பண விஷயத்தில் கண்ணன் மற்றும் கதிர் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜீவா.. கடும் கோபத்தில் மீனா
தங்களுடைய சம்பள பணத்தில் கதிர் மற்றும் கண்ணன் மனைவிகளுக்கு பிடித்ததை செய்ததை பார்த்து ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.
சென்னை: கண்ணன் தன்னுடைய சம்பள பணம் முழுவதையும் அண்ணனிடம் கொடுக்காமல் தனக்காக சேமித்து வைத்திருப்பதை அறிந்து ஜீவா கண்ணனிடம் கேட்க அதற்கு கண்ணன் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
கதிர் முல்லைக்காக ஜிமிக்கி வாங்கி கொடுத்து இருப்பதை அறிந்து இந்த பணம் எப்படி வந்தது என கேட்க நான் சேமித்து வைத்தது என்று கதிரும் சொல்லி ஜீவாவுக்கு மேலும் ஏமாற்றத்தை கொடுக்கிறார்.
மீனாவின் அப்பா தனக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை உங்களை தவிர என்று ஜீவாவிடம் நெருடலாக பேசி ஜீவாவின் மனதை மாற்றுகிறார்.

மாமனாரிடம் மன்னிப்பு கேட்ட ஜீவா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் மாமனார் பத்திரிக்கை வைக்க வர சொல்லியும், ஜீவா கடை வேலை இருப்பதால் பத்திரிக்கை வைக்க போகவில்லை. இதனால் பிறகு அவருடைய மாமனாரிடம் மன்னிப்பு கேட்க அவருடைய வீட்டுக்கு செல்கிறார். அங்கே ஜீவாவின் மாமனார் வருத்தமாக இருக்கிறது. எனக்கு உடம்புக்கு முடியவில்லை என்பதால் தான் நான் உங்களிடம் கேட்டேன். என்னால் முடியும் என்றால் உங்களிடம் கேட்டிருக்க மாட்டேன். உங்க வீட்டில் இப்படி ஒரு நிகழ்வு என்றால் நீங்கள் போகாமல் இருப்பீர்களா? என்று கேட்க ஜீவா மாமனாரிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு நாளைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார்.

கண்ணனின் எதிர்பாராத பதில்
பிறகு வீட்டுக்கு வந்து ஜீவா, மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மீனா கண்ணன் வீட்டில் மொத்த சம்பளத்தையும் கொடுக்காமல் மறைத்து வைத்த கதையை சொல்ல ஜீவா அதை நம்பாமல் கண்ணனிடம் போய் கேட்கிறார். அப்போது கண்ணன் ஆமாம் அண்ணனிடம் காசை மொத்தமாக கொடுத்துவிட்டு எல்லாத்தையும் அண்ணன் கிட்ட போய் நிற்க முடியாது தானே? அதான் கொடுக்கல என்று பதில் கூறுகிறார். எங்களுக்கடைய தேவைக்கும் பணம் வேணும் தானே? என்று கண்ணன் கூற, இது தப்புடா, அண்ணா அண்ணி கிட்ட இதை சொல்ல வேண்டாமா? என்று அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

வருத்தமடையும் ஜீவா
அப்போது ஐஸ்வர்யா கண்ணன் கிட்ட இப்படி ஒரு அட்வைஸ் பண்ணுனதே நான்தான் மாமா. மீனா அக்கா மாதிரி எங்களால் எல்லாம் பொறுமையாக இருக்க முடியாது. எங்களுக்கு தேவை இருக்கு தானே என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து தன்னுடைய நிலைமையை நினைத்து வருத்தம் அடைகிறார். அடுத்த நாள் காலையில் கதிர் முல்லைக்கு ஒரு ஜிமிக்கி வாங்கி கொடுத்திருக்கிறார். இதை பார்த்த கண்ணன் கதிரை நக்கல் அடிக்கிறார்.

ஜீவாவுக்கு தெரியவரும் உண்மைகள்
பிறகு கதிர் முல்லைக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்திருக்கிறார். ஜிமிக்கியை பார்த்து முல்லை ரொம்பவே சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்க , இந்த கம்மலை நான் வளைகாப்புக்கு போட்டுக் கொள்கிறேன் என்று சொல்கிறார். அப்போது அதை வைத்து கண்ணன் கிண்டல் செய்து கொண்டிருக்க, அங்கே வரும் ஜீவாவிடம் விஷயத்தை கூறுகிறார். அப்போது ஜீவா காசு எப்படி வந்துச்சு என்று கதிரிடம் கேட்கும் போது, அதற்கு கதிர் நான் சேர்த்து வைத்தது தான் என்று சொல்கிறார். அதற்கு கண்ணன் என்ன அண்ணே இப்படி கேட்டுட்ட, கதிர் அண்ணன் இப்போ ஹோட்டல் ஓனர். அவர் அண்ணிக்காக தங்கத்திலோ, வைரத்திலோ கூட வாங்கி கொடுப்பார். நான் கூட அடுத்த மாசம் ஐஸுக்கு ரிங் வாங்கி கொடுக்கலாம் என்று இருக்கேன். நீ அதுக்கும் கணக்கு கேப்பா போல என்று சொல்கிறார். கண்ணன் பேசியதை கேட்டு ஜீவா பதில் எதுவும் சொல்லாமல் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications