Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: சரவணனிடம் கல்யாணத்தை பற்றி பேசிய அஞ்சலி.. தங்கமயில் எடுத்த தவறான முடிவு! மீனா பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் 2026 பிப்ரவரி 12-ம் தேதிக்கான எபிசோடில், சரவணனிடம் பேசும் முன்னாள் காதலி அஞ்சலி தன்னுடைய கல்யாண வாழ்க்கையை பற்றி பேசுகிறார். அதோடு நீயே என்னை கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று சொல்ல, அதைக் கேட்டு சரவணன் அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கத்தில் தங்க மயிலுக்கு தன்னுடைய அம்மாவால் புது பிரச்சனை வருகிறது என நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோச்சிங் கிளாஸ் போகிறேன் என்று சென்னைக்கு போன கதிர் ராஜி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் சரவணனுக்கு அவருடைய முன்னாள் காதலி அஞ்சலியுடன் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருவரும் போன் போயிட்டு அடிக்கடி பேச தொடங்கி இருக்கிறார்கள். அப்போது எனக்கு ரொம்ப தனிமையில் இருக்கிறேன் உன்கிட்ட பேசனும் போல இருந்துச்சு அதனால தான் உனக்கு மெசேஜ் பண்ணுனேன் என்று அஞ்சலி சொன்னதும் சரவணன் அஞ்சலிக்கு போன் பண்ணி பேச போகிறார்.

Pandian Stores 2 serial vijay tv

ராஜி கதிர் ரொமான்ஸ்

மறுபக்கத்தில் கதிர் ராஜிக்கு மல்லிப்பூ வாங்கி கொண்டு வந்து தலையில் வைத்து விட இதைப் பார்த்த ராஜு இப்பெல்லாம் நல்லாதான் நீ நடந்துக்கிற.. இனி ஊருக்கு போன ரூம் மேட் மாதிரி மாறிடுவியோ என்று ராஜி சோகமாக கேட்க, அதற்கு கதிர் நான் இனி அப்படியெல்லாம் மாறவே மாட்டேன் எப்பவும் உன்னோட புருஷன் மாதிரி நடந்துக்கிறேன் என்று கதிர் சொல்ல, பிறகு இருவருக்கும் ரொமான்ஸ் நடக்கிறது.

மறுபக்கத்தில் சரவணன் அஞ்சலிக்கு போன் பண்ணி பேசுகிறார். உன்னோட முதல் கல்யாணம் என்ன ஆச்சு எதனால அதில் பிரச்சனை வந்துச்சு என்று சரவணன் கேட்டதும், முதலில் அஞ்சலி தயங்குகிறார். பிறகு தன்னுடைய கதையை சொல்கிறார். அவருக்கு என் மேல விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுனரு, அதனால அவரு கூட எனக்கு வாழ பிடிக்காமல் விவாகரத்துக்கு அப்ளை பண்ணுனேன்.

ஆனால் முதலில் விவாகரத்து தர மாட்டேன்னு சொல்லிட்டாரு. அந்த சமயத்தில் அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது அதனால அங்க போயிட்டாரு‌. அப்புறம் அவர் வழக்கு விசாரணைக்கு வராததால் எனக்கு விவாகரத்து கிடைச்சிடுச்சு. இப்ப அம்மா வீட்ல இருக்கேன் என்று சோகமாக சொன்னதும் சரவணன் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.

ஜீ தமிழ் நீதானே பொன்வசந்தம் சீரியல் கதாநாயகியா இது? ஆளே அடையாளம் தெரியலையே! கணவர் இந்த பிரபலம்!
அப்போது அஞ்சலி என்னோட வாழ்க்கையில் நான் சந்தோஷமாகவே இருக்க கூடாதுன்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான் போல. ஆரம்பத்தில் உன்னை எனக்கு பிடிச்சது நம்ம லைஃப் நல்லா தான் போயிட்டு இருந்து ஆனா பிறகு அது சரிப்பட்டு வராமல் போயிடுச்சு... பேசாம நீயே என்னை கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று அஞ்சலி சொன்னதும் சரவணன் அஞ்சலியிடம் மன்னிப்பு கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: கதிர் வாழ்க்கையில் மீண்டும் வந்த முன்னாள் காதலி! மீனாக்கு வந்த போன்.. பாவம் கோமதி
ஆரம்பத்தில் அப்பா பேச்சை கேட்டு அஞ்சலி காதலை கைவிட்டது தப்பு என்று சரவணன் வருத்தப்படுகிறார். பிறகு உன்னுடைய லைப் எப்படி போயிட்டு இருக்கு! உன்னை உன் மனைவிக்கு பிடிக்குமா? நீ அப்போ மாதிரிதான் இப்பவும் அளந்து பேசுறியா...? இல்ல உன் மனைவி கிட்ட ஃப்ரீயா பேசுவியா? என்றெல்லாம் அஞ்சலி கேட்க, எனக்கு கடையிலிருந்து போன் வருது நான் பிறகு உன்கிட்ட பேசறேன் என்று சரவணன் ஃபோனை வைத்து விடுகிறார்.

மறுபக்கத்தில் தங்கமயில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு கிளம்புகிறார். அப்போது தங்கமயிலே கோர்ட்டில் டைவர்ஸ் வாங்கிட்டு இங்க வந்து வாழலாம்னு மட்டும் நினைச்சுறாத உன்னை அப்படியே விரட்டி விட்டுடுவேன். ஒழுங்கு மரியாதையா கெஞ்சி கூத்தாடி அந்த குடும்பத்தோட வாழ்றதுக்கு வழிய பாரு என்று மிரட்டுகிறார்.

அதற்கு தங்க மயிலும் நீ சொல்ற மாதிரியே சொல்லிடுறேன்மா.. நான் சொன்னா விவாகரத்தை கேன்சல் பண்ணிருவாங்களா? என்று அப்பாவியாக கேட்கிறார். அடுத்ததாக செந்தில் தன்னுடைய வீட்டில் பீர் குடித்துக் கொண்டிருக்கிறார். மீனா அதை பார்த்து கோபப்பட, என் பொண்டாட்டி மீனா என்கிட்ட உண்மையை மறைச்சுட்டா அதனாலதான் நான் குடிக்கிறேன் என்று மீனாவிடமே சொல்கிறார்.

பிறகு மீனா சமாதானம் படுத்த அவருக்கு தான் வாங்கிட்டு வந்த புரோட்டாவை கொடுக்கிறார். பிறகு நல்லபடியாக பேசிக் கொண்டு இருந்தாலும் கடைசியில் நீ எங்க குடும்பத்தை ஏமாத்துற, எங்க அண்ணன் வாழ்க்கைக்கு வேண்டாம் என்று சொன்ன தங்கமயில் கிட்ட உனக்கு என்ன பேச்சு? என்று மீண்டும் பழைய கதையையே பேச, இதனால் மீனா கடுப்பாகி இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+