படிக்கும் குழந்தைக்கு கூட தெரியும்! டிஆர்பிக்காக இப்படியா? பாண்டியன் ஸ்டோரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் புது கதையை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சீரியலில் விறுவிறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக கதையில் லாஜிக் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பல குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கின்றனர்.

மீண்டும் பழைய இடத்திலேயே கடையை தொடங்கி இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏன் இதை செய்யவில்லை என்று பல அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.

சூப்பர் மார்க்கெட் பிரச்சனை

சூப்பர் மார்க்கெட் பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு பெற்று பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஆயிரம் எபிசோடுகளையும் தாண்டி விட்டது. இந்த நிலையில் இந்த வாரத்தில் அவர்கள் புதியதாக தொடங்கியிருந்த சூப்பர் மார்க்கெட்டில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் வந்து இது விவசாய இடம் அதனால் இங்கே கமர்சியல் பில்டிங் கட்டக்கூடாது என்று கூறியதால் தங்களுடைய சூப்பர் மார்க்கெட்டில் இருந்த மொத்த பொருள்களையும் ஒரு டெம்போவில் ஏற்றிக்கொண்டு பழைய கடைக்கு வந்து இருக்கின்றனர்.

அந்த டாக்குமெண்ட் எங்கே

அந்த டாக்குமெண்ட் எங்கே

தற்போது ஒளிபரப்பாகி வந்த இந்த பிரமோ தான் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த பில்டிங் கட்டும்போது இப்படித்தான் இவர்களுக்கு பிரச்சனை வந்தது. அப்போது குடும்பத்தோடு சேர்ந்து போராட்டம் செய்து கடைசியில் வெற்றி பெற்று இந்த சூப்பர் மார்க்கெட்டின் திறப்பு விழாவை விமர்சனமாக வைத்திருந்தனர். அப்போது அனைத்து டாக்குமெண்ட்டும் இவர்களிடம் இருந்ததால் தான் இவர்களால் காவல் நிலையத்தில அனைத்தையும் காட்ட முடிந்தது. ஆனால் அதை ஏன் இப்போது கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் காட்டவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

வீடாக மாற்றி இருக்கலாமே

வீடாக மாற்றி இருக்கலாமே

அதுமட்டுமல்லாமல் அவ்ளோ பெரிய சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருள்களை எல்லாம் ஒரு குட்டி மினி டெம்போவில் அள்ளிப்போட்டு கொண்டு சென்றது என்றால் அது பாண்டியன் ஸ்டோர் குடும்பமாகத்தான் இருக்கும், அதே நேரத்தில் அந்த விவசாய இடத்தில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கமர்சியல் பில்டிங் தானே கட்ட கூடாது என்று தானே சொன்னார்கள். அதே இடத்தில் இவர்கள் வீடு இல்லாமல் இருப்பதால் அந்த சூப்பர் மார்க்கெட்டை வீடாக பயன்படுத்திக் கொள்ளலாமே! இது கூட தெரியவில்லையா? என்று சிலர் சீரியல் தரப்பினருக்கு அறிவுரைகளை அனுப்பி இருக்கிறார்கள்.

பொறாமை இருக்குதா

பொறாமை இருக்குதா

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டதாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கே பொறாமை தான் அதிகமாக இருக்கிறது. அதனால் தான் தனி ஆளாகவே நின்று கதிர் அவருடைய ஹோட்டலை பெரிய அளவில் வெற்றி பெற வைத்திருந்தார்.அந்த ஹோட்டலில் கதிரை விட்டிருந்தாலே அதை பெரிய அளவில் கொண்டு வந்திருப்பார். ஆனால் அங்கிருந்து கதிரை மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து மூடை தூக்க வைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய சுயநலம் என்று சீரியல் அணியினரை தாண்டியும் ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை செய்திருக்கலாமே

இதை செய்திருக்கலாமே

அதுபோல கவர்மெண்ட் ஆபிசர் வந்து கடையை மூடிவிட்டால் இவர்களிடம் ஏற்கனவே எல்லா டாக்குமென்ட்டும் இருக்கும் நிலையில் அதை கொண்டு கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயிக்கலாம் அல்லது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் அதை விட்டுவிட்டு கடை போனால் என்ன உயிரா போய்விட்டது என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி வசனம் பேசுகின்றார்கள். பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டும் என்பதற்காக அடிப்படை சிந்தனை கூட இல்லையா? இந்த விஷயத்தை ஒரு பள்ளி குழந்தையிடம் கேட்டால் கூட அது சொல்லிவிடும். தங்களுடைய இடத்தில் பிரச்சனை என்றால் நீதிமன்றத்தை நாடலாம் அல்லது காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என்று ஆனால் இவர்கள் செய்வது ஒவர் கிரஞ்சாக இருக்கிறது என்று சிலர் மீம்ஸ் வெளியீட்டும் கலாய்கிறார்கள். ஆனால் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் சீரியல் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அதை பார்த்து ரசிக்கலாம் தவிர குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று அறிவுரையும் அனுப்பி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+