நீயா நானாவில் கோபிநாத் போட்டுவிட்ட கோட்.. அம்மா அசிங்கப்படுத்திட்டாங்க! பிரபலம் சொன்ன ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் சில வாரங்களுக்கு முன்பு பொருளாதார போராட்டத்தில் சிக்கி இருக்கும் அண்ணன்கள் மற்றும் அண்ணன்களின் நிலையை பார்த்து கஷ்டப்படும் தங்கைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் அருண் என்ற அண்ணனும் கிரேசி என்று அவருடைய தங்கையும் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது கிரேசியின் ஆசைக்காக அவருடைய அண்ணனுக்கு கோபிநாத் தான் போட்டு இருந்த கோட்டை கழட்டி போட்டு விட்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பிரபல யூட்யூப் ஒன்றுக்கு கிரேசி மற்றும் அருண் பேட்டி கொடுத்திருக்கின்றனர்.

அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அதுவரைக்கும் இல்லாத பெயரும் புகழையும் தாங்கள் அடைந்திருப்பதாக பலர் பேட்டிகளில் கலந்து கொண்டு பேசியிருக்கின்றனர். அந்த மாதிரி தான் இப்போது கூட கடந்த சில வாரங்களுக்கு முன்பு அண்ணன்கள் மற்றும் தங்கைகள் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த அருண் மற்றும் கிரேசி பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் கஷ்டப்படும் அண்ணன்கள் அவர்களின் கஷ்டத்தை பார்த்து பரிதாபம் கொள்ளும் தங்கைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் பல தங்கைகள் தங்களுடைய அண்ணன் தங்களுக்கு செய்யும் தியாகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய கிரேசி என்ற பெண் தன்னுடைய அண்ணன் தனக்காக பல விஷயங்களை செய்திருக்கிறார்.
அப்பா இறந்த பிறகு என்னுடைய அண்ணன் தான் எனக்கு அப்பாவாக மாறிவிட்டார். எனக்கு என்னுடைய திருமணத்தை செய்து வைத்தார். வீட்டில் அவருடைய வருமானத்தில் தான் எல்லாமே செய்து கொண்டிருக்கிறார். நான் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கோபிநாத் அவரிடம் நீங்கள் உங்கள் அண்ணன் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க,
அதற்கு என்னுடைய அண்ணன் ராஜா போல இருக்கணும். அவர் நல்ல டிரஸ் போட்டு நான் பார்த்ததே கிடையாது. உங்களைப் போல கோட் போடணும் என்று சொல்ல, உடனே கோபிநாத் தான் போட்டு இருந்த கோட்டை கழட்டி கிரேசியின் அண்ணன் அருணுக்கு போட்டுவிட்டு இருந்தார். இந்த ப்ரோமோ இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அது குறித்து பேசிய அருண் கோபிநாத் சார் போட்ட கோட்டை கொண்டு நான் வீட்டில் அம்மாவிடம் காட்டினேன். அதை பார்த்ததும் இது யாரு தங்கச்சி மாப்பிள்ளையோட தா என்று கேட்டார். நான் அதற்கு இல்லம்மா விஜய் டிவியில் கோபிநாத் போட்டு விட்டார் என்று சொன்னேன். அதற்கு அவர் நம்பவில்லை. காரணம் நாங்க எப்பவும் இப்படித்தான் அப்பா அம்மாவை ஏதாவது பிராங்க் பண்ணுவோம். அப்படி தான் இப்பவும் பண்ணுகிறோம் என்று நினைத்துவிட்டார்.
உடனே நான் அந்த கோட்டை கழட்டி தனியா வைத்து விட்டேன். பிறகு நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு தான் அம்மா நம்புனார். நாங்க நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது யாருக்குமே தெரியாது. அதனால் கோபிநாத் போட்டு விட்ட கோட்டை அம்மா நம்பவில்லை. அதைத்தொடர்ந்து பேசிய கிரேசி கூறுகையில் நான் கோபிநாத் சார் இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கவே இல்ல.

நான் என்னுடைய ஆசையை தான் சொன்னேன். ஆனால் அவர் உடனே தான் போட்டு இருந்த கோட்டை கழட்டி அண்ணனுக்கு போட்டு விட்டு அழகு பார்த்தார். அந்த கோட்டை நாங்க பத்திரமா வச்சி இருக்கோம் என்று கூறியிருக்கிறார். அதோடு எங்க அப்பா ஆக்சிடெண்ட்ல தான் இறந்து போனாங்க. ஆக்சிடென்ட் ஆகி ரோட்டில் விழுந்து கிடந்த நேரத்தில் யாருமே அவருக்கு ஹெல்ப் பண்ண வில்லை.
யாராவது ஒருத்தர் பார்த்து அவரை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தால் இன்று எங்க அப்பா உயிரோடு இருந்திருப்பார். அதனால தயவு செய்து யாரும் ஆக்சிடென்ட் ஆகி ரோட்டில் விழுந்து இருந்தா கண்டுக்காம போகாதீங்க எங்களை போல அவங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும் என்று கண்ணீரோடு வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications