நடிக்கச் சொன்னா போகிற இடமெல்லாம் இப்படியா? விஜய் டிவி சீரியல் நடிகர்களை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மகாசங்கமம் நடக்க இருக்கிறது.
நான்காவது முறையாக நடக்கும் இந்த மகா சங்கமம் இந்த முறை கொடைக்கானலில் நடக்க இருக்கிறது.
சூட்டிங் போன இடத்தில் இந்த சீரியல் நடிகர்கள் போட்டோக்களை எடுத்து குவித்து சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறார்கள்.

மீண்டும் சங்கமம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குடும்பம் தற்போது கொடைக்கானலுக்கு சென்றுள்ளது. இந்த சீரியல்களில் நடிகர்களும் தாங்கள் செல்லும் இடமெல்லாம் கும்பல் கும்பலாக போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டி போட்டு பதிவிட்டு வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் ஆக ஓஹோ என்று புகழ்ந்து வந்தாலும் நெட்டிசன்கள் சிலர் ஏன்பா இப்படி பண்றீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் குழப்பம்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருக்கும் நடிகர்களும், பாக்கியலட்சுமி சீரியலின் இருக்கும் நடிகர்களும் போட்டி போட்டு எடுக்கும் புகைப்படங்களால் யாருக்கு லைக் கொடுப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்களாம். அது மட்டுமல்லாமல் மீண்டும் இணைந்து இருப்பதால் என்ன மாதிரி புது பிரச்சனை வரப்போகுது என்று சிலர் இப்போதே அதை நினைத்து கமெண்ட்களில் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் பண்ணலாமா
அதுவும் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கும் ராதிகாவிற்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று பெரும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் தற்போது கோபிக்கும் ராதிகாவுக்கு திருமணம் முடிந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ராதிகாவும் கோடைகானலுக்கு சென்றுள்ளார். அங்கே பாக்கியலட்சுமியோடு அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன இப்படி எல்லாம் பண்ணலாமா? என்று கலாய்த்து வருகிறார்கள். ஒரு சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த இரண்டு சீரியல் நடிகர்கள் போட்டி போட்டு போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

குவியும் புகைப்படங்கள்
இவர்களுடைய புகைப்படங்களில் அதிகமாக கோபியை மட்டும் காணவில்லை. அதனால் அவருடைய ரசிகர்கள் என்ன ஆச்சு கோபிக்கு அவரை மட்டும் காணவில்லையே என்று தேடி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் மற்றும் முல்லை, ஜீவா, மீனா போன்றவர்களும் இல்லை. அதுபோல பாக்கியலட்சுமி சீரியலின் செழியனையும் காணவில்லை. இதனால் இல்லாதவர்களை எங்கே போனார்கள் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் இந்த சீரியல் நடிகர்களை பாலோ பண்ணும் ரசிகர்கள் கோடைகானலுக்கு செல்லவே வேண்டாம். அங்கே உள்ள அழகை அப்படியே பார்த்துவிடலாம். அவ்வளவு புகைப்படங்கள் குவிந்து வருகிறது என்றும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications