நீயா நானா நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் தானா? தொடர்ந்து ஐந்து முறை கலந்து கொண்ட நபர்.. வெளிவந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் தொடர்ந்து ஐந்து முறை கலந்து கொண்ட நபர் இந்த நிகழ்ச்சி பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

நீயா நானா நிகழ்ச்சியில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி அவர் பல ரகசியங்களையும் உடைத்திருக்கிறார்.

அத்தோடு நீயா நானா நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட் தானா என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது குறித்தும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Neeya naana show script? The person who attended five consecutive times.. the truth that came out

நீயா நானா நிகழ்ச்சி பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. காரணம் சமுதாயத்தில் நடக்கும் பல நிகழ்வுகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஏன் இந்த நிகழ்ச்சியை பலர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதுபோல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் பலர் விருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் ஐந்து முறை கலந்து கொண்ட பழனியப்பன் என்கிற ஒரு நபர் இந்த நிகழ்ச்சியை பற்றி பேசியிருக்கிறார். அவர் ஒரு youtuber ஆகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய யூ டியூப் சேனலில் நான் எப்படி ஐந்து முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று விவரித்து இருக்கிறார். இந்த நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு என்னுடைய வாழ்க்கை அதிகமாக மாறி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் பழனியப்பன் என்கிற நபர் நீயா நானா நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொண்டது பாய்ஸ் வேர்ட்ஸ் கேர்ள் கலாய்த்தல் என்கிற நிகழ்ச்சியில் தானா அது சாலிகிராமத்தில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் சூட்டிங் நடைபெற்றதாம். 2012இல் நான் இதில் கலந்து கொண்டேன் என்று கூறி இருக்கிறார்.

தான் முதல் முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது காலேஜ் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தேன் என்றும் அப்போது நான் தஞ்சாவூரிலிருந்து வந்து கலந்து கொண்டு சென்றிருந்தேன். அப்போது நீயா நானா நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் ஒளிபரப்பானதாம். அதனால் சூட்டிங் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரைக்கும் எடுக்கப்பட்டதாம்.

அடுத்ததாக 2013ஆம் ஆண்டில் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் வைத்து ஒரு ஷோ பண்ண போறோம் என்று நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து இவருக்கு போன் பண்ணினார்களாம். அதில் ஒரு பக்கம் காலேஜ் ஸ்டூடண்ட் மற்றும் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தார்களாம் இந்த நிகழ்ச்சி ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட் பண்ணுனார்களாம்.

அதைத் தொடர்ந்து 2017 மூன்றாவது முறையாக நீயா நானா நிகழ்ச்சியின் சூட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நீயா நானா நிகழ்ச்சியிலிருந்து இவருக்கு போன் செய்தார்களாம். லவ் சம்பந்தமாக பேசப்போகிறோம் என்று சொன்னார்களாம். அப்போது இவருக்கு ஏற்கனவே காதல் பிரேக்கப் ஆன நேரமாக இருந்ததாம் இருந்தாலும் இவரும் கலந்து கொண்டிருக்கிறார்.

அதற்குப் பிறகு இவருக்கு 2018 இல் திருமணம் முடிந்து விட்டதாம். அதற்குப் பிறகு இவருக்கு 2020இல் மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஹிந்தி கேர்ள்ஸ் மற்றும் தமிழ் பாய்ஸ் என நிகழ்ச்சி வைத்திருக்கின்றனர் அதில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறார்.

Neeya naana show script? The person who attended five consecutive times.. the truth that came out

அதைத்தொடர்ந்து 2022 இல் இவரும் இவருடைய மனைவியும் நீயா நானா நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டு இருந்தார்களாம். லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக ஒரு ப்ரோக்ராம் சூட் பண்ணும் போது இவரும் கலந்து கொண்டிருந்தாராம். எத்தனை முறை தான் கலந்து கொண்டு இருந்தாலும் இது ஒரு ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி கிடையாது. அந்த நேரத்தில் நாம என்ன நினைக்கிறோமோ அதைத்தான் அங்கே பேச முடியும்.

நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கும் போது கீழே தெரியும் நம்பருக்கு போன் செய்து நம்முடைய பயோடேட்டாவை அனுப்பி வைத்து விட்டால் நம்மளுடைய ஏஜ்க்கு தகுந்த மாதிரி நிகழ்ச்சி வரும்போது அவர்களே கூப்பிடுவார்கள். அது போல சூட்டிங் எப்போது என்று மட்டும் சொல்வார்களே தவிர நீங்கள் என்னவெல்லாம் பேச போகிறீர்கள் என்பதை பற்றி எல்லாம் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் நான் இத்தனை முறை கலந்து கொண்டிருப்பதை பற்றி சிலர் தொடர்ச்சியாக ஒரே நபர் எத்தனை முறை கலந்து கொண்டிருக்கிறார், இது ஸ்கிரிப்ட் தானா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கண்டிப்பாக இல்லை என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+