Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pandian Stores 2 Jan 12 : ஒரே ஒரு லெட்டரால் சித்தப்பாவை கண்ணீர் விட வைத்த ராஜி.. கோமதியின் மனமாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 12ஆம் தேதிக்கான எபிசோடில் ராஜி தன்னுடைய அப்பா மற்றும் சித்தப்பா இருவருக்கும் எழுதிக் கொடுத்த கடிதம் தான் இன்றைய எபிசோடில் ஹைலைட்டாக இருந்தது. ராஜியின் கடிதத்தை பார்த்து ராஜியின் அப்பாவும் சித்தப்பாவும் கண்ணீர் விட்டு இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாண்டியன் குடும்பத்தினருக்கு இதுவரைக்கும் எதிரியாக இருந்தது பாண்டியனின் மனைவி கோமதியின் அண்ணன்கள் தான். ஆனால் பாண்டியன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும் கோமதியின் அண்ணன்கள் தான் முதலில் வந்து துணைக்கு நின்றது. இப்போது பாண்டியன் குடும்பத்தின் மீது மயில் குடும்பம் கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட் கூட பொய் என்று நிரூபித்து பாண்டியன் குடும்பத்தை ஜெயிலிலிருந்து வெளியே கூட்டிட்டு வந்திருக்கின்றனர்.

Pandian Stores serial vijay tv

இந்த நிலையில் தான் அசிங்கப்படுத்தி அனுப்பிய பழனி கூட தனக்கு கஷ்டம் என்றதும் ஓடி வந்ததை நினைத்து கோமதி வருத்தப்படுகிறார். தன்னுடைய தம்பியை பார்த்ததும் நான் உன்னை நம்பாமல் பேசிட்டேன், என்னை மன்னிச்சிடுடா என்று மன்னிப்பு கேட்க, அதற்கு பழனி நீ என்னைக்குமே எனக்கு ஒரு அம்மா தான் அக்கா, உன் மேல கோபமே வரல.

நடந்ததெல்லாம் நடந்ததாக இருக்கட்டும். இனி அடுத்த கதை பற்றி யோசிப்போம் என்று சொல்கிறார். பிறகு என்னுடைய கடைக்கு நீ வருவியா என்று பழனி கேட்க, கண்டிப்பா வருவேன்... உன் கடையில நானே வேலை பார்ப்பேன் என்று கோமதி சொன்னதும், பழனி சந்தோஷமாக அங்கிருந்து கிளம்புகிறார்.

அப்போது ராஜி வந்து இரண்டு லெட்டரை கொடுத்து இதை அப்பாவிடமும் சித்தப்பாவிடமும் கொடுத்துடுங்க என்று சொல்லி அனுப்புகிறார். அதை சரி என்று பழனியும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் வீட்டில் சுகன்யா கடைக்கு தேவையான பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Pandian Stores serial vijay tv

அப்போது காந்திமதி கடை நிர்வாகம் ஃபுல்லா இப்ப நீ தான் பாக்குறியா? என்று கேட்க, ஆமா என்ன பண்ணா உங்க பையன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டு இருக்காரு, ஐயா இந்த நேரத்தில் கடையை அப்படியே விட முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு காந்திமதி நீ நடத்துவது நல்லது தான் என்று சொல்லி பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பழனி வருகிறார், பழனியிடம் சுகன்யா அந்த மயில் குடும்பத்தை போல உங்களையும் வீட்டை விட்டு அடிச்சு துரத்திட்டாங்க, இப்ப அங்க போயிட்டு வரீங்களே உங்களை ஏத்துக்கிட்டாங்களா என்று கேட்க, அவங்க என்னை புரிஞ்சுகிட்டாங்க. கடை விஷயத்தில் நடந்ததை எடுத்து சொன்னேன் இப்பதான் அவங்களுக்கே உண்மை தெரிஞ்சிருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது சுகன்யா உங்க அக்கா குடும்பத்துக்காக நீங்க ஓடிப்போனது தப்புன்னு நான் சொல்லல. அவங்களுக்காக உதவி பண்ணுங்க, ஆனா கடையை பற்றி யோசிங்க.. கடையில் கவனம் வைங்க என்று சொல்கிறார். பிறகு பழனி தான் கொண்டு வந்த இரண்டு லெட்டரையும் தன்னுடைய அண்ணன்களிடம் கொடுக்க, ராஜியின் அப்பா அதை படித்து பார்த்து விட்டு எமோஷனல் ஆகிறார்.

அதில் ராஜி தனக்காக தன்னுடைய அப்பாவும் சித்தப்பாவும் வந்ததற்கு நன்றி சொல்லி இருக்கிறார். அதோடு தன்னுடைய திருமணம் நடந்த சூழ்நிலை மற்றும் தான் எடுத்த முடிவால் குடும்பத்தினர் பட்ட கஷ்டம் போன்ற எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாக எழுதி இருக்கிறார். அதை படிக்கும் ராஜியின் அப்பாவும் சித்தப்பாவும் ஒவ்வொரு பக்கமாக அழுது கொண்டிருக்கின்றனர்.

Pandian Stores serial vijay tv

ராஜி எழுதிய கடிதத்தை ராஜியின் அம்மாவும் படித்து பார்த்துவிட்டு அவரும் அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக சென்டிமென்ட் காட்சி நிறைந்ததாக இன்றை எபிசோடு முடிவடைந்தது. ஆனால் ராஜு எழுதிய கடிதத்தில் அவர் நான் ஐபிஎஸ் அதிகாரி ஆகி தான் உங்களை பார்க்க வீட்டுக்குள்ள வருவேன் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு முன்பு ராஜியை இன்ஸ்பெக்டர் ஆக்க வேண்டும் என்று கதிர் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது ராஜி ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லி இருக்கிறார்.

நாளைக்கான எபிசோடில் தான் பெரிய சம்பவமே காத்திருக்கிறது. தங்கமயிலுக்கு 80 பவுன் நகை போடுகிறோம் என்று எட்டு பவுன் மட்டுமே தங்க நகையை போட்டு மிச்சம் எல்லாம் கவரிங் நகையே போட்டு அனுப்பிய தங்கமயில் உடைய குடும்பத்தினர் இப்போது அந்த நகையெல்லாம் வேண்டும் என்று போலீசில் சொல்லி இருக்கின்றனர்.

கோமதி குடும்பத்தினரும் அந்த நகைகளை கொண்டு போய் கொடுக்கின்றனர். அப்போது இந்த நகை எல்லாம் கருத்துப் போய்விட்டது. எல்லாம் கவரிங் நகையா மாற்றி வச்சிருக்காங்க என்று மயில் அம்மா புது குண்டை தூக்கி போடுகிறார். இதில் மயில் என்ன சாட்சி சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+