Padaithalaivan 1st day box office: முதல் நாளிலேயே வசூலில் கலக்கும் சின்ன விஜயகாந்த்.. ஆனால் “இந்த” சம்பவம் தான் செம
சென்னை: நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று "படை தலைவன்" திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பல வருடங்களாக உருவாக்கப்பட்ட படைத்தலைவன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் முதல் நாள் எதிர்பார்த்த அளவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு படை தலைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்காக பல கஷ்டங்களையும் பட்டிருந்தார். பல வருடங்களாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகும் சமயத்தில் கோலிவுட் பல பிரபலங்கள் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். அதோடு ப்ரீ ஷோ பார்த்துவிட்டும் அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டு இருந்தது.

விஜயகாந்த் ஏஐ காட்சிகள்
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படத்தில் ஏஐ வடிவத்தில் விஜயகாந்த்தை கொண்டு வந்திருந்தனர். ஆனால் அது சரியாக இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது. ஆனாலும் விஜயகாந்த் அந்த படத்தில் சில கட்சிகளில் இருக்கிறாரே என்று அவருடைய ரசிகர்கள் அதை கொண்டாடி வந்தனர். ஆனால் படை தலைவன் படத்தில் விஜயகாந்த் தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஆக்ஷன் காட்சிகள்
அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பாராட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல படத்தில் சில பைட்டு சீன்கள் இருக்கிறது. அதில் விஜயகாந்தின் ஆக்ரோஷமான பைட்டை சண்முக பாண்டியன் அப்படியே கண்முன் நிறுத்துகிறார் என்றும் பலரும் பாராட்டி வருகிறார்கள். சினிமாவில் அர்ஜுனுக்கு பிறகு பைட்டில் சண்முகபாண்டியன் இடம் பிடிப்பார் என்றும் பலர் பாராட்டி வருகிறார்கள்.

விஜயகாந்த் ஹிட் பாடல்
அதிலும் ஒரு சண்டைக் காட்சிக்கு "பொட்டு வச்ச தங்க குடம்" என்ற பாடல் வருவது படத்திற்கு மேலும் சிறப்பாக அமைந்திருக்கிறது. சண்முக பாண்டியனின் கண் அசைவுகள் மற்றும் நடிப்புகள் பல இடங்களில் விஜயகாந்த்தை நினைவுபடுத்துகிறது. அதை பார்த்து பலரும் "புலிக்கு பிறந்தது எப்படி பூனையாகுமா?" என்று பாராட்டி வருகிறார்கள். நேற்றில் இருந்து இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு பலரும் பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்திருக்கிறார்கள்.

படை தலைவன் படம் முதல் நாள் வசூல்
இதனால் இந்த படத்திற்கான டிக்கெட் விற்பனையும் சூடு பிடித்திருக்கிறது. முதல் நாள் இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த படத்தில் முதல் நாள் மட்டும் 50 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இன்றும் நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை பார்க்கலாம் என்றும் பல எமோஷனல் காட்சிகள் இருப்பதால் பெண்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. பலி கொடுப்பது, விலங்குகளை சித்திரவதை செய்வது தவறு பல சமூக சிந்தனைகளும் பல இடங்களில் காட்டப்பட்டு இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications