நீயா நானா: இங்க என்ன அவார்டா கொடுக்குறாங்க? கோபிநாத் கேட்ட கேள்வி.. பெண் கொடுத்த பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜூன் 30-ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரம் இளமையாக இருக்கும் மாமியார்களும் அவர்களுடைய மருமகள்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.
பொதுவாக நீயா நானா நிகழ்ச்சியில் சில நேரங்களில் கலகலப்பான காட்சிகளும் சில நேரங்களில் சமூக சிந்தனை உள்ள எபிசோடு விவாதங்களும் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளின் இருந்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் கூட கலகலப்பான விவாதம் நடைபெற இருக்கிறது.

இந்த வாரத்தில் இளமையாக இருப்பதாக நினைத்துக் கொள்வதால் மாமியார்களும், இவர்களால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லும் மருமகள்களும் விவாதிக்கிறார்கள். அதில் பல மாமியார்கள் நாங்கள் எப்போதும் இளமையாகத்தான் இருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைக் கேட்டு கோபிநாத் கலாய்த்து விட்டிருக்கிறார்.
அதுபோல இந்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மாமியார்களுக்கு மருமகள்கள் அவார்ட் கொடுக்கிற மாதிரி ஒரு டாஸ்க் வைத்திருக்கிறார்கள். அதாவது நீயா நானா அரங்கத்தில் ஒரு மேஜை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பல டீ கப் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பல வாசகங்கள் எழுதி இருக்கிறது. அதில் தங்களுடைய மாமியாரின் கேரக்டருக்கு கப்பில் எழுதி இருக்கும் வாசகத்தில் எது பொருந்துகிறதோ அதை கொடுக்க வேண்டும் என்று கோபிநாத் கூறி இருக்கிறார்.
இதில் ஒரு பெண் தன்னுடைய மாமியாருக்கு ஓவர் பாசம் உடம்புக்கு ஆகாது என்று ஒரு கப்பை எடுத்து கொடுக்க, அதை பார்த்த கோபிநாத் ஏம்மா இந்த கப்பை தேர்ந்தெடுத்தீங்க என்று கேட்க, ஆமா சார் எங்க மாமியார் எப்ப பார்த்தாலும் எதையாவது செய்ய சொல்லிட்டே இருக்கிறார். தலை முடிக்காக அதை செய் இதை செய் என்று சொல்லுறாங்க, அதுபோல இன்னைக்கு காலையில் உன் கூட சில விஷயங்களை பேசிக்கிட்டே இருந்தாங்க. அதையெல்லாம் நம்மளால செய்ய முடியாது. அதனால் ஓவர் பாசம் வேண்டாம் என்று அந்த மருமகள் சொல்லி இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து வந்த மருமகள் கிரின்ச் பதுமை என்ற கப்பை எடுத்திருக்கிறார். அதை வாங்குவதற்காக அவருடைய மாமியார் நடந்து வருவதை பார்த்து கோபிநாத் இங்கே என்ன அவார்ட்டா கொடுக்கிறாங்க? இப்படி ஆடி அசைந்து வரீங்க என்று கேட்க, அதற்கு அந்த மாமியார் என்னுடைய மருமகள் கல்யாணத்திற்கு பிறகு அவள் கையால் முதல் முதல்ல இதுதான் தாரா அத வாங்குறதுக்கு தயாரா வர வேண்டாமா? என்று பதிலடி கொடுக்கிறார்.
சரிகமப மேடையில் அப்பா காலில் விழுந்துட்டாரு.. சொந்தக்காரங்க கேட்ட கேள்வி இருக்கே! மனம் திறந்த ஸ்வேதா
அதைத்தொடர்ந்து வந்த மருமகள் அங்கு இருக்கும் கப்பில் எதுவுமே என்னுடைய மாமியாருக்கு செட்டாகாது என்று சொல்ல, இந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்த அவருடைய கணவர் இவர் என்ன கொடுக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமாக இருந்திருக்கிறார்.
இதை பார்த்ததும் கோபிநாத் இங்கு இருப்பதில் எல்லாவற்றையும் பார்த்து உங்க மாமியாருக்கு நீங்க என்ன கொடுக்க போகிறீங்க என்று பார்க்கிறதுக்காக உங்க கணவர் ஆர்வமா இருக்கிறார் என்று சொன்னதும் அங்கிருக்கும் கப்பில் நீங்க யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உங்களுக்கு தெரியும் என்று வசனம் போட்ட கப்பை எடுத்து அந்த மருமகள் தன்னுடைய மாமியாரிடம் கொடுக்க அதை வைத்து கோபிநாத் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். இந்த கலகலப்பான ப்ரோமோ அதிகமான லைக்களை பெற்று வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications