Pandian Stores: பாண்டியன் குடும்பத்தை பற்றி காந்திமதி சொன்ன விஷயம், முத்துவேல் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் கோமதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடில் கோமதியின் குடும்பத்தினர் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதால் அதை நினைத்து காந்திமதி அழுது கொண்டிருக்கிறார். பிறகு தன்னுடைய மகனிடம் காந்திமதி சொன்ன விஷயங்களை கேட்டு முத்துவேல் அதிரடி முடிவு எடுத்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், பாண்டியன் தன்னுடைய தங்கை கோமதியை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார் என்று கோமதியின் அண்ணன்கள் கோபத்தில் இருக்கின்றனர். இது பழைய பகையாக இருந்தாலும் இப்போது தங்கமயில் தன்னுடைய வயதையும் படிப்பையும் மறைத்து திருமணம் செய்த விஷயம் சரவணன் மூலமாக மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது.

அதோடு சரவணன் தங்கமயிலை வீட்டை விட்டு துரத்திவிட்டு இருக்கிறார். இனி உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். ஆனால் சரவணன் குடும்பத்தில் வாழ வேண்டும் என்று தங்கமயில் அழுது கொண்டு இருப்பதை பார்த்து தங்கமயிலின் அம்மா தங்க மயிலுக்கே தெரியாமல் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்.
அதுவும் வரதட்சணை கொடுமை கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதால் வீட்டில் இருக்கும் எல்லோரையும் போலீஸ் அரெஸ்ட் செய்து கொண்டு போயிருக்கின்றனர். தன்னுடைய மகள் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனதை பார்த்து காந்திமதி அழுது கொண்டிருக்கிறார். என்னுடைய பொண்ணு பேத்தி எல்லாம் எந்த காலத்தில் போலீஸ் ஸ்டேஷன் போனாங்க என்று சொல்லி அழுது கொண்டிருக்கும் போது அதை பார்த்த சக்திவேலின் மனைவி எல்லாத்துக்கும் காரணம் என்னுடைய மனைவி புருஷன் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
என் புருஷன் தானே தங்கமயில் அம்மாவிடம் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னாரு என்று சொன்னதும் காந்திமதி நடந்த விஷயத்தை எல்லாம் முத்துவேலிடம் சொல்கிறார். அதைக்கேட்ட சக்திவேல் அவங்க எப்படி பொம்பளைங்களை கூட்டிட்டு போவாங்க என்று கேட்கிறார். அதை தொடர்ந்து முத்துவேல் வண்டியை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார்.
மறுபக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாக்கியத்திடன் அந்த குடும்பத்தை பார்த்தால் தப்பானவங்க மாதிரி தெரியலையே என்று கேட்க, அதற்கு பாக்கியம் என்னுடைய பொண்ணுக்கு நடந்ததெல்லாம் உண்மை என்று சத்தியம் பண்ணி சொல்கிறார். இதனால் இன்ஸ்பெக்டர் மயிலை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர சொல்கிறார்.
அதற்கு பாக்கியம் மயிலால் வர முடியாதும்மா.. அவ ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறா என்று சமாளிக்கிறார். அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் அங்கிருந்த போலீஸ் ஆபீஸரிடம் வீட்டுக்கு போய் அந்த பொண்ணு கிட்ட ஸ்டேட்மென்ட் வாங்கிட்டு வர சொல்கிறார். மறுபக்கத்தில் செந்தில் மீனாவுக்கு போன் செய்து உங்க ஆபிசுக்கு போலீஸ் வரலையா என்று கேட்கிறார்.
மீனாவுக்கு என்ன விஷயம் என்று தெரியாததால் மயில் குடும்பம் எங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க. எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்று சொன்னதும் மீனா அதிர்ச்சியாகிறார். அந்த நேரத்தில் முத்துவேல், சக்திவேல் ஸ்டேஷனுக்கு வந்து நிற்கிறார். ஸ்டேஷனில் முத்துவேலுவை பார்த்ததும் ராஜியும் கோமதியும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: விஜயாவை கலங்க வைத்த ரோகிணி.. மீனாவிடம் போட்ட சபதம்.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: கோமதி நறுக்குன்னு கேட்ட கேள்வி! ஆடி போன பாண்டியன்.. உடையும் குடும்பம் -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications