நாஞ்சில் விஜயன் சொன்னது பொய்! படுக்கையிலும் போட்டோ? விஜே வைஷு கேட்ட நான்கு கேள்வி! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான், நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மற்றும் விஜே வைஷ்ணவிக்கு இடையிலான பிரச்னை. சமீபத்தில், நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியாவுடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்ட நிலையில், அதற்குப் பதிலடியாக வைஷ்ணவி ஒரு வீடியோவை வெளியிட்டு, பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

நாஞ்சில் விஜயனின் வீடியோ
சில நாட்களுக்கு முன்பு விஜே வைஷ்ணவி கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில் நாஞ்சில் விஜயன் தன்னுடன் ஏழு வருடமாக குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது தன்னிடம் பேசாமல் தவிர்க்கிறார், தாங்கள் ஒன்றாக வாழ்ந்த போது பாலியல் ரீதியாகவும் நாஞ்சில் விஜயின் தன்னுடன் தொடர்பில் இருந்தார், தன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டு இப்போது தெரிந்த பேசாமல் மறுக்கிறார் என்று கூறியிருந்தார்.
விஜே வைஷ்ணவியின் குற்றச்சாட்டுக்கு நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி மரியா இருவரும் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில், இந்த விவகாரம் காரணமாகத் தாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என்றும், இந்தப் பிரச்னை தங்களுக்குப் பெரிய அவமானத்தைக் கொடுத்துள்ளது என்றும் மரியா தெரிவித்திருந்தார். இந்த வீடியோவுக்குப் பதிலளிக்கும் விதமாக, விஜே வைஷ்ணவி, நாஞ்சில் விஜயனின் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் புள்ளிவிவரமாகப் பதிலளித்து, தனது தரப்பு நியாயத்தைப் பேசியுள்ளார்.
உடைந்துபோன வைஷ்ணவி
வைஷ்ணவி தனது வீடியோவில் பேசிய சில முக்கியமான விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
மாறி மாறிப் பேசிய நாஞ்சில் விஜயன்: "கமிஷனர் அலுவலகம் முன்பு நான் பேட்டி கொடுத்தபோது, என்னை 'யாருன்னே தெரியாது' என்று நாஞ்சில் விஜயன் கூறினார். அதன் பிறகு, 'பழகியிருக்கேன்' என்றும், பின்னர் 'தோழி' என்றும், இப்போது 'சகோதரி' என்றும் கூறுகிறார். இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது என்பதைப் பொதுமக்கள் நீங்கள் தான் யோசிக்க வேண்டும்" என்று வைஷ்ணவி கேள்வி எழுப்பினார்.
பண விவகாரம்
"நான் வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்கிறேன் என்று அவர் பொய் சொல்லுகிறார். அப்படி நான் சம்பாதித்தால், என் பொருளாதார நிலை இவ்வளவு மோசமாக இருக்காது. மூன்று லட்சம் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார். அதற்கு மனசாட்சியும் காதலும் தான் ஆதாரம். நான் உங்களை நம்பிக் கொடுத்திருக்கிறேன்; உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்" என்று வைஷ்ணவி உருக்கமாகக் கூறினார். மேலும், தன்னைத் தெரியாது என்று சொன்ன நாஞ்சில் விஜயனுக்கு, தனது வீடு முதல் மாடியில் இருப்பது எப்படித் தெரியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பப்ளிசிட்டியா
"நான் பப்ளிசிட்டிக்காக இதையெல்லாம் செய்கிறேன் என்று அவர் கூறுகிறார். நாஞ்சில் விஜயன் என்ன ரஜினியா? கமலா? அஜித்தா? விஜயா? இப்போது நான் விஜய் தொலைக்காட்சியில் 'தனம்' சீரியலில் நடித்து வருகிறேன். விஜே வைஷ்ணவி என்றால் அனைவருக்கும் தெரிகிறது. இப்படி இருக்க எனக்கு என்ன பப்ளிசிட்டி தேவை இருக்கிறது?" என்று ஆவேசமாகப் பேசினார்.
தனிப்பட்ட தாக்குதல்கள்
"என்னைத் திருமணம் செய்துகொண்டால், என் முந்தைய கணவர்கள் கேட்க மாட்டார்களா என்று அவர் பேசியிருக்கிறார். எனக்கு எத்தனை கணவர்கள் இருந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தப் பட்டியலை அவர் வெளியிடுவாரா?" என்று வைஷ்ணவி கேட்டார். "நாஞ்சில் விஜயனின் வழக்கறிஞர் என்னைத் தொடர்பு கொண்டு சமரசம் பேசுகிறார் என்று கூறினார். நாஞ்சில் விஜயனும் என்னிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். 'என்னிடத்தில் மன்னிப்பு கேட்காதீர்கள், எனக்குக் கஷ்டமாக உள்ளது. உங்களிடத்தில் கேட்காமல் நான் கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று நான் கூறினேன். நான் உங்களை காதலித்தது உண்மை" என்று வைஷ்ணவி தெரிவித்தார்.
ஆதாரம் இல்லாமல் காதலிக்காதீர்கள்
தன் காதலுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட வைஷ்ணவி, மற்றவர்களுக்கு ஒரு உருக்கமான ஆலோசனையை வழங்கினார். "நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள். எனக்கு ஆதாரம் இல்லை. இனிமேல் யாரையாவது காதலித்தால், புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள், வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள். அந்தரங்கமாக இருந்தாலும் பரவாயில்லை, எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால், என்னைப் போல் தனியாக, யாரும் துணையில்லாமல், கேவலமாக நிற்க வேண்டும்" என்று கண்ணீருடன் வைஷ்ணவி கூறியிருக்கிறார். இதற்கு நாஞ்சில் விஜயனின் அடுத்த பதில் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications