பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் கேட்ட கேள்வி.. உளறி மாட்டிக்கொள்ளும் மயில்! கோமதி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நவம்பர் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தங்க மயிலை வேலைக்கு போக சொல்லி பாண்டியன் சொல்லி இருக்கும் நிலையில் குடும்பத்திற்க்கு முன்பு தங்கமயில் மாட்டிக் கொள்கிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தங்கமயில் நல்லவரா? கெட்டவரா? என்று யூகிக்க முடியாத வகையில் தான் நடந்து கொள்கிறார். இவர் வில்லியா அல்லது அப்பாவியா என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல தங்கமயிலுக்கே தெரியாத கதை தான். ஒவ்வொரு முறையும் எதாவது தப்பு செய்து பிரச்சனையில் மாட்டிக் கொள்வது பிறகு அந்த பிரச்சனையில் இருந்து தான் வெளியே வரவேண்டும் என்று பிறரை மாட்டிக் கொள்வது தான் தங்கமயிலின் வழக்கமாக இருக்கிறது.

படிக்காத தங்கமயில் தான் பணக்கார வீட்டு பெண் என்றும் அதிகமாக படித்திருக்கிறேன் என்றும் ஏமாற்றி தான் சரவணனை திருமணம் செய்து இருக்கிறார். சரவணனை விட வயது அதிகம் என்பது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது இந்த நிலையில் படிக்காத தங்கமயில் தான் எம்ஏ படித்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கும் நிலையில் அதை வைத்து தான் இப்போது இந்த சீரியலில் பிரச்சனை வருகிறது.
அதாவது நேற்றைய எபிசோடில் ராஜி தான் டியூஷன் எடுக்க போறேன் என்ற பாண்டியனிடம் கேட்டிருந்தார். நீங்க மற்ற மாமனார் போல இல்ல. நீங்க பெண்கள் முன்னேற்றத்தை விரும்புறவங்க என்று அவரை ஐஸ் வைக்க பேசினார். இதைக் கேட்டு பாண்டியனும் யோசித்துப் பார்த்துவிட்டு நீ வேலைக்கு போமா என்று சொல்லிவிட்டார்.

அதற்கு பிறகு தங்கமயிலிடம் நீயும் எம் ஏ படித்திருக்கிற நீயும் ஏதாவது வேலைக்கு போ வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார். இதனால் இரவு தூக்கம் இல்லாமல் தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து நான் வேலைக்கு போக வேண்டும் என்று சொல்றாங்க என்று சொல்ல, நான் இரண்டு நாளில் இதற்கு முடிவு கட்டுகிறேன் என்று அவருடைய அம்மா சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில் சரவணனிடமும் நான் வேலைக்கு போகவில்லை என்று தங்கமயில் கெஞ்சி பார்க்க சரவணன், அப்பா வேலைக்கு போக சொல்லிட்டாங்க. நீ என்ன வேலைக்குனாலும் போ என்று சொல்லி இருக்கிறார். இதற்கிடையில் அடுத்த நாள் காலையில் பாண்டியன் வீட்டில் எல்லோரும் முன்பு நீ என்ன வேலைக்கு போறேன்னு முடிவு பண்ணிட்டியா தங்கமயில் என்று கேட்கிறார்.

அதற்கு தங்கமயில் நான் வேலைக்கு எல்லாம் போகல அத்தைக்கு துணைக்கு வீட்டு வேலை செஞ்சுட்டு இருந்து விடுறேன் என்று சொல்ல அதற்கு கோமதி ஏன் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதுன்னு நினைச்சியா? இத்தனை நாட்கள் நான்தானே வீட்டு வேலை எல்லாம் பார்த்தேன்? நீ உன்னுடைய படிப்புக்கு தகுந்த வேலைக்கு போ என்று சொல்கிறார்.
நான் நெப்போலியன் மகனை பற்றி தப்பா பேசல.. அவங்க தான் அப்படி கேட்டது.. காந்தராஜ் பேட்டி
இந்த நிலையில் இதிலிருந்து தங்கமயில் எப்படி தப்பிக்கப் போகிறார் அல்லது படிப்பு விஷயம் வீட்டிற்கு தெரிய போகிறதா? என்ன நடக்கப்போகிறது? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இப்பொழுது அடுத்த அடுத்த பல திருப்பங்கள் வந்திருக்கிறது.

ஏற்கனவே ராஜி தன்னுடைய சித்தப்பா தன்னை அவமானப்படுத்திய போது அவருக்கு சரியான பதிலடி கொடுத்து அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார். அதைத்தொடர்ந்து இப்போது தங்கமயில் மாட்டுவாரா? என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications