Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்! கோமதி சொன்ன வார்த்தை! பாண்டியன் எடுத்த தப்பான முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 நவம்பர் 21 ஆம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் குடும்பத்திற்கு எதிராக கோமதியின் அண்ணன்கள் செய்த சூழ்ச்சியில் பழனி சிக்கி விடுகிறார். நடந்தது என்ன என்பது தெரியாமல் கோமதியும் பாண்டியனும் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தன்னுடைய அக்கா வீட்டில் இருந்து யாருமே கடை திறப்புக்கு வரலையே என்பதால் பழனி கடும் சோகத்தில் இருக்கிறார். பிறகு பங்க்ஷன் எல்லாம் முடித்துவிட்டு நான் மச்சான் கிட்ட போய் பேசி கூப்பிட்டு வரேன் அதுவரைக்கும் நீங்க கடையை பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பி போகிறார். அந்த நேரத்தில் பழனி தனக்கு துரோகம் செய்துவிட்டான் அவன் ஒரு துரோகி என்று பாண்டியன் வீட்டில் கத்திக் கொண்டிருக்கிறார். பழனி வந்ததும் அவன் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்காமல் குடும்பம் அனைவரும் சுற்றி நின்று பேசுகின்றனர்.

Pandian Stores serial vijay tv

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அரசியும், சரவணனும் பழனியை பற்றி புரிந்து கொள்ளாமல் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். அதைத்தொடர்ந்து கடுப்பான பழனி என்ன ஒரு நிமிஷம் பேச விடுங்க நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க மச்சான் என்று கெஞ்சுகிறார். அதற்கு பாண்டியன் இனிமேல் மச்சான்னு கூப்பிடாத இதோட நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற எல்லா உறவும் அந்து போச்சு. உனக்கும் எனக்கும் இடையில் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று சொல்ல பழனி அதிர்ச்சியாகி நிற்கிறார்.

கோவத்துல எந்த முடிவும் எடுக்காதீங்க மச்சான் நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க என்று பழனி சொல்ல, அதற்கு கோமதி காலையில் இருந்து உன்கிட்ட எங்க கடை திறக்கிறான்னு கேட்டுட்டே இருந்தேன்ல ஒரு வார்த்தை சொல்லயே? எல்லாம் தெரிஞ்சு தானே மறைச்சிருக்க? உனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண எப்படி மனசு வந்தது என்று அவரும் அவருடைய பங்குக்கு திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சரவணன் இதற்கிடையில் வந்து இன்னைக்கு நீங்க செஞ்சதை சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன் மாமா, ஏன் இப்படி எல்லாரும் துரோகம் பண்ணுறீங்க என்று கேட்கிறார்.

எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருந்தாலும் கதிர் மட்டும் மாமா என்ன சொல்ல வர்றாருன்னு கொஞ்சம் கேளுங்க என்று பழனிக்கு சப்போர்ட் பண்ணுகிறார். ஆனால் அவரையும் மத்த குடும்பத்தினரும் திட்டுகின்றனர். கடைசியில் பாண்டியன் உனக்கும் இந்த வீட்டுக்கு இனி எந்த சம்பந்தமும் இல்லை. துரோகிக்கு எல்லாம் இங்க இடம் இல்ல வெளிய போடா என்று சொல்லி விடுகிறார்.

இதனால் நொறுங்கிப் போன பழனி யாருமே நான் என்ன சொல்ல வரேன்னு கேட்க தயாரா இல்ல ஆனா அக்காவும் கூட என்ன புரிஞ்சுக்கலையே என்று வருத்தமாக கேட்க அதற்கு கோமதி இனிமே என் கையால உனக்கு பச்ச தண்ணி கூட கொடுக்க மாட்டேன் என் வாயால வீட்டை விட்டு போனு சொல்ல வச்சிடாத என்று சொன்னதும் பழனி கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியே வருகிறார்.

நேராக கடைக்கு வர அங்க அவர் அழுது கொண்டிருப்பதை பார்த்த காந்திமதி என்ன ஆச்சு என்று விசாரிக்க அப்போது பழனி நடந்த விஷயத்தை சொல்கிறார். என்ன துரோகின்னு சொல்லிட்டாங்க, யாருமே என் பேச்சை கேட்கல நான் துரோகியா என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு காந்திமதி நீ சின்ன வயசுலயே உன் அக்கா கைய புடிச்சுகிட்டு அவளோட போனவன்டா உன்ன போய் அவ இப்படி எல்லாம் பேசி இருக்காளே இதுக்கு மேல உன் வாழ்க்கையை பாரு பழனி அக்காவுக்காக நீ பண்ணுனது எல்லாமே போதும் என்று சொல்கிறார்.

அப்போது சுகன்யாவும் தன்னுடைய பங்குக்கு அவங்க பிள்ளையா எல்லாம் உங்களை பாக்கல அப்படி நினைச்சிருந்தா நீங்க கடை திறக்கிறதை பார்த்து சந்தோஷப்பட்டு இருப்பாங்க என்று ஏத்தி விடுகிறார். மறுபக்கத்தில் கோமதி பழனி நல்லாவே இருக்க மாட்டான் என்று சாபம் விட அதை பார்த்து மீனாவும் ராஜியும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+