ஏன் ஷாம்பு வாங்கக் கூட காசு இல்லையா.. பாலாஜி முருகதாஸை வச்சு செய்த நெட்டிசன்கள்.. பிளாஷ்பேக்
சென்னை: ஷாம்பு வாங்க கூட காசு இல்லாமல் பீர் ஊற்றி குளிக்கிறாரே, பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸை நெட்டிசன்கள் கலாய்த்த சம்பவம் தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். இவர் ஒரு மாடல். தொழிலதிபரும் கூட!. இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான டைசன் எனும் தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்
இவர் கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றார். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டார். அப்போது கடந்து வந்த பாதை எனும் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் அவர் தனது சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பெற்றோர்
அதில் தன்னுடைய பெற்றோர்கள் மது அருந்துபவர்கள். அப்பா இரவு நேரத்தில் நான் தூங்கிக் கொண்டிருந்த போது அடிப்பார். அம்மா ஒரு நாள் கூட எனக்கு சமைத்துக் கொடுத்தது இல்லை. என்னுடைய ஆசிரியைதான் எனக்கு சாப்பாடு வாங்கித் தருவார் என பேசினார். மேலும் பிள்ளைங்கள பாத்துக்க தெரியாதவங்க எதுக்கு குழந்தை பெத்துக்கணும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சிறு வயது என்பது பட்டாம்பூச்சி போல் சிறகடிக்கும் வயது. ஆனால் இவருக்கோ அந்த வயதில் அத்தனை சோகங்கள் என்பதை அறிந்து பிக்பாஸ் போட்டியாளர்களும் நிகழ்ச்சியை பார்த்தவர்களும் கண் கலங்கி வருந்தினர். இந்த நிலையில்தான் பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நீச்சல் குளம்
ஒரு நீச்சல் குளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் குளிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது. இதற்கு நெட்டிசன்கள் பலர் விமர்சனங்களை முன் வைத்தனர். ஒரு பக்கம் பெற்றோர் குடிப்பார்கள் என குற்றம்சாட்டிவிட்டு மறுபக்கம் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது எப்படி என பலர் கேள்வி எழுப்பினர்.

ஷாம்பு வாங்க காசு இல்லை
அதில் சில கமென்ட்டுகளில் "யோக்கியன் #BalajiMurugaDoss ஏழை தாயின் மகன் ..குடிகார பெற்றோரின் மகன் .. பாவம் ஒரு மனுஷன் குளிக்க கூட பாத்ரூம் இல்லாம ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம பீர் ஊத்தி குளிக்கிறாரு பாவம் என விமர்சித்திருந்தார்கள். ஊருக்கு தான் உபதேசம் என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர்.

முதல்வர் ஸ்டாலின்
ஆனால் நேற்றைய தினம் அவர் முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது. ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள்தான் அதிகம் என பதிவு செய்திருந்தார். இவருடைய இந்த ட்வீட்டிற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன.

ஊருக்கு உபதேசம்
அதன் பிறகும் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் குடியால் என்னை போன்றவர்களில் சிலர் அனாதையாகி உள்ளனர். ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தான் டாஸ்மார் கடைகளை மூடச் சொல்கிறேன். மேலும் என்னை தயவு செய்து அரசியலுக்கு இழுக்காதீர்கள். அவ்வாறு இழுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவருடைய பழைய பீர் குளியல் வீடியோ வைரலாகி வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications