மனதளவில் ஒன்று சேரும் அண்ணன் தம்பிகள்.. பிரிக்க நினைத்து நடக்கும் சதி.. ஜீவா கொடுத்த பதிலடி
சென்னை: முல்லையில் வளைகாப்பிற்கு போக வேண்டும் என்று கண்ணன் கூற கதிர் எடுத்த சட்டையை போட விடாமல் ஐஸ்வர்யா சூழ்ச்சி செய்கிறார்.
ஜீவாவும் மீனாவும் வளைகாப்பு பங்க்ஷனுக்கு போகக்கூடாது என்று ஜனார்த்தனனும் அவருடைய மனைவியும் சேர்ந்து பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஜீவா எடுத்துக் கொடுத்த சட்டையை போடாமல் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் ஒரே கலரில் சட்டை அணிகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 19ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தல்
மீனா ஜீவாவிடம் முல்லையின் வளைகாப்புக்கு போக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருக்க, மூர்த்தி அண்ணன் கோயிலிலே என்கிட்ட பேசலையே அங்க போனா நல்லா இருக்காது என்று ஜீவா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு மீனா மூர்த்தி மாமா பேசலாட்டி என்ன கதிர் வந்து எத்தனை வாட்டி கூப்பிட்டு இருக்கிறாரு, நாம முல்லை மற்றும் கதிர் உடைய சந்தோசத்துக்காக போய் தான் ஆக வேண்டும் என்று ஒருவழியாக ஜீவாவை சமாதானம் செய்கிறார். முதலில் மறுப்பு தெரிவித்த ஜீவா பின்பு போகலாம் என்று சம்மதிக்கிறார்.

அடுத்ததாக ஜனார்த்தனனும், அவருடைய மனைவியும் ஜீவாவும் மீனாவும் வளைகாப்புக்கு போறாங்களா? இல்லையா? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா வந்து முல்லையின் வளைகாப்புக்கு போக போகிறேன் எனக்கு உன்னுடைய பட்டுப் புடவை வேண்டும் என்று அம்மாவிடம் கேட்க ஜனார்த்தனன் அதிர்ச்சி அடைகிறார். மீனாவின் அம்மா திட்டியும் மீனா கேட்காமல் நாங்கள் போய் தான் ஆவோம் என்று கூறிவிட்டு கிளம்பி விடுகிறார்.
அடுத்த ஐஸ்வர்யா நீண்ட நேரம் மேக்கப் செய்து கொண்டிருப்பதை பார்த்து கண்ணன் சீக்கிரம் கிளம்பு ஐசு என்று திட்டுகிறார். பின்பு ஐஸ்வர்யா உங்க அண்ணன் எல்லோருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்து கொடுத்தார். ஆனால் அந்த சட்டையை நான் எங்க வைத்தேன் என்று மறந்துவிட்டேன் என்று கூறுகிறார். கண்ணன் எவ்வளவோ கெஞ்சியும் அந்த சட்டையை கொடுக்காமல் அது மறந்து விட்டது என்று நடித்து வேறொரு சட்டையை எடுத்துக் கொடுக்க மனம் இல்லாமல் அதை கண்ணன் போட்டுக் கொள்கிறார்.

மூர்த்தியும் கண்ணன் போட்டிருக்கும் அதே கலரில் சட்டை போட்டிருக்க கதிர் நான் எடுத்து தந்த சட்டையை போடுங்கள் என்று வற்புறுத்த அதற்கு மூர்த்தி வேண்டாம் நான் இதில் இருக்கிறேன் என்று பிடிவாதமாக கூறியதால் கதிர் போய் சட்டையை மாற்றி அதே கலரில் வந்து விடுகிறார். தொடர்ந்து ஜீவாவும் கதிர் வாங்கி கொடுத்த சட்டையை போடாமல், மூர்த்தி போட்டு இருக்கும் அதே கலர் சட்டையை போட்டுக் கொள்கிறார்.

ஜீவா சட்டையை மாற்றி போடுவதை பார்த்து மீனா கவலையில் இருக்கிறார். பிறகு ஜீவாவிடம் அங்க என்ன நடந்தாலும் நீ அமைதியாக இரு, யாரிடமும் எதுவும் பேசாத என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications