Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: வீட்டை விட்டு வெளியே போகும் செந்தில்! பாண்டியன் கேட்ட கேள்வி! மீனா கொடுத்த பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப உறவுகளின் போராட்டத்தைச் சொல்லும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் இன்றைய எபிசோடில், குடும்பத்தில் ஏற்படப்போகும் பிரிவின் வலியைப் பதிவு செய்வதாக அமைந்தது. செந்தில் வீட்டை விட்டுத் தனியாகப் போக முடிவெடுத்ததுதான் இப்போதைய பெரிய பிரச்சினை.

Pandian Stores Vijay TV

செந்தில் மீனாவுக்கு கொடுத்த ஆபீசுக்கு போக போறேன் என்று சொல்கிறார். செந்திலின் இந்த முடிவைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த கோமதி, தனது மகனுடன் பேசிக் கொண்டிருக்கிறார். "நீ ஏன் தனியாகப் போகணும்?" என்று அவர் வருத்தத்துடன் கேட்க, செந்திலோ தனது மனக் கஷ்டத்தை வெளிப்படுத்துகிறார். "இனிமேல் என்னால் இங்க வாழ முடியாது!" என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொல்கிறார். மேலும் பாண்டியன், "அவனுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யட்டும்" என்று கோபத்துடன் ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.

மகனின் இந்த பிடிவாதமான பேச்சைக் கேட்டு கோமதி உடைய ஆரம்பிக்கிறார். அவர் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த மருமகள் மீனா, "இந்த முடிவுக்கும், செந்தில் தனியாகப் போவதற்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை" என்று அவரைச் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

மீனா - செந்தில் மோதல்

இங்கே மீனா, தான் இந்த முடிவில் இல்லை என்று சொன்னாலும், செந்திலின் இந்த முடிவால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டு கலங்குகிறார். இதைப் பார்த்த ராஜி, "உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், செந்திலிடம் நேரடியாகப் போய் அதைச் சொல்லலாமே?" என்று மீனாவைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு மீனா, "நான் எத்தனை தடவை சொல்லிப் பார்த்துட்டேன்... அவர் கேட்கிறாரே இல்லை!" என்று தனது இயலாமையைத் தெரிவிக்கிறார்.

மறுபக்கம், செந்திலின் மனக்காயத்துக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை சீரியல் காட்சிப்படுத்தியது. தனது அப்பாவின் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கவே வீட்டை விட்டுப் போக வேண்டும் என்ற முடிவுக்கு செந்தில் வந்திருக்கிறார். அவர் மிகவும் உருக்கமாக, "தயவுசெய்து யாரும் என்னைத் தடுக்க வேண்டாம்" என்று தனது குடும்பத்திடம் வேண்டுகோள் வைக்கிறார்.

ஆனால், மீனாவால் சும்மா இருக்க முடியவில்லை. செந்திலைப் பார்த்து, "அத்தை எவ்வளவு அழுதுகொண்டிருக்காங்க... இப்புடியா தனியாகப் போற விஷயத்தை வீட்டில சொல்லுறது?" என்று கேட்கிறார். இந்த விவாதத்தின் முடிவில், அவர்கள் இருவருக்குள்ளும் சிறிது நேரம் காரசாரமான வாக்குவாதம் ஏற்படுகிறது.

நாளைக்கே புறப்படுகிறேன்

செந்திலின் பிரிவைத் தாங்க முடியாமல் கோமதி தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும் நிலையில், அடுத்த நாள் காலையிலும் சோகத்துடனேயே விடிந்தது. குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், கதிர் அண்ணா எடுத்த முடிவு சரிதான் என்று சரவணனிடம் சொல்கிறார். மனக்கசப்பு இருந்தாலும், செந்திலின் நிலைமையையும் கதிர் உணர்வதாக இந்தக் காட்சி காட்டுகிறது. இதைத் தொடர்ந்து, கடைக்குச் சென்று வேலையைப் பார்க்கும்படி சரவணனிடம் சொல்லிவிட்டு அவர் கிளம்புகிறார்.

சரியாக அந்த நேரம் பார்த்து, செந்தில் மூத்த அண்ணன் சரவணன் கூப்பிடுகிறார். சரவணன் அவர் சொன்ன வார்த்தை, குடும்பத்தினரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. "நான் நாளைக்கே வீட்டை விட்டுப் போகப்போறேன்" என்று செந்தில் உறுதியுடன் சொல்கிறார்.

செந்திலின் பிடிவாதம், மீனா மற்றும் கோமதியின் கண்ணீர், குடும்பத்தின் குழப்பம் என இன்றைய எபிசோட் சோகமயமாக முடிந்துள்ளது. செந்தில் வீட்டை விட்டுப் போவதைத் தடுக்க பாண்டியனும், குடும்ப உறுப்பினர்களும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+