்டில் ஏறி நின்று இடியைத் தூக்கிப் போட்டது போல, தாமரையை டைவர்ஸ் பண்ண சம்மதம்னு சொல்றான்.

தாமரை உடைந்து
உடைந்து போகிறாள் தாமரை, தாமரையின் தாய் மாமா அரவிந்தை அடித்து துவைக்கிறார். தாமரையால் நம்ப முடியவில்லை. முதலில் அத்தைக்கு பிடிக்காமல் போனது. இப்போது அத்தையும் ஏத்துக்கிட்டாங்க., இவர் எதற்கு இப்படி என்கிற கேள்வி மட்டுமே அவளுக்குள் அவளை உறைய வைத்து இருக்கிறது. ஆனால், அரவிந்தின் அம்மா முதலிரவு அன்று தூக்க மாத்திரை குடித்துதான் உடம்பு சரியில்லாமல் போச்சு என்பதை அரவிந்த் யாரிடமும் சொல்லவில்லை.
இப்போது தாமரையின் மாமா விவாகரத்து கிடைத்த நான்கே நாட்களில் ஒரு மாப்பிள்ளையை அழைச்சுக்கிட்டு வர்றார். தாமரையும் உங்கள் விருப்பம் என்று சொல்கிறாள்.
அரவிந்தை விட்டுட்டு வேற கல்யாணம் செய்துக்குவாளா தாமரை?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications