ஜப்பானில் தனியாக சைக்கிளில் வலம் வந்த நெப்போலியன் மருமகள்.. மாமியார் செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் மகனுக்கு கடந்த வாரத்தில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் மருமகள் ஜப்பானில் வீதியில் தனியாக சைக்கிள் மிதித்து சென்றிருக்கிறார். அப்போது அவருடைய மாமியார் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் நெப்போலியன் வீட்டில் திருமண செய்திதான் பெரிய அளவில் பேசப்படுகிறது. நடிகர் நெப்போலியன் ஜேயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் தனுஷிற்கு நான்கு வயதிலிருந்து தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட நிலையில் 10 வயதிலிருந்து அவரால் எழுந்து நடக்க முடியாமல் இருக்கிறார்.

napoleon

ஆனால் தன்னுடைய மகனின் சந்தோஷத்திற்காக நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இப்போது 25 வயதாகும் தன்னுடைய மகனுக்கு பிரம்மாண்டமாக ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார்.

நெப்போலியன் மருமகளின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மூலக்கரைப்பட்டி தான். தன்னுடைய குடும்பத்திற்கு மருமகள் தமிழ்நாட்டு பொன்னாகத்தான் வரவேண்டும் என்று அதற்காக வரன் பார்த்த நெப்போலியன் விருப்பப்படியே அவருடைய மருமகள் கிடைத்து விட்டார்.

napoleon

நெப்போலியன் மகனுக்கு திருமணம் செய்ய போகும் செய்தி இணையத்தில் வெளியானதும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வந்தது. அவரால் எழுந்து நடக்கக்கூட முடியாது அவருக்கு எதற்கு திருமணம்?, ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் அழிக்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருந்தது.

ஆனாலும் அதிகமானோர் நெப்போலியன் செய்த செயல் சரிதான் என்று பாராட்டி வந்தனர். நெப்போலியனின் மருமகளான அட்ஷயா தான் ஆசைப்பட்டு தான் தனுஷை திருமணம் செய்து கொண்டேன் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தன்னுடைய மருமகள் எங்கள் வீட்டின் குலசாமி என்று நெப்போலியன் ஒவ்வொரு இடத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

napoleon

தன் மகனின் எங்கேஜ்மெண்டில் தொடங்கி திருமணத்தின் போது கூட பல இடங்களில் என்னுடைய மூத்த மருமகள் தான் எங்க வீட்டின் குல சாமி என்னுடைய மருமகள் அல்ல அவள் என்னுடைய மரு...மகள் என்று சொல்லி வந்தார். இதை நிருபணம் செய்யும் மாதிரி தான் தற்போது ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதில் நெப்போலியன் மருமகள் திருமணத்திற்கு பிறகு ஜப்பானில் தனியாக தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். தனியாக அவர் சைக்கிள் ஓட்டுவதை அவருடைய மாமியார் நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார்.

சின்ன குழந்தையின் சந்தோஷத்தை பார்த்து பெற்றோர் எவ்வளவு சந்தோஷப்படுவார்களோ அதுபோல மருமகள் சைக்கிள் மிதித்து செல்வதை பார்த்து நெப்போலியனின் மனைவி சந்தோஷப்படும் வீடியோ எப்போது இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது. இதை பார்க்கும் பலரும் இதே போல இவர்கள் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+