Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: குமார் வீட்டிற்குள் சென்று விசாரித்த போலீஸ்! உடையப்பட்ட உண்மை, ஜெயிலுக்கு போகும் கோமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 2ஆம் தேதிக்கான எபிசோடில், மயில் அம்மா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக குமார் குடும்பத்திடமும் போலீஸ் விசாரணை செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடந்த சம்பவங்கள் கோமதி குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது. மீனா எடுத்த முயற்சிகளும் பலனளிக்காமல் போயிருக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மயில் அம்மா கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட் காரணமாக பாண்டியனின் மொத்த குடும்பத்தினரும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கின்றனர். அப்போது பாண்டியன் குடும்பத்தின் மீது எந்த தவறும் இல்லை என்று போலீசுக்கு தெரிகிறது. ஆனாலும் போலீஸ் பாண்டியன் குடும்பத்தை அனுப்ப முடியாது என்று சொல்லி இருக்கின்றனர்.

Pandian Stores serial vijay tv

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சக்திவேல், முத்துவேல் வீட்டிற்கு போலீஸ் வருகின்றது. அதை பார்த்ததும் குமாருடைய அம்மா பயந்து போய் போலீஸ் நம்ம வீட்டுக்கு வருகிறது என்று காந்திமதியிடம் ஓடிப்போய் சொல்கிறார். அப்போது போலீஸ் வீட்டிற்குள் வந்து எதிர் வீட்டில் இருந்த தங்கமயில் அவருடைய மாமனார் குடும்பத்தின் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க, என்ன நடந்தது என்று சொல்லுங்க என்று கேட்கின்றனர்.

அதற்கு காந்திமதி, எதிர் வீட்டில் இருந்த கோமதி என்னுடைய சொந்த மகள் தான். ஆனால் அவள் கூட நாங்க பேசுறது கிடையாது. இரண்டு குடும்பத்திற்கும் பயங்கரமான பகைதான் இருந்துச்சு. ஆனாலும் நான் என்ன நடந்தது என்று உண்மையை சொல்லுறேன். என்னுடைய மருமகன் எந்த பெண்ணையும் கொடுமைப்படுத்துற ஆளு கிடையாது. அவர் தான் தன்னுடைய மகனுக்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சாரு.

ஆனா அந்த பொண்ணு குடும்பத்தினர் தான் கோமதி குடும்பத்தையே ஏமாற்றி இருக்காங்க. நகை விஷயத்திலும், வயசு விஷயத்துகளும் கூட சரின்னு விடலாம். ஆனால் குழந்தை விஷயத்தில் கூட ஏமாற்றி இருக்காங்க. அவங்க வீட்டிற்குள் நடந்த பிரச்சனை வெளியே தெரியாமல் தான் இருந்துச்சு.

கோமதியும் அவளுடைய புருஷனும் அந்த பொண்ணோட அப்பா அம்மாவை வரச்சொல்லி மகளை கூட்டிட்டு போக சொல்லி இருக்காங்க. ஆனா அந்த பொண்ணோட அம்மா தான் வீட்டு வாசலில் நின்னு சண்டை போட்டு பெரிய பிரச்சனை பண்ணிச்சு, என்று நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்கிறார். பிறகு போலீஸ் அங்கிருந்து போகின்றனர்.

மறுபக்கத்தில், மீனா எல்லோருக்கும் டீ வாங்கி கொடுக்க அதற்கு இன்ஸ்பெக்டர் திட்டி வெளியே அனுப்புகிறார். பிறகு வெளியே வந்ததும் சக்திவேல் முத்துவேல் மற்றும் தன்னுடைய அப்பா எல்லோரிடமும் இந்த விஷயத்தில் ஏதாவது செஞ்சு ஆகணும் எப்படி இவங்களை வெளியே கொண்டு வர என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு முத்துவேல் நாம ரெண்டு பேரு மட்டும் இன்னொருமுறை பேசிப் பார்க்கலாம் என்று உள்ளே போகிறார்.

அப்போது சக்திவேல் கோமதியிடம் மன்னிப்பு கேட்கிறார். முத்துவேல் மீண்டும் இன்ஸ்பெக்டரிடம் பேச, அதற்கு அவர் ராஜி மற்றும் அரசி இருவரையும் மட்டும் வெளியே அனுப்பலாம் ஆனால் மற்ற எல்லோரையும் இன்று ஒரு நாள் ஜெயிலில் அடைத்து தான் ஆக வேண்டும். நீங்க எதுவா இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கோங்க என்று சொல்லிவிடுகிறார்.

மொத்த குடும்பத்தினரும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தாலும் போலீஸ் சம்மதிக்காததால், கோமதி சரி நான் இருக்கிறேன் என் பிள்ளைகளை மட்டுமாவது வெளியே விடுங்க என்று சொல்லி இருக்கிறார். அதன்படி ராஜி மற்றும் அரசி இருவரும் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+