Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயா நானா கோபிநாத்தை வியக்க வைத்த தோள் கொடுத்த காதல்.. இவங்க கிட்ட இருந்து கத்துக்கணும்ப்பா!

நீயா நானா அரங்கத்தில் கணவரோடு சேர்ந்து டிரைவராக வேலை செய்யும் பெண்ணின் காதல் கதையை கேட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் என் காதலால் வாழ்வில் உணர்ந்தேன் என்று ஒரு தம்பதி பேசியிருக்கின்றனர்.

சில இக்கட்டான சூழ்நிலைகளில் என்னை ஏன் விட்டு செல்லவில்லை என்று கணவர் கேட்ட கேள்விக்கு மனைவியின் பதிலை கேட்டு கோபிநாத் மட்டுமில்லாமல் மொத்த அரங்கமும் அதிர்ந்து போயிருக்கிறது.

டிரைவர் என்ற காரணத்தால் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று தன்னுடைய அப்பா சொன்னாலும் அந்த பெண் இவர் தான் வேண்டும் என்று அடம்பிடித்து திருமணம் செய்து தற்போது தன்னுடைய கணவருக்காக அவரும் டிரைவராக மாறி இருக்கிறதாக கூறியிருக்கிறார்.

உண்மையான காதல்

உண்மையான காதல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி பல நேரங்களில் சுவாரசியமாகும். சில நேரங்களில் பல நெகிழ்ச்சியான சம்பவங்களை உலகிற்கே தெரியப்படுத்தி விடும் ஒரு மேடையாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சில நெகிழ்வான தருணங்கள் அதிகமாக வைரலாகி விடுகிறது. அந்த மாதிரி தான் காதலர் தினத்தில் கொண்டாடும் வகையில் நீயா நானா அரங்கத்தில் காதலால் உயர்ந்த நபர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒரு தம்பதியின் காதல் கதை பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் காதல் என்கிற பெயரில் பல ஏமாற்று வேலைகளும் சுயநலங்களும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதிரி உண்மையான காதல் மற்றும் பாசத்தைப் பார்த்த பலரும் உச் கொட்டி வருகின்றனர்.

டிரைவர் மாப்பிள்ளை

டிரைவர் மாப்பிள்ளை

அந்த வகையில் அந்தப் பெண்ணின் கணவர் ஒரு டிரைவராக இருந்திருக்கிறார். அவர் பெண்பார்க்கும் போது தான் ஒரு மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்வதாக பொய் கூறி பெண் பார்த்து இருக்கிறார்கள். டிரைவர் என்று சொன்னால் எப்படியும் பெண் தர மாட்டார்கள் என்று இவர் நம்பியதாகவும் கூறி இருக்கிறார். பிறகு அந்த பெண்ணின் அப்பா எப்படியோ இவர் டிரைவர் என்பதை கண்டுபிடித்து விட்டாராம். இதனால் இந்த திருமணம் இனி நடக்காது வேண்டாம் என்று நிறுத்தி விடலாம் என கூறிவிட்டாராம். அப்போது அந்தப் பெண் இல்லை இனி இவர்தான் எனக்கு வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து திருமணமும் செய்து கொண்டாராம். இது குறித்து நீயா நானா நிகழ்ச்சியில் அந்த கணவர் பகிர்ந்து இருக்கிறார்.

டிரைவராக மாறிய மனைவி

டிரைவராக மாறிய மனைவி

உன்னுடைய அப்பா என்னை வேண்டாம் என்று சொல்லும்போது நீ என்னை விட்டு விலகி சென்றிருக்கலாம்.ஆனால் எதற்காக என்னை விட்டு போகாமல் இருந்தாய் என்று அந்த கணவர் கேட்க, அது என்னன்னு தெரியல அவரைப் பார்த்ததும் எனக்கு புடிச்சிருந்துச்சி என்று அந்த பெண் கூறுகிறார். பிறகு இப்போது நீங்க என்ன செய்கிறீர்கள் என்று அந்த கணவரிடம் கோபிநாத் கேட்க இப்போதும் நான் டிரைவராகத்தான் இருக்கிறேன். நான் மட்டுமல்ல என்னுடைய மனைவியும் டிரைவராக தான் இருக்கிறார். ரெண்டு பேரும் டிரைவராக இருக்கிறோம் என்று அனைவருக்கும் ஷாக் கொடுக்கின்றனர். என்ன வண்டி எல்லாம் நீங்க ஓட்டுவீங்க என்று கோபிநாத் கேட்க, நான் எல்லா வண்டியும் ஓட்டுவேன். லாரி முதல் எல்லாமே ஓட்டுவேன் என்று கூறுகிறார்.

டிரைவர் ஆவதற்கு காரணம்

டிரைவர் ஆவதற்கு காரணம்

நாமக்கல் தான் என்னுடைய சொந்த ஊரு நான் ஏழு வருடமாக வண்டி ஓட்டுறேன். திருமணமான புதிதில் அவர் ஒரு ஆட்டோ மட்டும் வைத்திருந்தார். பிறகு நாளாக ஆக சில வண்டி நாங்க வாங்கினோம். எங்க ஊர்ல ஆள் பற்றாக்குறை ஆகிட்டு. வண்டி ஓட்ட ஆள் இல்லாததால் ரெண்டு மூணு வண்டி வண்டி விற்க வேண்டிய நிலைமை ஆகிட்டு. பிறகு எங்க கிட்ட ரெண்டு வண்டி மட்டும் தான் இருந்தது. ஆரம்பத்தில் என்னுடைய கணவர் எனக்கு கார் ஓட்ட கத்து தந்தார். பிறகு அதான் எனக்கே கார் ஓட்ட தெரிகிறதே அப்போ நானும் இனி வண்டி ஓட்டுகிறேன் என்று முடிவு எடுத்து வண்டி ஓட்ட தொடங்கினேன் என்று கூறுகிறார்.

 காதலை நிரூபித்த மனைவி

காதலை நிரூபித்த மனைவி


அப்போது அவருடைய கணவர் நாங்க டிரைவர் மட்டுமில்ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மூட்டை தூக்கி ஆக வேண்டும். ஒரு கோன் மூட்டையோட வெயிட் 60 கிலோ அந்த மூட்டையை நாங்களே ஏற்றி இறக்குவோம். அந்த காலகட்டத்தில் எங்களுக்கு ஆள் இல்லாத போது நான் இருக்கேன் என்று சொல்லி மூட்டை தூக்கிறதுக்கும் நானே வரேன் என்று அவங்க வந்துட்டாங்க .ஒரு நாளைக்கு ஆறு டன் ஏத்துவோம். ஆறு டன் இறக்க வேண்டும். அந்த நேரத்தில் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு நாளைக்கு 24 டன் ஏத்தி இறக்கி இருக்கோம். இப்ப வரைக்கும் நாங்க அதை தான் செஞ்சிட்டு இருக்கோம் என்று இவர் கூறுகிறார் இந்த காதல் கதையை கேட்டு பலரும் அந்த தம்பதியை வாழ்த்தி வருகிறார்கள்.

தோள் கொடுத்த காதல்

தோள் கொடுத்த காதல்

இந்த தம்பதியின் உழைப்பில் உள்ள சந்தோஷம் இவர்கள் இருவர் முகத்திலும் தெரிகிறது. கணவர் கஷ்டப்பட்டால் நான் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். வாய் வார்த்தை மட்டும் ஒன்றும் செய்யாது உழைப்பும் வேண்டும் என்று இந்த சிங்கப்பெண் செய்து கொண்டிருக்கும் முயற்சியை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த மாதிரி ஒற்றுமையோடு காதல் வாழ்க்கை தொடர வேண்டும் என்று பலர் கூறிவரும் நிலையில், யாரெல்லாம் காதலில் தோற்றவர்கள் யாரெல்லாம் உங்களை ஏமாற்றியவர்களோ அவர்களிடம் இவர்கள் இருவரையும் எடுத்துக்காட்டுங்கள். உண்மை காதல் என்றால் என்னவென்று தெரியாதவர்களிடமும் உண்மை காதல் இதுதான் என்று இவர்களுடைய கதையை கூறுங்கள் என்று பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+