பாண்டியன் ஸ்டோர்ஸ்: சுகன்யா முகத்திரை கிழிந்தது! சூழ்ச்சிகளை உடைத்த மீனா, ராஜி! கோமதி எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூலை 18ஆம் தேதிக்கான எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இதுவரைக்கும் எல்லா பிரச்சனைக்கும் காரணமாக இருந்த சுகன்யாவின் முகத்திரையை மீனா மற்றும் ராஜி குடும்பத்தின் முன்பு கிழித்து இருக்கின்றனர். அரசியின் வாழ்க்கை சீர் அழிந்ததற்கு காரணம் சுகன்யா தான் என்ற உண்மை மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அரிசியின் போலி திருமணம் உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்தது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் தான். அதை தொடர்ந்து இப்போது சுகன்யாவின் சூழ்ச்சிகளும் தெரிய வந்திருக்கிறது. ஆனால் சுகன்யா எதற்காக இந்த குடும்பத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார் என்பது இனி தான் தெரியவரும்.

அதாவது இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அரசியிடம் ராஜி, மீனா, குழலி போன்றோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். கையில் பார்சல் கொண்டு வருகிறார் அதை பார்த்ததும் என்ன வடை வாங்கிட்டு வந்தீங்களா? என்று கேட்க இல்லை எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கிறேன் எல்லாரையும் கூப்பிட்டு சேர்ந்து சாப்பிடணும் என்று சொன்னதும் கோமதி எல்லாரையும் கூப்பிடுகிறார்.
பிறகு புரோட்டா, சிக்கன், மட்டன் என்று விதவிதமான சாப்பாடை பாண்டியன் எல்லோருக்கும் ஊட்டி விடுகிறார். தன்னுடைய மகள்கள் மருமகளுக்கு கொடுத்துவிட்டு கோமதிக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மொத்த குடும்பத்தினரும் சந்தோஷமாக இருக்கின்றனர். பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு குழலில் நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அதைத் தொடர்ந்து பாண்டியன் அரசியிடம் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் இருக்கு. நீ அன்னைக்கு இரவு அந்த குமாரை பார்க்க போனா ஆனா அவன் உன்னை எப்படி அந்த இடத்துக்கு வர சொன்னான்? உன் பிரண்ட்ஸ்ங்க மூலமாக உன்கிட்ட பேசுனானா? அல்லது எப்படி பேசினான் என்று கேட்க அரசி உண்மையை சொல்ல இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது ராஜியும் மீனாவும் நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் எங்ககிட்ட இருக்கு நாங்க சொல்லுறோம் என்று, இத்தனை பிரச்சனைக்கு காரணம் சுகன்யா தான் என்று சொன்னதும் மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவங்க தான் அரசி வீட்டை விட்டு வெளியே போவதற்கு காரணம். அரசியோடு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை குமார் எடிட் பண்ணி இவங்க மூலமாக தான் மிரட்டி இருக்கான். இவங்க தான் குமார் சொன்ன இடத்துக்கு அரசியை அனுப்பி வச்சிருக்காங்க என்று சொன்னதும் சுகன்யா அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்க ராஜி தொடர்ந்து பேசுகிறார்.

எங்கள் அண்ணன் அரசியை மிரட்டுவதற்கு இவங்களை தான் பயன்படுத்தி இருக்கிறான். இவங்கதான் ஆரம்பத்தில் இருந்து நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுனா இந்த குடும்பம் சேர்ந்துரும் என்று அரசியின் மனசை மாத்தி இருக்காங்க. தியேட்டருக்கு கூட அரசியை கூட்டிட்டு போயிட்டு அங்கு குமாருடன் கோர்த்து விட்டுட்டு இவங்க கிளம்பி போயிருக்காங்க.
அதற்கு பிறகு காலேஜுக்கு நான் தான் கூட்டிட்டு போவேன்னு எல்லார்கிட்டயும் சொல்லி கூட்டிட்டு போனாங்களே அங்கேயும் குமாரை வர வச்சிருந்தாங்க என்று சுகன்யா செய்த சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் போட்டு உடைக்க பழனி சுகன்யாவை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர் அந்த குமார் என் தங்கச்சியை போட்டோ வச்சு மிரட்டுனானா அவனை ஒரு வழி பண்ணுறேன் என்று கோபமாக கிளம்ப, இருடா வீட்டுக்குள்ள இருக்கிறவங்களை சரி பண்ணாம அடுத்தவங்களா பத்தி பேச இப்போ நேரம் இல்ல. முதலில் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று கோமதி சுகன்யா முன்பு கோபமாக வந்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications