"பட்டுக் கன்னம் தொட்டு கொள்ள" பாடலில் அந்த விஷயத்தை கவனித்தீர்களா! எஸ்பிபி எஸ்பிபிதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பட்டுக் கன்னம் தொட்டு கொள்ள" பாடலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிரிப்பாரே அது போல் இதுவரை யாரும் சிரித்ததில்லை. அவருடைய குரலுக்கு முன்னால் எந்த பாடகனும் வரமுடியாது என்பதுதான் நிதர்சனம்! பல ஹீரோக்களுக்கு அவர் பாடியுள்ளார் என்பதை அவரே சொன்னால்தான் தெரியும் என்ற அளவுக்கு நடிகருக்கு நடிகர் வித்தியாசத்தை காட்டி பாடுவதில் வல்லவர் எஸ்பிபி!

sp balasubramaniyan

இதுகுறித்து செல்வன் அன்பு கூறியிருப்பதாவது: எஸ்.பி.பி... 'பொட்டு வைத்த முகமோ' பாடல் நான் சிறுவனாக இருக்கும் போது வாரம் மூன்று முறையாவது ரேடியோவில் வந்துவிடும். அப்போதே இந்த பாடல் கவர்ந்துவிடும்.

என் அப்பா நல்ல மூட் என்றால் பாட்டுப் புத்தகக் கூடை எடுத்து வைத்து பாட ஆரம்பித்து விடுவார். அப்போது சிலோன் ரேடியோவில் ஹிட்டான ஒரு பாடல் உண்டு. 'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்...'. அந்தப் பாடலின் மயக்கும் குரல் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் என்கிற பெயரை தினம் தினம் ரேடியோவில் கேட்டுக் கொண்டே பள்ளிக்கு போவோம்.

தெருவழியில் முதல் வீட்டில் சப்தமாக 'உன்னை நான் பார்த்தது' எனக்கேட்டு ஐந்தாவது வீட்டில் 'கம்பன் மகனாக நான் வாழ வேண்டும்...'..இப்படி தோளில் புத்தகப்பையோடு பாட்டு கேட்டுக்கொண்டே பாடல் முடிவதற்குள் பள்ளி வளாகம் வந்து விடும். அந்தபாடலை அப்பா பாடுவதை கேட்டு கேட்டு மனப்பாடமாகி விட்டது.

பாலு என்கிற பாடகர் வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா, உனக்கென்ன மேலே நின்றாய் மூலம் எங்கள் பள்ளிக்கால இளமைக் காலத்தில் ரத்தமும் சதையுமாக கலந்து விட்டதே உண்மை.. ராஜபார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போது 'அந்தி மழை பொழிகிறது' பாட்டு தொடங்கும் போது தியேட்டரில் திடீர் பரபரப்பு.. விசில்.. எஸ்.பி.பி....எ
ஸ்.பி.பி என குரல்கள்...

கண்ணாடி சதுரத்துக்குள் கண்களுக்குக் கீழ் கருவளையத்துடன் முன்னாள் சுருண்டு விழும் முடியுடன் பாடி நடித்தது இத்தனை நாள் குரலால் மயக்கிய எஸ்பி.பி என தெரிந்து கொண்ட தருணம். இவர் தான் எஸ்.பி.பாலசுப்ரமண்யமா? முதன் முதலில் மாமா கேசட் ப்ளேயர் வாங்கி வந்த வேளை அதில் பேசி ரெக்கார்ட் செய்து நம் குரலை நாமே கேட்பது.... நானோ பாடி பதிவு செய்தேன்.

'சங்கீத மேகம்.. தேன் சிந்தும் நேரம்'.. பாலுவின் குரல் லாவண்யம் நமக்கு வராது என உணர்ந்த தருணம். கேரளாவில் இருந்த போது மலையாள நண்பர்கள் ஜமாபந்தியில் பாடிய 'பச்சமலப்பூவு...நீ உச்சிமலைத்தேனு..', முதன்முதல் போன் வாங்கியதும் குருவாயூரப்பனுக்கு நன்றியுடன் 'குருவாயூரப்பா...' பாடலின் ரிங் டோன்...

பாலு...உமது குரலுக்கு அருகே எந்த பாடகனாலும் வர முடியாதையா?..Didi tera dewar deewaanaa...பாட்டின் அந்த குழைவை எந்த பாடகனும் கொடுக்க முடியாது.. பட்டுக்கன்னம் தொட்டுக் கொள்ளும் பாடலின் அந்த சிரிப்புக்காக யூடியூபில் எத்தனை முறை பார்த்திருப்பேன்..

ஒரே பாடலை நீங்கள் பாடியும், யேசுதாஸ் பாடியும்.. உங்கள் குரலின் சுகம் யேசுதாஸால் தரமுடியவில்லை என்பது ஏற்க கஷ்டமாக இருந்த விஷயம்.. "நீல வான ஓடையில்..." நீங்கள்... "நீல வானச்சோலயில்..."- யேசுதாஸ்... அதே போல் நீங்கள் பாடிய பாடலின் சுகம் ஜெயச்சந்திரனாலும் தரமுடியவில்லை...

"நானாக நானில்லை தாயே...." - நீங்கள்.. "ஞானாயி ஞானில்லே தன்யே..." - ஜெயச்சந்திரன்... "இந்தத்தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...." இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+