Pandian Stores 2: தங்க மயிலை பார்த்து சரவணன் கேட்ட கேள்வி! மனம் மாறும் குமார்! கோமதி பிடித்த பாயிண்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், சரவணன் மற்றும் அவரது மனைவி தங்கமயில் வாழ்க்கையில் பெரும் புயல் வீசுகிறது. நேற்று வரை மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் இன்று பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. தங்கமயில் கர்ப்பமே ஆகாமல் தன்னிடம் ஏமாற்றி விட்டார் என்று கதிர் கோபத்தில் இருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சோகத்தில் குடும்பம்
நேற்று வரை குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சி இன்று இல்லை என்பதை கதிர் செந்திலிடம் கூறுகிறார். கோமதி, சரவணனைத் தேடி அலைகிறார். சரவணன் செல்போன் எடுக்காததால் செந்தில் கவலைப்படுகிறார். அப்போது சரவணன் பைக்கில் வீட்டிற்கு வருகிறார். அவரிடம் கோமதி எங்க போன மயில் வீட்டுக்குள் அழுது கொண்டு இருக்கிறார். நீ போனை கூட எடுக்கல என்று கேட்க அதற்கு சரவணன் வரும் வழியில ஒரு பிரண்டை பார்த்தேன் அதான் கொஞ்ச நேரம் நின்னு பேசிட்டு வந்தேன் என்று சொல்ல, கோமதி நம்பாமல் எந்த பிரண்டு என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதோடு, சரவணனை சாப்பிடச் சொல்கிறார். அதற்கு கதிர் "நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று ஆறுதல் கூறுகிறார்.
கண்ணீருடன் தங்கமயில்
பிறகு சரவணன் சோகமாக இருப்பதை பார்த்தது வருத்தப்படாதீங்க சீக்கிரமா குழந்தை கிடைக்கும் என்று ஆறுதல் சொல்கிற பிறகு சரவணன் ரூமுக்கு வருகிறார். தங்கமயில் சரவணனைப் பார்த்து "நமக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது?" என்று சொல்லி கட்டிப் பிடித்து அழுகிறார். ஆனால் கோபத்தில் இருந்த சரவணன் அவளது கையை உதறிவிட்டு தள்ளிப் போய் நிற்கிறார்.
சரவணனின் கோபம்
சரவணன் தங்கமயிலிடம் "நீ என்னை ஏமாத்துவது என்ன புதுசா? உன் உண்மையான முகம் தெரிந்த பிறகும் உன்னை நம்பியதுதான் நான் செய்த பிழை" என்று கோபமாகப் பேசுகிறார். இதற்கு தங்கமயில் "குழந்தை விஷயத்தில் போய் யாராவது பொய் சொல்லுவார்களா?" என்று கேட்கிறார். ஆனால் சரவணன் "நீ இந்த விஷயத்திலும் பொய் சொல்வாய்" என்கிறார். உன்னோட படிப்பு விஷயம் எனக்கு தெரிஞ்சு உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சேன் ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு எப்படியும் உன்னை மன்னிச்சு வீட்டுக்கு கூப்பிட வந்திருப்பேன். ஆனால் நீ என்னை குழந்தையை வச்சு தான் ஏமாத்துவியா என்று அழுது கொண்டிருக்கிறார். சரவணன் பேச்சை கேட்டு தங்கமயிலும் அழுது கொண்டிருக்கிறார்.
குமாரவேலின் சோகம்
குமாரவேல் அரிசியை நினைத்து கவலையில் இருக்கிறார். மறுபக்கத்தில் ராஜி மற்றும் கதிர் இருவரும் சரவணன் மற்றும் தங்கமயில் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுநாள் காலை தங்கமயில் "சத்தியமா நான் பொய் சொல்லவில்லை மாமா" என்று சொல்கிறார். ஆனால் சரவணன், "நீ கிளம்பி வீட்டிற்குப் போ" என்று கோபமாகப் பேசுகிறார். மேலும் "இனிமேல் நீ யாரோ நான் யாரோ" என்று சொல்லி தங்கமயிலை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். சரவணன் மற்றும் தங்கமயில் வாழ்க்கையில் இந்த பிரிவு ரசிகர்கள் எதிர்பார்க்காத சம்பவம் தான். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications