நீயா நானா: 15 வயதிலிருந்து நடக்கும் வேதனை! கோபிநாத் கேட்ட கேள்வி.. கண்ணீர் சிந்திய பெண்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜூலை 7ஆம் தேதிக்கான எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரம் "குடும்பத்திற்காக தனி ஆளாக உழைக்கும் பெண்களும் அவர்களுடைய குடும்பத்தினரும்" கலந்து கொண்டு விவாதித்து இருக்கிறார்கள். அப்போது ஒரு பெண் தான் 15 வயதிலிருந்து தனி ஆளாக வேலை செய்து வருவது குறித்து பேசி கண் கலங்கி இருக்கிறார்.
10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. சில வாரங்களில் கலகலப்பான காட்சிகள் இருந்தாலும், சில வாரங்களில் பலரையும் கண்கலங்க வைக்கும் உணர்வு பூர்வமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரத்தில் இளமையாக இருக்க விரும்பும் மாமியார்களும் அவர்களுடைய மருமகள்களும் கலந்து கொண்டு கலகலப்பாக விவாதித்து இருந்தனர். அதில் பல மாமியார்கள் தாங்கள் இளமையாக இருக்க விரும்புவது குறித்தும் தன்னுடைய குடும்பத்தினர் தங்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பேசி இருந்தனர். அதே நேரத்தில் இந்த மாமியார்களின் தொல்லை குறித்து மருமகள்கள் தங்களுடைய வேதனைகளையும் பகிர்ந்திருந்தார்கள்.
அதைத்தொடர்ந்து இந்த வாரத்தில் தனி ஆளாக குடும்பத்திற்காக வேலை செய்யும் பெண்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக பல வீடுகளில் ஆண்கள் பொறுப்பில்லாமல் இருப்பதால் பெண்கள் குடும்ப சுமையை தலையில் தூக்கி சுமக்கும் நிலை ஏற்படுகிறது. தன்னுடைய பெற்றோருக்காகவும் தன்னோடு பிறந்தவர்களுக்காகவும் தனி ஆளாக பல பெண்கள் பல போராட்டங்களை தாண்டி வேலை பார்த்து வருகிறார்கள். அதிலும் ஒரு சிலருக்கு சொற்ப வருமானம் இருந்தாலும் அந்த வருமானத்தை வைத்து தங்களுடைய குடும்பத்தை ஓட்ட வேண்டிய நிலை இருக்கிறது.
வீட்டில் குடும்ப தலைவன் சரியில்லாத போது பல பெண்கள் தனி ஆளாக வேலைக்கு போய் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. சில வீட்டில் கூடப்பிறந்த ஆண்கள் பொறுப்பாக இல்லாததால் பல சகோதரிகள் தங்களுடைய திருமண கனவுகளை மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்திற்காக உழைத்து ஓடாக தேய்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தனி ஆளாக குடும்பத்தை தாங்குவதற்காக பல கஷ்டங்களை தாண்டி வேலை பார்க்கும் பெண்கள் தாங்கள் வேலை பார்ப்பதால் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் உடல் நல பிரச்சனைகள் குறித்து கண்கலங்க பேசி இருக்கிறார்கள். இதுவெல்லாம் தெரிந்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை எங்களுடைய மகளின் சம்பளத்தை நம்பி தான் எங்களுடைய குடும்பமே இருக்கிறது என்று அவர்களுடைய பெற்றோர்கள் எதிர்த்தரப்பில் பேசியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஜூலை ஏழாம் தேதிக்கான எபிசோடின் மூன்றாவது ப்ரோமோவில் ஒரு பெண்ணிடம் கோபிநாத் நீங்க எத்தனை வருடமா வேலை பார்த்துகிட்டு இருக்கீங்க என்று கேட்க, அந்த பெண் நான் ஒன்பது வருஷமா வேலை பார்த்துகிட்டு இருக்கேன் சார், நான் வேலை பார்க்கும் நூலாலையில் செருப்பு போட்டுட்டு போகக்கூடாது அதனால் செருப்பு இல்லாமல் நின்று வேலை பார்த்துக் கொண்டே இருப்பதால் ஒரு வருடத்திற்குள்ளே எனக்கு காலில் வெரிகோஸ் என்ற நோய் வந்து என்னுடைய நரம்புகள் சுருட்டை சுருட்டையாக சுருண்டு விட்டது.
ஆனாலும் வேறு வழியில்லாமல் நான் இன்றும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பெண் கண்கலங்க சொல்ல எதிர் தரப்பில் இருந்த அவருடைய அம்மாவிடம், இந்த புள்ள வேலை பார்த்துட்டு நைட்டு வந்த பிறகு அந்த பிள்ளை காலை பாக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கோபிநாத் கேட்க, அதற்கு அந்த பெண்ணின் அம்மா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும் சார் என்று சொல்ல கோபிநாத் அப்போ இந்த ஒரு பிள்ளையின் சம்பாத்தியம் தான் உங்களுக்கு இருக்கா? என்று கேட்கிறார்.
அதற்கு அந்தப் பெண்ணின் அம்மா, ஆமா சார் எங்களுக்கு வேற வழி இல்ல என் பிள்ளை தான் எங்களுக்கு 15 வயசில் இருந்தே வேலை செஞ்சு குடும்பத்தை காப்பாத்துறா என்று கண் கலங்கி இருக்கிறார். இந்த ப்ரோமோ பார்க்கும் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. இந்த ப்ரோமோவிற்கு கீழே பல பெண்கள் தங்களுடைய வலிகளை பகிர்ந்து வருகிறார்கள்.
ஒரு சில ஆண்கள் பொறுப்பாக தன்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் செய்யும் அலட்சியம், தவறுகளால் பல பெண்கள் இந்த மாதிரி வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி சொல்லப்படாத வலி பல பெண்களின் மனதிற்குள் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications