மீனா அப்பா குடும்பத்தில் செய்த பிரச்சனை..கோபத்தில் மூர்த்தி செய்த தப்பான செயல்..கேள்வி கேட்கும் ஜீவா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி மூர்த்தி குடும்பத்துக்கும் ஜீவாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜீவாவிற்கு தெரியாமல் ஜனார்த்தனன் ஒரு நபரிடம் பேசி இருக்கிறார்.

ஜீவாவிற்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என்று பேசினதாக அந்த நபர் மூர்த்தியிடம் போட்டுக் கொடுக்கிறார்.

கோபத்தில் மூர்த்தி இனி ஜீவாவிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அனைவரிடமும் போன் போட்டு சொல்கிறார்.

வருத்தத்தில் தனம்

வருத்தத்தில் தனம்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 1ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் வீட்டில் தனமும் முல்லையும் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இந்த வீட்டில் ஒரு காலத்தில் எவ்வளவு கலகலப்பாக மகிழ்ச்சியாக இருந்தோம். இப்போ இப்படி வெறிச்சோடி போய்விட்டது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு நான் மீனா வீட்டிற்கு சென்ற போது கூட கயிலை பார்க்க முடியாமல் ஆகிவிட்டது. கயல் தூங்கிக் கொண்டிருந்ததால் பார்க்க என்று தனம் வருத்தத்துடன் புலம்பி கொண்டிருக்கிறார்.

சதி செய்யும் மீனாவின் அம்மா

சதி செய்யும் மீனாவின் அம்மா

அப்போது முல்லை நான் வேணும் என்றால் மீனா அக்காவிற்கு போன் பண்ணி பார்க்கிறேன் என்று சொல்ல தனம் ஆரம்பத்தில் தடுக்க ஆனாலும் நான் போன் பண்ணுகிறேன் என்று வீடியோ கால் பண்ணுகிறார். அப்போது ஃபோனை மீனாவின் அம்மா பார்த்து எதற்காக முல்லை போன் பண்ண வேண்டும் என்று வீடியோ காலை கட் பண்ணி விடுகிறார். பிறகு நார்மல் காலில் முல்லை போன் பண்ணி பார்க்க போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது.

 ஜீவாவிற்கு வந்த போன் கால்

ஜீவாவிற்கு வந்த போன் கால்

அடுத்ததாக ஜீவா வீட்டில் மாமனாரோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நபர் போன் பண்ணி மூர்த்திக்கு போன் பண்ணுனேன் அவர் போனை எடுக்கவில்லை. பணம் இருக்கிறது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல, ஜீவா நீங்கள் அண்ணனுக்கு மீண்டும் போனை முயற்சி செய்து அண்ணனிடமே பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறி போனை கட் பண்ணி வைத்து விடுகிறார். அதற்கு ஜனார்த்தனன் எதற்காக இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கீங்க. இனி எங்களுக்கும் அவங்களுக்கும் உறவு இல்லை என்று சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல ஜீவா அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விடுகிறார்.

பிரச்சனையை தொடங்கிய ஜனார்த்தனன்

பிரச்சனையை தொடங்கிய ஜனார்த்தனன்

ஜீவாவின் போனை எடுத்து ஜனார்த்தனன் அந்த நபரிடம் இனி இந்த நம்பருக்கும் மூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பாண்டியன் ஸ்டோருக்கும் இவருக்கும் எந்த உறவும் கிடையாது. இனி எந்த டீலிங் என்றாலும் இந்த நம்பருக்கு போன் பண்ண கூடாது என்று மிரட்டி விட்டு அந்த நம்பரை டெலீட்ம் செய்து விடுகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் கடைக்கு செல்லும் அந்த நபர் மூர்த்தியிடம் இதை பற்றி சொல்லி ஜீவாவிற்கும் உங்களுக்கும் எதுவும் பிரச்சனையா? ஜீவா எனக்கு இனி போன் பண்ண கூடாது என்று சொல்லிவிட்டார் என்று போட்டு கொடுக்க மூர்த்தி கோபம் ஆகிறார்.

வருத்தப்படும் ஜீவா

வருத்தப்படும் ஜீவா


கதிர் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் மூர்த்தி அவனுக்கு மட்டும் தான் கோபப்பட தெரியுமா எனக்கும் தெரியும் என்று அனைவருக்கும் போன் போட்டு இனி ஜீவாவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அடுத்ததாக ஜீவாவின் வீட்டில் மீனாவும் ஜீவாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் கயல் பாப்பாவை ஸ்கூலில் சேர்த்து விட்டாச்சு. நீங்க ஸ்கூலுக்கு கூட்டிட்டு மட்டும் போயிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார். வீட்டு வாசலில் நின்று மீனாவிடம் ஜீவா எதற்காக இப்படி நம்மிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாம ஸ்கூலில் சேர்த்து விட்டு போயிட்டு வாங்கன்னு மட்டும் சொல்றாங்க என்று வருத்தத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+