நீயா நானா: கோபிநாத்தையே அடிச்சிடுவேன் என்று சொன்ன பெண்.. ஆடி போன அரங்கம்.. இப்படி பண்ணலாமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜூன் 22 ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் பைக் மற்றும் காரை நண்பனைப் போல பார்க்கும் நபர்களும் அவர்களை விமர்சிக்கும் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பைக் மீது அதிகமான அன்பு வைத்த பெண் ஒருவர் கோபிநாத்தை அடித்து விடுவேன் என்று பேசிய ப்ரோமோ அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்து வாரத்தில் கூட திருமணத்தில் மணமகள் வீட்டில் தான் அதிகமாக எதிர்பார்ப்பு வைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் மணமகன் வீட்டார்களும் அதற்கு பதில் சொல்லும் இளம் பெண்களும் கலந்து கொண்டனர். அதில் பல பெண்கள் தாங்கள் எந்த மாதிரி மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறோம் என்பது குறித்து பேசி இருந்தனர்.

அதுபோல எதிர் தரப்பில் இருந்தவர்கள் பெண்கள் வீட்டில் அதிகமான எதிர்பார்ப்பு வைப்பதால் தான் எங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்று குற்றம் சாட்ட, அதற்கு இளம்பெண்கள் இப்போதுள்ள ஆண்களை விடவும் அவர்களுடைய பெற்றோர்கள் தான் அதிகமாக எதிர்பார்ப்புகள் வைக்கிறார்கள். அதனால் தான் பல பெண்களை வேண்டாம் என்று இவர்கள் ரிஜிட் செய்வதால் 30 வயதுக்கு மேலே பல ஆண்களுக்கு திருமணமாகாமல் இருக்கிறது என்று கூறி வந்தனர்.
அதுபோல அதற்கு முந்தைய வாரத்தில் அமானுஷ்ய சக்தியை நம்புபவர்களும் அதை மறுப்பவர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும் இப்படி சுவாரஸ்யமான தலைப்புகளில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்தில் பைக், கார்களை நண்பர்கள் போல பார்ப்பவர்களும் அதை விமர்சிக்கும் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தாரும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றிருக்கிறது.
பொதுவாக பலர் தங்களுடைய பைக் மற்றும் கார் மீது அதிகமான அன்பு வைத்திருப்பதை பார்க்க முடியும். அதை யாராவது லேசாக கிறுக்கிவிட்டால் கூட சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு கோபம் சுள்ளென்று வந்துவிடும். அதுபோல வாகனங்களை போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தாமல் அதன் மீது அதிகமாக அன்புவைத்திருப்பதை பார்த்திருப்போம்.
அவர்களிடம் அந்த வாகனங்களை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். அப்படியே இன்னொருவர் அந்த வண்டியை எடுத்து விட்டால் அவ்வளவுதான். அந்த அளவிற்கு பிரச்சனை செய்து விடுவார்கள். அதிலும் ஒரு சில வீட்டில் தன்னுடைய கணவர் தன்னைவிட அவருடைய பைக் அல்லது கார் மீது அதிகமாக அன்பு வைத்திருக்கிறார் என்று பல பெண்கள் பொறாமைப்பட்டதும் உண்டு. அதுதான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் அம்பலமாகி இருக்கிறது.
தற்போது வெளியான ப்ரோமோக்களில் பைக் மற்றும் கார் மீது அதிகமான அன்பு வைத்திருக்கும் நபர்களால் தாங்கள் படும் கஷ்டங்கள் குறித்து பலர் தங்களுடைய வேதனைகளை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல தங்களுடைய அன்பையும் பைக் காதலர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
அதில் ஒரு பெண் தன்னுடைய பைக்கை எந்த இடத்திலும் யாரும் தொட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கோபிநாத் அந்த பைக் கண்ணாடியை அங்கேயும் இங்கேயும் ஆட்டி நீங்கள் பைக்கை பார்க் வந்திருக்கும் இடத்தில் இப்படி எல்லாம் செய்வார்களே என்ன பண்ணுவீங்க? என்று கேட்க, அதற்கு கோபமான அந்த பெண் கூப்பிட்டு வச்சு டக்குனு அடிச்சிடுவேன் என்று சொன்னதும் பயந்து போன கோபிநாத் அங்கிருந்து அம்மாடி நான் போறேன் என்று கிளம்பி ஓடுகிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications