பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: முத்துவேல் செய்த செயல்.. ஜெயிலுக்குள் கோமதிக்கு நடந்த விபரீதம்! பாண்டியன் பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் 2026 ஜனவரி 3ஆம் தேதிக்கான எபிசோடில் ரசிகர்களை உணர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பாண்டியன் குடும்பம் முழுவதும் சட்ட சிக்கலில் சிக்கி, ஜெயில் வாசல் வரை செல்வது,
அதனைத் தொடர்ந்து நிகழும் அழுகை, பதற்றம், அதிர்ச்சி - இன்றைய எபிசோடு முழுக்கவே கனமான உணர்வுகளால் நிரம்பி இருந்தது.
இன்றைய எபிசோடு தொடங்கியதும், போலீஸ் ஸ்டேஷனில் இரவு வைத்திருக்க முடியாது என்று இன்ஸ்பெக்டர் திட்டவட்டமாக கூறி, சரவணன் குடும்பத்தை ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப் போவதாக அறிவிக்கிறார். இந்த வார்த்தையை கேட்டவுடன், அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோகின்றனர். குறிப்பாக ராஜி, அரசி இருவரும் கதறி அழத் தொடங்குகின்றனர்.

இதற்கிடையில், ஸ்டேஷனில் இருப்பவர்களை வெளியே எடுக்க சக்திவேல், முத்துவேல் உள்ளிட்டோர் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். ஆனால் இன்ஸ்பெக்டர், "வழக்கு வலுவாக இருக்கு... எப்ஐஆர் போட்டாச்சு" என்று கூறி அவர்களின் நம்பிக்கையை உடைக்கிறார்.
கடைசியில், ராஜி, அரசி இருவரை மட்டும் வெளியே அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்படுகிறது. கையெழுத்து வாங்கி கிளம்ப சொல்லும் போது, "மத்தவங்களை விட்டுட்டு நாங்க எப்படி போவது?" என்று இருவரும் கதறி அழுகிறார்கள்.
ஜீப்பில் ஏற்றப்படும் குடும்பம்
அதனைத் தொடர்ந்து, மற்றவர்களை ஜெயிலுக்கு அழைத்துச் செல்ல போலீஸ் தயாராகிறது. கோமதி, பாண்டியன், செந்தில், சரவணன், கதிர் எல்லோரையும் ஜிப்பில் ஏற்றுக்கொண்டு போகின்றனர். அதை பார்த்து ராஜி, அரசி இருவரும் அழுதபடியே செல்கிறார்கள். கதிரும் அழுதபடி நிற்க,
முத்துவேல் மகளுக்கு ஆறுதல் சொல்லி, நாளைக்கு எப்படியாவது வெளியே எடுத்துடலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்.
சரவணன் கதறல்
இன்ஸ்பெக்டரிடம் சரவணன், "அம்மாவையாவது வெளியே அனுப்புங்க மேடம்" என்று கெஞ்சுகிறார். ஆனால் அதற்கு இன்ஸ்பெக்டர் மறுத்துவிட்டு, "உங்களை எல்லாம் இங்க நைட் வைச்சிருக்க முடியாது... ஜெயிலுக்கு தான் அழைச்சுட்டு போறோம்" என்று உறுதியாக கூறுகிறார். இந்த வார்த்தைகள், குடும்பத்தை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
காந்திமதிக்கு அதிர்ச்சி
இதற்கிடையில், முத்துவேல், சக்திவேல் உள்ளிட்டோர் வீட்டுக்கு திரும்புகிறார்கள். பாண்டியன் வீட்டு முன்பாக வண்டி நின்றதும், காந்திமதி, வடிவு, மாரி ஆகியோர் வெளியே வருகிறார்கள். "கோமதி எங்க?" என்று காந்திமதி கேட்க, நடந்த சம்பவங்களை பழனி விளக்குகிறார். அதை கேட்டவுடன்,
மூவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.
பிறகு ராஜி மீனா அரசி எல்லோரையும் வீட்டுக்குள் அனுப்பிய பிறகு, முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்களிடம் ராஜி, அரசி இருவரும் "நாளைக்கு எல்லாரும் வெளிய வந்துடுவாங்க இல்ல?" என்று பதற்றமாக கேட்க, முத்துவேல் "கண்டிப்பா வந்துடுவாங்க"
என்று ஆறுதல் கூறுகிறார்.
கோமதிக்கு பிரச்சனை
மற்றொரு பக்கம், ஜெயிலில் அனைவரும் தனித்தனி செல்லில் அடைக்கப்படுகின்றனர். மயில் குடும்பம் செய்த துரோகங்களை நினைத்து, ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பக்கம் அழுது கொண்டிருக்கின்றனர். அப்போது, கோமதி தண்ணீர் குடிக்க செல்லும் போது நெஞ்சடைக்கிறது. மயக்கமடைந்து கீழே விழும் நிலைக்கு செல்வது, பார்வையாளர்களை பதற வைத்துள்ளது. அடுத்த வாரம் கோமதிக்கு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு வர வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications