குழப்பத்தால் குடும்பத்தை பிரித்த கண்ணன் கடைசியாக செய்த செயல்.. மீண்டும் ஜீவாவிற்கு கிடைத்த அதிர்ச்சி
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்த கண்ணன் ஐஸ்வர்யாவால் புது முடிவு எடுக்கிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனக்கு நடந்த அவமானங்களை பற்றி பேசி மனம் உடைந்து ஜீவா அனைவர் முன்னிலையிலும் கேள்வி கேட்கிறார்.
கண்ணன் செய்த தவறால் கண்ணனை மூர்த்தி அடித்ததால் ஐஸ்வர்யா கண்ணனை தனியாக அழைத்துக் கொண்டு செல்கிறார்.
நான் இனி உங்களோடு உங்க வீட்டுக்கு வரமாட்டேன் என்று ஜீவா அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

குடும்பம் பிரிகிறது
பாண்டியன் ஸ்டோர் சீரியல் பலரும் எதிர்பார்த்திருந்த பல திருப்பங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சில மாதங்களாக இந்த சீரியலில் அடுத்தடுத்து கர்ப்பமாக இருக்கும் சீன்களை வைத்து இழுத்து கொண்டு இருக்கின்றனர் என்று ரசிகர்கள் அலுத்து போய் இருந்த நேரத்தில், தற்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை பல துண்டாக உடைத்து சீரியலில் விறுவிறுப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதுவரைக்கும் கூட்டு குடும்பம் தான் எங்களுடைய தாரக மந்திரம் என்று விளம்பரப்படுத்தி வந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பம் இப்போது அந்தப் பக்கம் ஒன்றும் இந்தப் பக்கம் ஒன்றும் ஆக அண்ணன் தம்பிகள் பிரிந்து போகிறார்கள்.

மாறிய கதைக்களம்
தொடர்ந்து ஜீவா பல எபிசோடுகளாகவே அவமானப்படுத்தப்பட்டு வந்த போதே இந்த நிலை வரும் என்று ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும் தற்போது இந்த முக்கியமான திருப்புமுனை பலருக்கும் விறுவிறுப்பாக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு கதிர் வெளியேறிய பிறகுதான் கதிர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறினார். அதுபோல ஜீவாவும் இந்த குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொட்டும் கருத்துகளால் தற்போது கதைக்களமும் மாற்றமடைந்திருக்கிறது.

கண்ணனால் வந்த பிரச்சனை
அந்த வகையில் இந்த சீரியலில் கண்ணன் செய்த குழப்பத்தினால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. கதைக்காக கண்ணன் தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மொய் எழுத போய் அங்கே ஏற்பட்ட பிரச்சனையால் இன்று மூர்த்தியிடம் ஜீவா அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதில் டிவிஸ்ட் என்னவென்றால் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் கண்ணனை கழுவி கழுவி ஊத்தி வருகிறார்கள். என்னதான் கேரக்டருக்காக கண்ணன் இப்படி செய்திருந்தாலும் இந்த அளவிற்கு அறிவில்லாதவர் எப்படி பேங்கில் ஆபிஸராக இருக்கிறார். இந்த மாதிரி பொறுப்பில்லாத ஆபிஸர்களால் தான் எங்களுக்கு பேங்கில் போகும்போது மணிக்கணக்காக நேரம் ஆகிறது என்று பல ரசிகர்கள் தங்களுடைய மொத்த வருத்தத்தையும் கமெண்ட்களில் இறக்கி வருகிறார்கள்.

அவமான படுத்துறீங்களே ஜீவா
இந்த நிலையில் நாளைக்கான எபிசோடில் இது நம்முடைய குடும்ப பிரச்சனை. இப்படி வெளியில் பல பேர் முன்னாடி பேச வேண்டாம் வாடா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று மூர்த்தி ஜீவாவை அழைக்க, எது நம்ம வீடு? நான் இனி உங்க வீட்டுக்கு வரமாட்டேன் என்று ஜீவா உறுதியாக கூற, இப்படியெல்லாம் பேசினா அடிச்சு பல்ல உருத்திருவேன் என்று வீராப்பாய் மூர்த்தி பேச, பார்த்து பேசுங்க மூர்த்தி. இது என் மாப்பிள்ளை. என் முன்னாடி எப்படி என் மாப்பிள்ளையை நீங்க பேசலாம் என்று ஜனார்த்தனன் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு சண்டைக்கு வர, என்னுடைய தம்பியை பேசுவதற்கு எனக்கு உரிமை இல்லையா? என்று மூர்த்தி சென்டிமென்ட் அட்டாக் செய்ய, ஆனால் அதற்கெல்லாம் அசருத ஆள் இனி நான் இல்லை என்று ஜீவா யார் உங்க தம்பி? இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவங்க ரெண்டு பேரும் தான் உங்க தம்பி அவங்களை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்புங்க என்று கூறுகிறார். இந்த பிரமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications