நீயா நானா: மாதம் 10 லட்சம் சம்பள வேலையை விட்டுட்டோம்! பெண் சொன்ன காரணம்.. கோபிநாத் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா" நிகழ்ச்சியில் மார்ச் 31ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரம் "நவீன கார்ப்பரேட் வேலையில் இருந்து வெளியேறி வெவ்வேறு சிறு தொழிலும் விவசாயமும் செய்து கொண்டிருப்பவர்களும், அப்படி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் முடிவு சரியானது அல்ல" என்று சொல்பவர்களும் கலந்து கொண்டு விவாதித்து இருக்கிறார்கள்.
அதில் பலர் பல கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தாலும் ஒரு பெண், "நானும் என்னுடைய கணவரும் மாதம் பத்து லட்சத்துக்கு மேலே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் அதை விட்டுவிட்டு தனியார் நிறுவனத்தில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம்" என்று சொல்லி இருந்த நிலையில் அதற்கு கோபிநாத் கலகலப்பான கேள்வி கேட்டு இருக்கிறார்.

இந்த வார தலைப்பு: அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை வைத்தே ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் நவீன கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து விட்டு அதிலிருந்து வெளியே வந்து சிறு குறு வியாபாரம் மற்றும் விவசாயம் செய்பவர்களும் ஒரு பக்கத்திலும், இவர்கள் எடுத்த முடிவு தவறு இப்படி நிறுவனங்களில் இருந்துவெளியே வந்திருக்கக் கூடது என்று அதை மறுப்பவர்கள் இன்னொரு பக்கமும் அமர்ந்து இரு வேறு அணியாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
ரசிகர்களின் கருத்துக்கள்: இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எபிசோடின் ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து அது குறித்து இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம் பல பேர் இப்போதும் வேலை இல்லாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் கிடைத்த வேலையை வேண்டாம் என்று விட்டு விட்டு வந்து இருக்கிறோம் என்று சொல்லி இருப்பது இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
முதல் ப்ரோமோ: பொதுவாகவே ஒரு பொருள் கிடைப்பதற்கு முன்பு அது பற்றிய தேடலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அந்த பொருள் கிடைத்த பிறகு அது நமக்கு இவ்வளவுதானா? என்ற ஒரு அலுப்பு வந்துவிடும். அதுபோல அதற்கு பிறகு தான் அந்த பொருள் பற்றிய கஷ்டமும் நமக்கு தெரிய வரும். அந்த மாதிரி தான் சிலருக்கு கிடைத்த வேலையால் பல கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறார்கள். அதனாலயே நவீன கார்ப்பரேட் வேலையிலிருந்து வெளியே வந்தவர்கள் அந்த வேலையால் தாங்கள் பட்ட அவஸ்தைகள் குறித்தும் பேசி இருக்கின்றனர்.
கார்ப்பரேட்டில் இருந்து விவசாயம்: அந்த வகையில் இந்த எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில் கார்ப்பரேட் நிறுவனத்திலிருந்து வெளியேறியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு பெண் நானும் என்னுடைய ஹஸ்பண்டும் கார்ப்பரேட் நிறுவனத்தில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போ அதிலிருந்து வெளியே வந்து இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
வேலையில் இருந்து வெளியேறிய காரணம்: அதை தொடர்ந்து இன்னொரு நபர் நானும் ஐடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு ஒரு கட்டத்தில் அது எனக்கு செட்டாகாது என்றதும் அதில் இருந்து போட்டோகிராபராக மாறி இப்போது ஸ்டுடியோ பிசினஸ் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அடுத்ததாக ஒரு பெண் எனக்கு மனதிற்குள் எப்போது நாம அடுத்தவங்களுக்கு சேலரி கொடுக்குற நிலைமைக்கு வருவோம் என்ற சிந்தனை வந்தபோது நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
மாதம் 10 லட்சம் சம்பளம்: அதைத் தொடர்ந்து பேசிய ஒரு பெண் நானும் என்னுடைய ஹஸ்பண்டும் ஐடியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போ மாசம் பத்து லட்சத்துக்கு மேல சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்தோம் என்று சொல்ல, அப்போது இடைமறித்த கோபிநாத் ஒரு மாசத்துக்கு 10 லட்சம் என்றால் வருஷத்துக்கு அஞ்சு ஆறு கோடி ரூபாயாவது வந்திருக்குமே என்று கேட்க அதற்கு அந்தப் பெண் நம்பர் சொல்ல விரும்பல என்று சொல்ல,
அதற்கு கோபிநாத் நாங்க என்ன அந்த பணத்தை சம்பாதிச்சிடவா போறோம்? என்று கலகலப்பாக கலாய்த்து இருக்கிறார். இப்படியாக பலர் தாங்கள் பல்வேறு துறைகளில் அதிகமான சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்த வேலையை விட்டு வெளியே வந்து சுயமாக பிசினஸ் தொடங்கி விட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதிலும் இந்த ப்ரோமோவில் அந்தப் பெண் நான் பத்து லட்சம் சம்பளம் வாங்குனதை விட்டுவிட்டு வந்து விட்டேன் என்று சொன்னதை தான் பலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நாங்கள் பத்தாயிரம் சம்பளம் வாங்குவதற்காக பலருடைய திட்டுகளையும் வாங்கி கஷ்டப்பட வேண்டியது இருக்கு ஆனா இவங்க 10 லட்சம் சம்பளத்தை வேண்டாம் என்று வந்து விட்டார்களே என்று பலர் புலம்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications