அப்பாவால் உடைந்து போன குடும்பம்.. ஆனால் மீனா செய்த செயல்.. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே!
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமாவிற்கு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை ஹேமா மீனா கேரக்டரில் நடித்து வருகிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் தான் எடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை ஹேமா சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
ஹேமா வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் வேண்டுகோள் வைத்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர் மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லியாக அறிமுகமாகி நாட்கள் செல்ல செல்ல இவர் வில்லியா? கதாநாயகியா என்று ரசிகர்களுக்கு குழப்பம் கொடுக்கும் வகையில் இவருடைய கேரக்டர் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு காரணமான முக்கியமான நபர்களில் இருவரும் ஒருவர். ரசிகர்களின் மன ஓட்டத்தை அறிந்து அதே கருத்தை இவர் அந்த சீரியலில் அடிக்கடி பிரதிபலித்து விடுகிறார். அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். வீட்டில் செல்ல மருமகளாகவும் இருந்து வருகிறார்.

ஹேமாவின் ஆரம்ப காலம்
மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சொந்த ஊர் மயிலாடுதுறை தானாம். இவருக்கு சிறு வயதிலிருந்து மீடியாவில் சேர வேண்டும் என்று ஆசையில் இருந்திருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு சைதாப்பேட்டை காவல் நிலைய அலுவலகத்தில் ஹார்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார். பிறகு வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஆபீஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மெல்ல திறந்தது கதவு, சின்னத்தம்பி என பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

பரபரப்பான கதைக்களம்
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது பரபரப்பான கதை களம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் குடும்பம் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தது. இந்த குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்தாலும் அண்ணன் தம்பி பிரியாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் கதிர் முல்லையோடு வீட்டை விட்டு கிளம்பி சென்று இருந்தார். இந்த நிலையில் தற்போது ஜீவாவும் மீனாவும் வீட்டை விட்டு பிரிந்து செல்லும் பல திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படி பண்ணலாமா மீனா
திருமண மண்டபத்தில் ஜீவா மூர்த்தி மற்றும் தனத்தோடு சண்டையிட்டு கொண்டிருக்கும் பரபரப்பான காட்சிகள் இன்றைய எபிசொட்டில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் அந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன மீனா அங்க உங்க அப்பாவால அவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. நீங்க இங்க கூலாக போட்டோ வெளியிட்டு இருக்கீங்க. நீங்க தான் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிஞ்சிடாம பார்த்துக்கோணும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications