8 வீட்டில் வேலை.. இரவு பகலாக தூக்கம் இல்லா உழைப்பு.. நீயா நானாவால்..! மனம் திறந்த பெண்.. இது சாதனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு கிராமத்தில் இருக்கும் சிங்கிள் அம்மாக்கள் மற்றும் நகரத்தில் இருக்கும் சிங்கிள் அம்மாக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதில் நகரத்தில் இருக்கும் சிங்கிள் அம்மாவாக பவானி என்கிற பெண்ணும் கலந்து கொண்டு இருந்தார்.

கணவர் இறப்புக்கு பின் தன்னுடைய இரண்டு குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து தற்போது நல்ல நிலைமையில் இருக்கும் கதையை அவர் கூறியிருந்தார்.
முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று பலரும் சொல்வார்கள் அதுபோலத்தான் எவ்வளவு பெரிய சோகத்தையும், துக்கங்களையும் பலர் தங்களுடைய வாழ்க்கையில் அன்றாடம் சந்தித்து கொண்டிருந்தாலும் தங்களுடைய முயற்சியால் சாதித்து விடுகிறார்கள். அப்படி ஒரு பெண்மணியாகத்தான் நீயா நானா நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு கிராமத்து சிங்கிள் அம்மாக்கள் மற்றும் நகரத்து சிங்கிள் அம்மாக்கள் என்ற தலைப்பில் பவானி என்கிற பெண் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
தன்னுடைய கணவர் இறந்த பிறகு இரண்டு குழந்தைகளை எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு அவர் வளர்த்திருக்கிறார் என்பதை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.அதில் பவானிக்கு திருமணம் முடிந்து அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு அவருடைய கணவர் பெயிண்டராக இருக்கும்போது ஒரு முறை கால் தவறி கீழே விழுந்து கால் உடைந்து விட்டதாம். கால் அடிபட்டு விட்டதால் தன்னால் வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்திருக்கிறார்.
அப்போது இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். அப்போது இரண்டு குழந்தைகளோடு பவானி அனாதையாக மாறி இருந்தாராம். பவானிக்கு அப்பா அம்மா யாரும் கிடையாதாம். ஒரே ஒரு அக்கா மட்டும்தான் இருக்கிறாராம். யாருமே பணம் கொடுத்து உதவும் நிலையில் இல்லாமல் இருந்திருக்கின்றனர்.அதற்குப் பிறகு பவானியின் வாழ்க்கையில் அதிகமான சோகங்களும், கஷ்டங்களும் இருந்திருக்கிறது.

ஆனால் பவானி அதையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டு குழந்தைகளையும் படிக்க வைத்திருக்கிறார். பகலில் 8 வீட்டில் வீட்டு வேலை செய்து விட்டு, இரவு திருமண மண்டபத்தில் தாம்பூலத்தில் அலங்கார பொருட்கள் தயாரித்து கொடுத்து வந்திருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல இந்த வருமானம் போதாது என்று மெஹந்தி போடுவதற்காக படித்து அதையும் செய்திருக்கிறார். பிறகு திருமண மண்டபத்தில் பலூன்கள் வைத்து அலங்காரம் செய்து அதிலும் வருமானம் ஈட்டி இருக்கிறார்.
இரவும் பகலும் வேலை செய்ததால் சரியாக தூக்கம் இல்லாமல் உடல் நல பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அப்போதும் இவர் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பாராம். பகலெல்லாம் வீட்டு வேலை செய்துவிட்டு தன்னுடைய சொந்த வீட்டிற்கு வீட்டு மாடிப்படி கூட ஏற முடியாமல் பல நாட்கள் இருந்திருக்கிறார். அவருடைய குழந்தைகள் தான் அவருக்கு தைலம் தேய்த்து ஆறுதல் கூறுவார்களாம். பிறகு குழந்தைகள் படித்து இப்போது இருவரும் வேலைக்கு சேர்ந்த பிறகு பவானியை வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து பார்த்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் நான் பட்ட கஷ்டங்கள் காரணமாகவே இப்போ என்னுடைய மகன்கள் என்னை ராணி போல வீட்டில் பார்க்கிறார்கள். அப்ப எல்லாம் வீட்டில் தூங்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பேன். இப்போது நிம்மதியாக தூங்குகிறேன். காலை 8:00 மணி வரைக்கும் தூங்குவது எனக்கு பெரிய சாதனையாக இருக்கிறது. நான் நினைத்ததை எல்லாம் என்னுடைய மகன்கள் எனக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்று சோகத்தில் இருக்கும் பல பெண்களுக்கு தைரியம் மூட்டும் விதமாக தன்னுடைய கதையை கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications