Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pandian Stores 2 Promo: கதிர் கல்யாண உண்மைய உளறிய கோமதி.. பாவம் பாண்டியன்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது கதிர் மற்றும் ராஜிக்கு கல்யாணம் பண்ணி வைத்தது கோமதி தான் என்ற உண்மை குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. அதை கேட்டு பாண்டியன் அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்த உண்மைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் மயிலின் உண்மை தெரிய வந்த பிறகு இந்த சீரியலில் கதையில் வேகம் எடுத்து இருக்கிறது. மயிலை விவாகரத்து செய்ய வேண்டும் என்று சரவணன் நோட்டீஸ் அனுப்ப, அதற்கு மயில் அம்மா தன்னுடைய மகளை கொடுமைப்படுத்தினார்கள் என்று பாண்டியன் குடும்பத்தின் மீது வழக்கு தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தையே ஒரு நாள் முழுக்க ஸ்டேஷனில் வைத்து விட்டார்.

Pandian Stores serial vijay tv

இந்த பஞ்சாயத்தில் பாண்டியன் குடும்பத்திற்காக பாண்டியனின் மனைவி கோமதியின் அண்ணன்கள் வந்திருந்தனர். இதனால் இனி பிரிந்து இருந்த இரண்டு குடும்பமும் இனி சேர்ந்து விடும் என்று நினைத்திருந்த நேரத்தில் தான் இப்போ புது பிரச்சனை வந்திருக்கிறது. ராஜியும் கோமதியும் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வருவதை சக்திவேல் விரும்பவில்லை.

காரணம் இவங்க ரெண்டு பேரும் வந்தால் சொத்து பாதியாக பிரிந்துவிடும், அப்படி என்றால் நம்முடைய மகனுக்கு முழு சொத்து வராது என்று சக்திவேல் பிளான் போட்டு இருக்கிறார். இதனாலேயே எப்படியாவது குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்று சக்திவேல் நினைத்திருந்த நிலையில் இப்போது அதற்கான சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது.

Bigg Boss Finale:பிக் பாஸ் டிஆர்பியை எகிற வைக்க விஜய் டிவி எடுத்த முடிவு! கம்ருதீன், பார்வதி லைவில் வந்து சொன்ன விஷயம்
தனக்கு உதவி செய்ததற்காக கோமதி தன்னுடைய அண்ணன்களை விருந்துக்கு சாப்பிட வர வைத்திருந்தார். சாப்பிட வந்த இடத்தில் தான் சக்திவேல் தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார். அதாவது ராஜி உடைய கல்யாணத்தை வைத்து பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார். ராஜி ஒருத்தனால் ஏமாற்றப்பட்டு விட்டால் என்ற உண்மை தெரிந்ததும் கதிர் நல்லவனா இருந்தா பொண்ணை கூட்டிக்கொண்டு எங்கள் வீட்டில் தானே விட்டு இருக்கணும்?

Pandian Stores serial vijay tv

அவன் அம்மா மூலமாக சொத்து கிடைக்கவில்லை என்றதும் ராஜி மூலமாக அந்த சொத்தை வாங்கி விடலாம் என்று தான் கல்யாணம் பண்ணி இருக்கிறார் என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார். இதனால் கோபமான கோமதி நான் தான் கதிருக்கும் ராஜுக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன் என்ற உண்மையை சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டு பாண்டியர் அதிர்ச்சியில் இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: உண்மை முகத்தை காட்டிய சக்திவேல்! கோமதிக்கு இது தேவையா? மீண்டும் மயிலால் பிரச்சனை
அப்போது என் பொண்ணு வாழ்க்கையில் முடிவெடுக்க நீ யாரு என்று முத்துவேல் கோபத்தில் திட்டுகிறார். அப்போது சக்திவேல் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இதோட உங்க குடும்பத்தை நாங்க தலை முழுகுறோம் இனி உங்களுக்கும் எங்களுக்கும் எதுவும் இல்லை என்று கோபமாக வீட்டை விட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு போகிறார்.

பிறகு கோமதி பாண்டியனிடம் மன்னிப்பு கேட்க, அதற்கு பாண்டியன் புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்கிற நம்பிக்கை உடைந்து போய்விட்டது என்றால் அது கண்ணாடி மாதிரி தான் ஒட்டிவைக்க முடியாது என்று சொல்கிறார். இதனால் வரும் வாரத்தில் இதை வைத்து பஞ்சாயத்து தொடங்கப் போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+