பாரதி கண்ணம்மா சீரியல் பரிதாபங்கள்.. தவறான வழிகாட்டுதல், பொங்கும் ரசிகர்கள்.. ஒரு நியாயம் வேண்டாமா?
சென்னை: நெட்டிசன்களுக்கு அதிகமாக பிடித்த ஒரு சீரியலாக இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலை தற்போது மீண்டும் கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர்.
என்னதான் சீரியலாக இருந்தாலும் இப்படியா வரைமுறை இல்லாமல் ரசிகர்களை தப்பான பாதைக்கு கொண்டு செல்வது என்று கமாண்டுகளில் சமூக வலைத்தளத்தை திக்கு முக்காட வைத்திருக்கிறார்கள்.

ஒரே ஒரு துருப்புச் சீட்டு தான்
பல வருடங்களாகவே ரசிகர்களை விடவும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கலாய்க்கப்படும் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது .டிஎன்ஏ டெஸ்ட் என்ற ஒற்றை துருப்பு சீட்டை வைத்தே இத்தனை வருடங்களாக சீரியலை நகர்த்திவிட்டனர் .தற்போது தான் ஒரு வழியாக பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து கேள்வி கேட்டு நச்சரித்து வந்த டிஎன்ஏ டெஸ்ட் முடிவு வந்திருக்கிறது. அதில் கடைசியில் பாரதியின் குழந்தைகள்தான் ஹேமா மற்றும் லட்சுமி என்பது தெரிந்து விட்டது. இந்த நிலையில் இந்த சீரியலின் விறுவிறுப்புக்காக பல கதைகள் திணிக்கப்பட்டு வருவது பார்க்கும் ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கி வருவதாக பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள்.

ரசிகர்களின் குமுறல்கள்
பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ஒவ்வொரு ப்ரோமோ வெளியாகும் போதெல்லாம் அந்த சீரியலின் ரசிகர்களை விடவும் ஹெட்டர்ஸ் தான் பயங்கரமாக கமாண்டுகளை வெளியிட்டு வருவார்கள். குறிப்பாக டிஎன்ஏ டெஸ்ட் எப்போது என்று ஆரம்பத்தில் கேட்டு வந்த ரசிகர்கள் இப்போது, ஹேமா எப்போது இந்த சீரியலில் வாயை மூடுவார் என்பது கேள்வியாக இருந்து வருகிறது. வாயை திறந்தால் ஒன்று அம்மாவை காணோம் என்று தேடிக் கொண்டிருப்பது, அல்லது இப்போது அப்பாவை காணோம் என்று தேடிக்கொண்டு இருப்பது . 10 பேர் பேசும் வசனத்தை ஒரே குட்டி குழந்தை பேசிக் கொண்டிருப்பது தாங்க முடியவில்லை என்று பலர் குமுறுகின்றனர்.

டாக்டர் இப்படி செய்யலாமா
ஒரு டாக்டராக இருப்பவரே டிஎன்ஏ டெஸ்டுக்காக பல ஏமாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.இவரை கூடவே இருந்து ஏமாற்றும் வெண்பாவை மட்டும் இவர் ஒவ்வொரு முறையும் மன்னித்து மன்னித்து ஏற்றுக் கொள்வாராம். ஆனால் கட்டின மனைவியை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். அதுவும் தப்பே பண்ணவில்லை.இந்த டாக்டருக்கு எத்தனையோ தடவை கண்ணம்மா உதவி செய்தாலும், அப்போதும் தெரியாதாம் என்று ஒரு சிலர் பொங்குகின்றனர். இன்னும் ஒரு சிலர் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக இருக்கும் வெண்பாவும் ஒரு டாக்டர் அவர் அடியாள்களிடம் குழந்தையை கடத்த சொல்லியதும் குழந்தைகளை கடத்திவிட்டு குழந்தையை கடத்தி விட்டோம் என்று அடியால் டாக்டர் டாக்டர் என்று அழைக்கிறார். இது தவறான ஒரு முன்னுதாரணம். டாக்டர் இப்படி அடியாள்கள் வைத்து குழந்தையை கடத்துவது எவ்வளவு பெரிய கேவலமான செயல் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்கொலை நாடகம்
தற்போது இதுக்கெல்லாம் பின்னுக்குத் தள்ளும் வகையாக வெளியாகி இருக்கிறது புது ப்ரோமோ. அதில் ஹேமா ஏற்கனவே ஒருமுறை அப்பாவை கண்டுபிடிக்கிறேன் என்று வீட்டை விட்டு கிளம்பி ஆசிரமத்துக்கு ச சென்றதால் தான் ரவுடிகள் கடத்திக்கொண்டு சென்று பெரும் போராட்டத்திற்கு பிறகு கண்ணம்மா குடும்பத்தோடு சென்று காப்பாற்றி மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். மருத்துவமனையில் இருக்கும் போதும் அப்பா யார் என்று கேட்டதற்கு கண்ணம்மா சொல்லாததால் மீண்டும் தன்னுடைய அப்பாவை யார் என்பதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று மருத்துவமனையில் மொட்டை மாடியில் நின்று கொண்டு தற்கொலை நாடகத்தை தொடங்கி இருக்கிறார்.

இது தவறான முன்னுதாரணம்
குழந்தைகள் இப்படி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவதை சீரியலில் கதையாக வைத்தால் இதை வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளும் நமக்கு ஒன்று தேவை என்றால் இப்படி செய்தால் எல்லோரும் பயந்து விடுவார்கள் என்று தானே நினைக்கும். இப்படியா ஒரு கதை திருப்பத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக லாஜிக் இல்லாத விஷயத்தை சீரியலுக்குள் புகுத்தி அதை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண மக்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் அல்லவா! இதுபோன்ற தவறாக வழிகாட்டும் சீன்களை சேர்த்துக் கொள்ளாமல் இந்த சீரியலின் முதல் பாகத்தை வேறு விதமாக முடித்து இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications