நவரச நாயகன் கார்த்திக் கேட்ட "சுடுதண்ணீர் அருவி".. சென்னையில் நயன்தாராவின் ஊட்டி அக்கப்போரு: பிரபலம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லை, அதனை சரிசெய்யாமல் ஒன்றாக இருக்கும் பெஃப்சி (Film Employees Federation of South India) அமைப்பைப் பிரிக்க எண்ணுகிறார்கள். எங்களை அழிக்க புதிதாக ஒரு அமைப்பை உருவாக்க எண்ணுகிறார்கள், அதற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "அஜித், விஜய்யை வளர்த்துவிட்டது தமிழ் தயாரிப்பாளர்களும், தமிழ் மக்களும்தானே? இப்போது எதுக்காக, கன்னடம், தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய படங்களை தருகிறார்கள்.

ஆரம்ப காலங்களில் யார் முதுகில் சவாரி செய்தீர்களோ, அவர்களை தள்ளிவிட்டுவிட்டு, பெரிய பெரிய பண முதலைகளிடம் காசுகளை வாங்கிக்கிட்டு படம் செய்து தர ஆரம்பித்துவிட்டார்கள்..
தேனி கிராமம் செட்டிங்
ஸ்டுடியோவை எடுத்துக் கொண்டாலும் பெரிய பெரிய நடிகர்கள், ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் ஷூட்டிங் எடுக்கிறார்கள்.. தேனி கிராமத்தில் உள்ளதைதான் அங்கு செட் போட்டு எடுக்குறாங்க.. பிரைவசிக்காக இப்படி செய்தாலும், மொத்தமாக தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்..
150 நாள் ஹைதராபாத்தில் சூட்டிங் என்றால், அங்குள்ள தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு வேலைகிடைக்காமல் போய்விடுகிறது. அன்று இந்த நடிகர்களுக்கு லைட் பிடித்தவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். பிரைவசி பிரச்சனை என்றால், பாதுகாப்புக்கு ஆட்களை கேட்டு வாங்கலாமே? எம்ஜிஆருக்கு அத்தனை பாப்புலாரிட்டி இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு தரப்பட்டதே? உடனே இன்னொரு மாநிலத்துக்கு போய்விடுவதா?
கேரவன் கலாச்சாரம்
காசியில் நான் கடவுள் படத்தை பாலா எடுத்ததுபோல தேவையிருக்கிறதென்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துக் கொள்ளட்டும்.. இலங்கையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எடுத்துட்டுதானே இருக்காங்க.. தமிழ்நாட்டிலேயே ஷூட்டிங் வைத்து கொள்ளலாம் என்று அஜித், விஜய் போன்றோர்கள் சொன்னால், எத்தனையோ பேருக்கு இங்கு வேலை கிடைக்குமே? கேரவன் தர ஆரம்பித்ததிலிருந்து வந்த சனியன்தான் இதெல்லாம்..
போய் இறங்குவதற்கு தனி விமானம் கேட்கிறார்கள்.. ஒரு தயாரிப்பாளர் காசில் போய் விமானத்தில் அப்படி இறங்கணுமா? 200 கோடி, 250 கோடி காசு வாங்கறீங்களே? தனி விமானத்துக்கான காசையும் நீங்களே கட்ட வேண்டியதுதானே?
சென்னையில் ஊட்டி
ஊட்டிக்கு வர மாட்டேன்னு நயன்தாரா சொல்லவும், சென்னையிலேயே ஊட்டி செட்டிங் போடப்படுகிறது. நவரச நாயகன் கார்த்திக் அருவியில் சுடுதண்ணீர் வேண்டும் என்று கேட்கிறாரு.. ஃபால்ஸ்ஸில் குளிப்பதற்கு, எப்படி சுடுதண்ணீர் ஊற்ற முடியும்? இதெல்லாம் கேலி கூத்தாக இல்லையா? 50 கிலோ மீட்டர் வர முடியாது, மைசூரிலேயே ஃபால்ஸ் செட்டிங் போடுங்க என்கிறார் கார்த்திக். மழையில் நனையும் சீனில்கூட, பன்னீர் கேட்கிறார்கள்.
மலையாளத்தில் மோகன்லாலும், மம்முட்டியும் இங்கே வந்து ஷூட்டிங் எடுக்ககுறாங்களா? தெலுங்கில் பவன் கல்யாண், சிரஞ்சீவி சென்னையில் ஷூட்டிங் எடுக்குறாங்களா? இந்தியில் ஷாருக்கான், சல்மான்கான் இங்கே வந்து ஷூட்டிங் எடுக்குறாங்களா? தமிழ் நடிகர்கள் இனியாவது தமிழ்நாட்டில் ஷூட்டிங் வைக்க வேண்டும்.. தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு அப்போதுதான் வேலை கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications