பாண்டியன் ஸ்டோர்ஸ்: கல்யாணம் பற்றி அரசி சொன்ன விஷயம்.. பாண்டியன் எடுத்த முடிவு.. குமார் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. பாண்டியன் குடும்பத்தில் அரசி மற்றும் சதீஷின் திருமணம் குறித்த பேச்சு, பல குழப்பங்களையும், மனக் கசப்புகளையும் ஏற்படுத்தியது. அரசிக்கு கல்யாணம் நடக்க போகும் விஷயத்தை கேட்டு குமார் மனவருத்தத்தில் இருக்கிறார்.

திடீர் திருமண யோசனை
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், பாண்டியனின் அக்கா பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அப்போது அவர், "நம்ம பையன் சதீஷுக்கும், அரசிக்கும் கல்யாணம் பண்ணி வைப்போமா?" என்று கேட்கிறார். இதைக் கேட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சதீஷும் தனக்கு அரசியைத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்கிறார். பாண்டியனின் அக்கா என்ன முடிவு சொல்வீர்கள் என்று கேட்க, குடும்பமே ஒரு குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறது.
மனம் திருந்திய குமார்
ஒருபக்கம், வடிவுவிடம் குமாரின் அம்மா, "குமார் சாப்பிடாமல் இருக்கிறான்" என்று கவலைப்படுகிறார். அதோடு குமாரிடம் ஏன்டா நீ இப்படி இருக்குற? ஒன்னு வெட்டு குத்துன்னு ரவுடிசம் பண்ணிட்டு இருக்கிற. இல்ல இப்போ செஞ்ச தப்ப எண்ணி வருத்தப்பட்டு சாப்பிடாம இருக்கிற என்று புலம்பி கொண்டிருக்கிறார். இதைக் கேட்ட பாட்டி, "அவன் தான் பண்ண தப்பெல்லாத்தையும் யோசிச்சுப் பார்க்குறான் போல" என்கிறார். இது, குமார் கடந்த காலத் தவறுகளை உணர்ந்து, மனம் திருந்தியிருப்பதைக் காட்டுகிறது. அதேநேரம், சுகன்யா சக்திவேல் வீட்டிற்கு வந்து, "அரசியைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க" என்று சொல்லும்போது, குமார் கவலைப்படுகிறார்.
அரசியின் உறுதியான முடிவு
இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், பாண்டியன் அரசியிடம் சென்று அவரது முடிவைக் கேட்கிறார். அதற்கு அரசி, "எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். நான் என்னைக் கொஞ்சம் சரி பண்ணனும். அதுக்கப்புறம்தான் இதைப்பற்றி யோசிக்க முடியும்" என்று உறுதியாகத் தெரிவிக்கிறார். ஆனாலும் உங்களுக்கு நான் சதீஷை கல்யாணம் பண்ணினால் சந்தோஷமா இருப்பேன்னு நீங்க நினைச்சீங்கன்னா இந்த கல்யாணத்தை பண்ணி வைங்க. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரிதான் என்று சொல்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு, பாண்டியன் தனது அக்காவிடம் சென்று, "இந்தக் கல்யாணம் வேணாம். உங்க பையனுக்கு வேற யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க" என்று சொல்கிறார். எபிசோடின் இறுதியில், குமார் தனது பாட்டியிடம் சென்று, தான் செய்ததெல்லாம் தவறு என்று வருத்தப்படுவதோடு, இந்த எபிசோட் முடிவடைகிறது. போகிற போக்கை பார்த்தால் பாட்டி தான் இனி அரசி மற்றும் குமார் கல்யாணத்தை நடத்தி வைக்க போகிறார் என்று தெரிகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications