Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ் பழனியின் நிஜ மனைவி, குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? உருக்கமாக வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை ரசிகர்களிடம் தனி இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் ராஜ்குமார். அவர் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனி கேரக்டரில் நிரோஷா (கோமதி) தம்பியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா, அக்னி நட்சத்திரம், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற ஹிட் சீரியல்களில் நடித்ததன் மூலம் வீட்டுக்குள் ஒருவராக மாறியவர். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி சீரியல் தான் அவரை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு சேர்த்தது என்று அவர் பலமுறை பேசியிருக்கிறார். அந்த சீரியல் முடிந்த பிறகு, இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்ததாகவும் ராஜ்குமார் கூறியிருந்தார்.

Pandian Stores serial vijay tv

அந்த வரிசையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலிலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் முழுக்க மூன்று குழந்தைகளை மையமாக வைத்து நகரும் குடும்பக் கதை. மூன்று அண்ணன்-தம்பிகளில் ஒருவராக ராஜ்குமார் நடித்திருந்தார்.

குழந்தைகளில் ஒருவர் தொலைந்து போவது, அதனால் குடும்பத்தில் ஏற்படும் உணர்ச்சிகரமான மாற்றங்கள் தான் கதையின் மையம். குடும்ப உறவுகள், பாசம், பிரிவு, மீண்டும் ஒன்றாகும் பயணம் - இவை எல்லாம் இந்த சீரியலின் முக்கிய அம்சங்கள் என்று அவர் அப்போது பகிர்ந்திருந்தார்.

அந்த பேட்டியில் அவர் மனதைத் திறந்து பேசிய இன்னொரு விஷயம் குடும்பம். "என் மனைவியும் மகளும் ஊர்ல இருக்காங்க. வாரத்துக்கு ஒரு தடவ தான் போய் பார்க்க முடியும். அவர்களை பார்க்காமல் இருக்கிற அந்த ஒரு வாரமே ரொம்ப கஷ்டமா இருக்கும்" என்று சொல்லும்போது, ஒரு நடிகர் அல்ல, ஒரு அப்பா பேசுவது போலவே இருந்தது.

Pandian Stores serial vijay tv

சீரியலில் நடிக்கும் குழந்தைகளை பார்க்கும் போது கூட, தன்னுடைய மகள் ஞாபகம் வந்துடும் என்றும், சில நேரம் அவர்களை அருகில் கூப்பிட்டு பேசுவேன், மனசு லேசாகிடும் என்றும் அவர் பகிர்ந்திருந்தார். தன் பிறந்தநாளுக்கு மனைவி ஏற்பாடு செய்த ஒரே மாதிரி ட்ரெஸ் போட்ட குடும்ப தருணத்தை இன்றுவரை மறக்க முடியாத நினைவாகவும் அவர் சொல்லியிருந்தார்.

இந்தப் பேட்டிக்கு பிறகு காலம் கடந்தாலும், இப்போது ராஜ்குமார் நடித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பழனி கதாபாத்திரம் மூலம் அவர் இன்னும் அதிக ரசிகர்களை சம்பாதித்து வருகிறார். அக்கா கோமதி குடும்பத்தினரால் வீட்டை விட்டு துரத்தப்பட்டாலும், அக்காவுக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் உயிருக்கும் மேலாக பாசம் காட்டும் பழனி கதாபாத்திரம், பார்வையாளர்களை மிகவும் பாதித்துள்ளது.

கோபம், வேதனை, அன்பு, பொறுப்பு - எல்லாவற்றையும் ஒரே கதாபாத்திரத்தில் அழகாக காட்டி வருகிறார் ராஜ்குமார். இந்த நிலையில், இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2025ஆம் ஆண்டில் குடும்பத்தோடு எடுத்த பல புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். மனைவி, மகளுடன் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சீரியலில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், நிஜ வாழ்க்கையில் குடும்பமே தான் தனது பெரிய பலம் என்பதை அந்த புகைப்படங்கள் சொல்லாமல் சொல்லுகிறது.

Pandian Stores serial vijay tv

திரையில் குழந்தைகள், குடும்பம், பாசம் பற்றிய கதாபாத்திரங்களில் வாழும் ராஜ்குமார், நிஜ வாழ்க்கையிலும் அதே உணர்வுகளோடு வாழ்கிறார் என்பதே அவரை ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக மாற்றியிருக்கிறது. வள்ளி தொடங்கி, பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை - ராஜ்குமார் பயணம் இன்று ஒரு நடிகரின் பயணம் மட்டும் அல்ல, ஒரு குடும்ப மனிதனின் கதையாகவும் மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+