எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத குளறுபடி.. இதை கவனித்தீர்களா? சுட்டிக்காட்டும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சில குளறுபடிகள் நடந்திருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

சீரியலில் விறுவிறுப்புகாக புதிய கேரக்டர்கள் அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட தடுமாற்றம் பலரையும் குழப்பம் அடைய வைத்திருக்கிறது.

அதிகமான ரசிகர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு சொதப்பலா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் ஆதரவு

ரசிகர்களின் ஆதரவு

பொதுவாக திரை துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இப்போது உள்ள சூழ்நிலையில் சின்னத்திரை நடிகர்களுக்கும் இருந்து வருகிறது. அதனாலயே பலர் வெள்ளி திரையில் வாய்ப்பு இல்லாததால் டக் என்று சின்ன திரையில் கால்பதித்து விடுகிறார்கள். இங்கே தங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விடுகிறார்கள். அதுவும் குறிப்பிட்ட சேனல்களில் தங்களுக்கு இடம் கிடைத்துவிட்டால் போதும் என்று நினைக்கும் நடிகர்களும் இருக்கின்றனர். ஆனால் சில இயக்குனர்கள் எடுக்கும் சீரியல்களில் இடம் பிடித்தாலே கண்டிப்பாக டாப்பாகி விடலாம் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் உண்மைதான் என்கிற மாதிரி பல நேரங்களில் நிரூபித்து வருகிறார்கள்.

டிஆர்பியில் முன்னிலை

டிஆர்பியில் முன்னிலை

அந்த மாதிரி தான் பல வருடங்களுக்குப் பிறகு சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலில் அதிகமான புது முகங்கள் இருந்தாலும் பலர் பரீட்சையமான நபர்களாக இருக்கின்றனர். இந்த சீரியல் தொடங்கி கிட்டத்தட்ட 275 எபிசோடுகள் கடந்துவிட்ட நிலையில் சன் டிவியில் இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியல் இரண்டாவது இடத்தில் பிடித்திருந்தது.

எதிர்பாராத திருப்பங்கள்

எதிர்பாராத திருப்பங்கள்

ஒவ்வொரு நாளும் இந்த சீரியலில் புது புது திருப்பங்கள் வருகிறது. அதுவும் யாரும் எதிர்பார்க்க முடியாத வகையில் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு அப்பத்தா முதல் முறையாக தன்னுடைய பெயர் பட்டம்மாள் எம் ஏ என்று கூறி இந்த வீட்டின் சொத்தில் தனக்கு 40% ஷேர் இருக்கிறது என்று சொல்லி அனைவரையும் அதிர வைத்திருந்தார். அதற்குப் பிறகு திடீரென அவர் காணாமல் போய்விட்டார். இப்போது மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் அவர் என்ன வேலையை செய்து விட்டு வந்திருக்கிறார் என்று யாராலும் கெஸ் பண்ண முடியாமல் தான் இருந்து வருகின்றது.

ஒரே நபர் இரண்டு கேரக்டர்

ஒரே நபர் இரண்டு கேரக்டர்

இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஏற்கனவே ஒரு செவிலியராக வந்த நடிகை இப்போது மீண்டும் தர்ஷனின் காலேஜ் ப்ரொபஷர் ஆக வந்திருக்கிறார். இந்த இரண்டு போட்டோக்களையும் மெர்ச் செய்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த சீரியலை நாங்கள் ஆக ஓஹோ என்று புகழ்ந்து வருகிறோம். கடைசியில் ஒரே நபரை இரண்டு விதமாக கொண்டு வந்திருக்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்து இருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+