பாண்டியன் ஸ்டோர் 2 தங்கமயில் நிஜ கணவர் இந்த பிரபலம் தானா? அவரே வெளியிட்ட பதிவு.. வீட்டில் விசேஷமாம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சரண்யா துரோடி தன்னுடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதோடு தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கும் நிலையில் அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் வெற்றியை தொடர்ந்து அதில் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார்கள். அதில் தங்கமயில் கேரக்டரில் நடிகை சரண்யா துரோடி நடித்து வருகிறார். இவர் கதாநாயகியா வில்லியா என்று குழம்பும் வகையில் தான் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

இதுவரைக்கும் அவர் பல சீரியல்களில் கதாநாயகியாக தான் நடித்திருக்கிறார் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி", "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் இவருக்கு "நெஞ்சம் மறப்பதில்லை" என்று சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலமாக அவருக்கு சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் உருவாக்கி விட்டனர்.
அந்த சீரியல் முடிவுக்கு பிறகு சன் டிவியில் பெயர் வாங்கிய ரோஜா சீரியலின் தெலுங்கு ஒளிபரப்பில் ஜெமினி சேனலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அதே வருஷத்தில் சன் டிவியில் "ரன்" சீரியலில் தெய்வமகள் சீரியல் கிருஷ்ணாவோடு நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியலும் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

அதுவும் அவர் எதிர்பார்த்த அளவிற்க்கு பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த சரண்யா இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மாமனாரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். அதோடு வீட்டில் எல்லார் பற்றியும் அடிக்கடி போட்டுக் கொடுத்து வீட்டிற்குள் பூகம்பத்தில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
இதனால் இவரை பலரும் கரித்துக் கொட்டிக் கொண்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும், நடிப்பு வேறு என்னுடைய நிஜ வாழ்க்கை வேறு என்று எப்போதும் பேட்டிகளில் சொல்வது போலவே சரண்யா இப்போது நிஜத்திலும் செய்து இருக்கிறார். நேற்று இரவு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட போஸ்ட் தான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.

அதாவது அவருடைய கணவரோடு சரண்யா எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். கழுத்தில் மஞ்சள் தாலியோடு சரண்யா இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கூலாக தன்னுடைய பதிவில் தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு மற்றும் சந்தோஷத்திற்கு எப்போதும் துணையாக இருப்பது என்னுடைய கணவர் தான் என்று தன்னுடைய கணவரை பாராட்டவும் செய்து இருக்கிறார். சரண்யா துரோடிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்ட விஷயம் பலருக்கும் தெரியாமல் இருக்கும் நிலையில் சரண்யா ராகுல் சுதர்சன் என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார்.

ராகுல் சுதர்சன் போட்டோகிராபராகவும், தொழில் முனைவராகவும் இருக்கிறார். அதுபோல பிட்னஸ் மீது அதிக அளவு ஆர்வம் உள்ளவராகவும் இருக்கிறார். சரண்யா துரோடியை மட்டுமல்லாமல் இயற்கை அழகுகளையும் தன்னுடைய கேமராவால் அழகாக புகைப்படமாக எடுத்து நினைவுகளாக மாற்றி இருக்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications