சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாக்கியம் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கௌதமி வேம்பு நாதன். திரையில் வில்லியாக கடுமையாக தோன்றும் இவர், நிஜ வாழ்க்கையில் சந்தித்த துயரம் கேட்பவர்களை கண்கலங்க வைக்கிறது.

20 வருட பயணம்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் பயணம் செய்து வரும் கௌதமி, ஆரம்பத்தில் விளையாட்டு வீராங்கனை. திருமணத்திற்கு பிறகு தான் நடிப்புலகில் வந்தார். பல சீரியல்களில் நடித்தாலும், வில்லி கதாபாத்திரங்களே அவருக்கு பெரிய அடையாளமாக மாறியது.
ஆனால் "திரையில் வில்லி... நிஜத்தில் அப்படி இல்ல" என்பதற்கு உயிருடன் இருக்கும் உதாரணம் இவரே.
வாழ்க்கையே தலைகீழ் ஆன தருணம்
ஒரு வருடத்திற்கு முன்பு, ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த நேரம். திடீரென மருத்துவமனையில் இருந்து வந்த ஒரு அழைப்பை கேட்டு கௌதமி அதிர்ச்சி அடைந்து விட்டாராம். காலையில் கௌதமி சூட்டிங் கிளம்பும்போது அவருடைய கணவர் நல்லபடியாக தன் இருந்திருக்கிறார் ஒரு பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனையால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை வந்திருக்கிறது.
அந்த நேரத்தில் அவர் ஹாஸ்பிடலுக்கு போய் பார்த்ததும் டாக்டர்கள் உங்க கணவருக்கு இதயத்தில் அடைப்பு இருக்கிறது உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு பக்கம் உயிர் போராட்டம்... இன்னொரு பக்கம் வேலை பொறுப்பு. அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கௌதமி நின்றாராம்.
மருமகள் பற்றிய நெகிழ்ச்சி
அப்போது கௌதமி தயங்கி அதிர்ச்சியில் நிற்கும்போது மருத்துவமனையில் முழு பொறுப்பையும் அவரது மருமகள் ஏற்றுக் கொண்டாராம். "மருமகள் எனக்கு கிடைத்த பெரிய வரம்" என்று கௌதமி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். அவர் ஷூட்டிங்கில் இருந்தபோதும், மருத்துவமனை நிலைமைகளை முழுமையாக கவனித்தது அவர்தான்.
48 நாள் போராட்டம்
அந்த நேரத்தில் ஷூட்டிங் இங்கு இருந்து இவர் பிரேக் டைமில் தான் வந்திருக்கிறார். இவர் ஹாஸ்பிடலில் இருந்தால் சூட்டிங் கேன்சல் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும் அப்படி செய்தால், தயாரிப்பு மற்றும் சீரியல் டீமுக்கு அதிகமான நஷ்டம் ஏற்படும் என்பதால் இவர் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போய் நடித்து முடித்து இருக்கிறார். மறுபக்கத்தில் ஆபரேஷன் நடந்ததாம். அதன் பின் 48 நாட்கள் உயிருக்கு போராடிய அவரது கணவர்... இறுதியில் உயிரிழந்தாராம்.
"என்னுடைய கணவர் அவருடைய உடம்பை முன்னாடியே கவனிச்சிருந்தா இப்படி ஆகாது... கவனிக்க நினைத்த நேரத்தில் எல்லாமே கைவிட்டுப்போச்சு" என்று அவர் வலியுடன் பகிர்கிறார்.

கேமரா முன் சிரிப்பு... பின்னால் கண்ணீர்
"ஷூட்டிங்கில் நான் சிரிப்பேன்... சில சமயம் மிரட்டுவேன்... ஆனால் கேமரா ஆப் ஆனதும் உள்ளே ஒரு பெரிய தனிமை இருக்கும்" என்று கண்ணீருடன் கூறிய கௌதமியின் வார்த்தைகள், அவர் அனுபவித்த வலியை வெளிப்படுத்துகின்றன.
வாழ்க்கையை எதிர்கொண்ட பெண்
திரையில் வில்லியாக ரசிகர்களை பயமுறுத்தும் கௌதமி வேம்பு நாதன், நிஜ வாழ்க்கையில் ஒரு உறுதியான பெண். கணவரை இழந்த வலியையும் தாங்கி, தனது பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இந்த உண்மை கதையை கேட்ட பிறகு... அவரை "வில்லி" என்று மட்டும் பார்க்க முடியாது என்பதே ரசிகர்களின் உணர்வாக இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரை பலர் திட்டி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவருடைய கஷ்டத்திற்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications