ஜப்பானில் நெப்போலியன் குடும்பத்தினரை சந்தித்த கனிமொழி.. மகன், மருமகனை ஆசீர்வதித்து சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் அரசியல் பிரமுகருமான நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பானில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு அமைச்சர் கனிமொழி நெப்போலியன் குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். அது குறித்து நெப்போலியன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.

இன்று காலையில் நெப்போலியன் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் சார்பாக திருநெல்வேலியில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்ஷயா குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர்களுடைய உடல் நிலை குறித்து யாரும் தவறாக பேசக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Napoleon

அவதூறு வீடியோ

அதோடு சில youtube சேனல்களில் நெப்போலியன் மகன் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்கள் பரப்பி வரும் நிலையில் அந்த வீடியோக்களை டெலிட் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில் நடிகர் நெப்போலியன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

நெப்போலியன் போட்ட போஸ்ட்

அதில் "நான் பெரிதும் மதிக்கக் கூடிய எனது அரசியல் குரு தலைவர் கலைஞர் அவர்களின் மகள் திருமதி கனிமொழி அவர்கள் ஒரு வார காலம் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பானில் இந்திய தூதுவர் திரு சிபி சார்ஜ் அவர்கள் கொடுத்த விருந்தில் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களும் கனிமொழி அவர்களும் நானும் கலந்து கொண்டோம். இன்று ஏப்ரல் 21 திங்கள் காலை திருமதி கனிமொழி அவர்கள் ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து என் மகன் தனுஷையும் மருமகள் அக்ஷயாவையும் வாழ்த்தினார்கள். சில மணி நேரம் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். மகிழ்வோடு மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம். இன்று இரவு அவர் இந்தியா திரும்புகிறார்" என்று கூறியிருக்கிறார்.

கனிமொழி பகிர்ந்த சம்பவம்

அதுபோல இன்னொரு வீடியோவில் கனிமொழி நெப்போலியன் குடும்பத்துடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கலைஞர் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு நர்ஸிடம் தண்ணி கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார் ஆனால் அவருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இவர் கேட்கிறார் என்று அங்கு இருந்த நர்ஸ் அவருக்கு உதட்டில் மட்டும் தண்ணீரை தொட்டு வைத்து இருக்கிறார். அதற்கு அவர் அவங்க கிட்ட உங்க பெயர் என்ன காவிரியா என்று கடைசி நேரத்தில் கூட கிண்டல் செய்து இருக்கிறார் என்று கனிமொழி பேச அதுபோல கலைஞர் குறித்த அனுபவங்களை நெப்போலியனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தசை சிதைவு நோய்

அதுபோல நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா இருவருக்கும் கனிமொழி பரிசுகளும் அளித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார். நெப்போலியன் மகன் தனுஷுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் தான் ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கும் நெப்போலியன் தன்னுடைய மகன் ஆசைப்பட்டதற்காக ஜப்பானுக்கு சுற்றுலா போயிருந்தார். அங்கு அவருக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தார். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய மகனுக்கு திருமணம் நடத்தி வைத்திருக்கும் நெப்போலியன் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். ஒரு சிலர் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். இதற்காகத்தான் இன்று நெப்போலியன் குடும்பத்தினர் சார்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+