கர்மா.. எல்லாம் வட்டியுடன் திரும்ப வரும்.. நயன்தாரா போட்ட போஸ்ட்.. தனுஷுக்கு தானா?
சென்னை: நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஸ்டோரி இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. தனுஷின் விவாகரத்தை விமர்சிக்கும் வகையில் நயன்தாரா ஸ்டோரி வைத்திருக்கிறார் என்று இணையத்தில் கமெண்ட்ஸ் குவிக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே தனுஷ் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை பிரிவதை யாரும் எதிர்பார்க்காத வகையில் இணையத்தில் பகிர்ந்திருந்தார் அதற்குப் பிறகு அது பற்றி அதிகமாக பேசப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு விவாகரத்து வழங்கப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் நடிகை நயன்தாரா தனுஷ் பற்றி மூன்று பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷும் நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்து இருவருக்கும் இடையே நல்ல நட்பு காணப்பட்டது.
தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் பணமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நயன்தாரா டான்ஸ் ஆடி இருந்தார். இது பற்றி பல இடங்களில் தனுஷ் பெருமையாக பேசி இருக்கிறார். அதுபோல நயன்தாராவும் ஆரம்பத்தில் பல மேடைகளில் தனுஷ் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
ஆனாலும் இவர்கள் இருவருக்கும் பிரச்சனையை உருவாக்கியது. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன நாட்களை தாண்டி இந்த திரைப்படத்திற்கு சூட்டிங் வைத்து பதினாறு கோடி வரை இழுத்து செலவழித்து விட்டார் என்றும் இதனால் விக்னேஷ் சிவன் மீது தனுஷ் கோபமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்தின் மூலமாகவே காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். அவர்களுடைய திருமணத்தின் போது டாக்குமென்டரி உருவாக்கி இருந்தனர். அதற்கு நானும் ரௌடி தான் திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை பயன்படுத்துவதற்காக தனுஷிடம் என் ஓ சி கேட்டிருந்த நிலையில் தனுஷ் அதற்கான அனுமதி கொடுக்காமல் இரண்டு வருடம் இழுத்தடித்து விட்டதாக நயன்தாரா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதுதான் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. நயன்தாரா சமூக வலைதளத்தில் தனுஷ் பற்றி போஸ்ட் போட்ட போது அமைதியாக இருந்த தனுஷ் பிறகு நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இன்று நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு வைக்கிறார்.
இதுதான் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டா ஸ்டோரியில் தனுஷை மறைமுகமாக நயன்தாரா விமர்சித்துள்ளார் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அதாவது அந்த போஸ்டில், “கர்மா சொல்கிறது.. பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அளிப்பீர்கள் என்றால், அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒரு அது ஒருநாள் உங்களுக்கே வட்டி உடன் திரும்ப வரும்” என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து ஆகி இருக்கும் வேலையில் அதை குறிப்பிட்டு தான் நயன்தாரா இப்படி பதிவு போட்டு இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications