நீயா நானாவில் நெகிழ்ந்து போன கோபிநாத்..தாயாக மாறி தந்தை பாடிய தாலாட்டு.. வியக்க வைத்த தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் தனியாக குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளும் அவர்களுடைய குழந்தைகளும் பங்கு பெற்றிருக்கின்றனர்.

அதில் ஒரு தந்தை தன்னுடைய மகனை தூங்க வைக்கும் முறையை கூறி அனைவரையும் சிலிர்க்க வைத்திருக்கிறார்.

Neeya Naana Show April 23th episode preview and fans reaction

பொதுவாக ஒரு குழந்தையை வளர்த்து எடுக்க வேண்டும் என்றால் தாயும் தந்தையும் அதிகமான கஷ்டங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வதில் அவர்களுடைய அன்பை காட்டுகின்றனர். ஆனால் சில நேரங்களில் தனியாக குழந்தைகளை வளர்க்கும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர்.

கோபிநாத்தை பீல் பண்ண வைத்த பெண்..அந்த மாதிரி நேரத்தில்..!? கதாநாயகனாக மாறிய தந்தை
அந்த வகையில் அம்மாக்கள் மட்டுமல்ல அப்பாக்களும் பலர் தங்களுடைய குழந்தைகளை தனியாக வளர்த்து வருகின்றனர். அந்த மாதிரி பட்ட தந்தைகள் பற்றி தான் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் உணர்வு பூர்வமாக எபிசோடு வைத்திருக்கின்றனர். அதில் தனியாக குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளும் அவர்களுடைய குழந்தைகளும் இடம்பெற்று இருக்கின்றனர். தங்களுக்காக தங்களுடைய தந்தைகள் செய்யும் தியாகங்களை பற்றி பலர் இந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசி இருக்கின்றனர்.

Neeya Naana Show April 23th episode preview and fans reaction

தந்தை என்பவர் வெளியே கரடு முரடாக கோபத்தை காட்டிக் கொண்டிருந்தாலும் தன்னுடைய குழந்தைகளின் சந்தோஷத்திற்காகவும், தேவைக்காகவும் அவர்களும் கஷ்டங்களும் வேதனைகளும் பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட வேதனைகளை புரிந்து கொண்ட குழந்தைகள் கிடைப்பது அபூர்வம் தான். அப்படித்தான் பலர் நீயா நானா நிகழ்ச்சியில் பேசி இருக்கின்றனர்.

அந்த வகையில் ஒரு தந்தையிடம் கோபிநாத் உங்களுடைய மகனை நீங்க எப்படி தூங்க வைப்பீங்க என்று கேட்க, அதற்கு ஆரம்பத்தில் இருந்தே நானும் என்னுடைய மகனும் ஒன்றாக டிவி பார்ப்போம். இல்லை என்றால் பாட்டு பாடுவோம். ஏதாவது விளையாடிக் கொண்டிருப்போம் நன்றாக டயர்டு ஆவது வரைக்கும் இருப்போம். பிறகு அப்படியே தூங்கி விடுவோம் என்று கூறி இருக்கிறார். அப்படி என்றால் என்ன பாட்டு பாடுவீங்க என்று கேட்க, இருவரும் அரங்கத்திலே பாட்டுப் பாடி இருக்கின்றனர்.

Neeya Naana Show April 23th episode preview and fans reaction

அந்த தந்தையும் அவருடைய மகனும் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் எனும் பாடலை இருவரும் பாடி இருக்கின்றனர். இந்த பாடலை இவர்கள் இருவரும் பாடுவதை பார்த்து கோபிநாத் அப்படியே நெகிழ்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுடைய குழந்தைகளை தூங்க வைப்பதற்காக பல தாய்மார்களுக்கு பாட்டு பாட தெரிவதில்லை.

ஆனால் ஒரு தந்தை தன்னுடைய பையனை தூங்க வைப்பதற்காக பாடும் பாட்டை கேட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். இதைத்தான் தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே என்று சொல்வார்களோ என்று கூட பலருக்கும் ஐயம் ஏற்பட்டிருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+