நாதஸ்வரம் நடிகையின் கணவர் திடீர் உயிரிழப்பு.. திடுக்கிடும் தகவல்.. திருமணமாகி ஒரே வருடத்தில் துயரம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் ராகினி கேரக்டரில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா நடித்து வந்தார்.
இவருக்கு கடந்த வருடம் தான் திருமணம் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று அவருடைய கணவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் இறப்பு எதனால் ஏற்பட்டது என்ற பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சன் டிவியில் 2010 முதல் 2015 வரையில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஆன நாதஸ்வரத்தில் ராகினி கேரக்டரில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா நடித்திருப்பார். அவருக்கு கடந்த வருடம் 2022 ஜனவரி மாதம் தான் எங்கேஜ்மென்ட் முடிவடைந்தது. அதை தொடர்ந்து அவருடைய திருமணம் சில மாதங்கள் கழித்து நடை பெற்றது.
திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு அதிகமான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருப்பார். இந்த நிலையில் தற்போது ஸ்ருதியின் கணவர் உயிரிழந்துள்ளார். அதாவது அரவிந்துக்கு கார்டியாக் அரஸ்ட் என்று சொல்லப்படும் இருதய முடக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த செய்தி சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் ஆகி ஒரு சில மாதங்கள் மட்டும்தான் ஆகி இருக்கும் நிலையில இப்படி ஆகிவிட்டதே என்று பலர் ஸ்ருதி சண்முக பிரியாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் ஸ்ருதி சண்முகப்பிரியா கடந்த வாரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவரோடு எடுத்த ரீல்ஸ் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதில் கூட தன்னுடைய கல்யாண நாளை கணவர் மறந்தது போன்றும், பிறகு தன்னுடைய கல்யாண நாளுக்கு தனக்கு விதவிதமான நகைகள் வாங்கி வந்து கணவர் சர்ப்ரைஸ் பண்ணுவது போன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருந்தார். தற்போது இந்த வீடியோவிற்கும் அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் ஒரு வழக்கறிஞராகவும், பொறியாளர் ஆகவும், உடற்பயிற்சி டிரெயினராகவும் இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு நடிகை ஸ்ருதி கல்லூரி படிக்கும்போதே முதல் சீரியலில் அறிமுகமாகி அதற்குப் பிறகு ரசிகர்களின் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார். பாரதிகண்ணம்மா ,வாணி ராணி, கல்யாண பரிசு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல பிரபலமான சீரியல்களிலும் நடித்துள்ளார்.

எத்தனை சீரியல்களில் இவர் நடித்து வந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த கேரக்டர் என்றால் அது ராகினி தான். நாதஸ்வரம் ராகினி என்னும் கேரக்டர் இவருக்கு நன்றாகவே செட் ஆகிவிட்டது. இப்ப வரைக்கும் பல ரசிகர்கள் இவருடைய உண்மையான பெயரை மறந்து ராகினி என்று அழைத்து வருகிறார்கள். சீரியல் மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் இவர் காலடி எடுத்து வைத்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த கொடி படத்தில் ஸ்ருதி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஹீரோயினான அனுபமா பரமேஸ்வரனின் தங்கையாக நடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications