Pandian Stores 2: கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்: கோமதி கேட்ட கேள்வி! மீனா சொன்ன விஷயம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய குடும்பப் பிரச்சனை வெடித்துள்ளது. வீட்டிற்குள்ளே நிலவும் சச்சரவுகள், குறிப்பாக அண்ணன்-தம்பி உறவில் ஏற்படும் மனக்கசப்புகள் காரணமாக, செந்தில் வீட்டை விட்டு வெளியேறும் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இந்தக் கடினமான முடிவால் பாண்டியன் குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
செந்திலின் இந்த முடிவைக் கேட்ட அண்ணன் சரவணன், "கொஞ்சம் நிதானமா இருடா... அவசரப்படாத" என்று பாசத்துடன் அறிவுறுத்துகிறார். அதே சமயம், வீட்டுப் பிரச்சனைகள் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாத கோமதி, செந்திலிடம், "இந்த வீட்டில உனக்கு என்ன பிரச்சனை என்று சொல்லு. அதை நான் சரி செய்து தாறன்" என்று சொல்கிறார். பிரச்சனை வீட்டைத் தாண்டி உணர்வுபூர்வமானது என்பதைப் புரியாமல் அவர் பேசுவது, அங்குள்ள மன அழுத்தத்தை மேலும் கூட்டுகிறது.

பிடிவாதத்தில் பாண்டியன்
செந்திலின் நிலைப்பாட்டைக் கண்ட பாண்டியன் கடும் கோபமடைகிறார். ஆனாலும் "அவனுக்குப் பிடிச்ச மாதிரியே வெளியில போய் வாழட்டும்" என்று கோபத்தில் சொல்லிவிடுகிறார். சகோதர பாசம் இருந்தாலும், குடும்பத்தின் நிம்மதி முக்கியம் என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது.
இந்த பிடிவாதமான சூழலில், செந்தில் நேரடியாகப் பாண்டியனிடம், "தன்னால இங்க சகிச்சுக் கொண்டெல்லாம் இருக்க முடியாது. நான் போக போறேன்" என்று கூறிவிடுகிறார்.
இறுதியாக, செந்திலைப் பார்த்துப் பாண்டியன், "போற இடத்தில ஏதும் பிரச்சனை வந்தால், 'அப்பா' என்று கூப்பிட்டுக் கொண்டு வரக்கூடாது" என்று உணர்ச்சிவசப்பட்டு எச்சரிக்கிறார். அதற்கு செந்திலோ, "நான் எதுக்காக உங்க கிட்ட வரப்போறேன்?" என்று பதிலடி கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறார். ஒரு கூட்டுக்குடும்பம் உடைவதைக் குறிக்கும் இந்தக் காட்சி ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது.
மீனாவின் ஆறுதல்
செந்திலின் முடிவால் மிகவும் உடைந்துபோனது மீனாதான். செந்தில் கிளம்பிய பிறகு, அவர் பாண்டியனைத் தனியாக அழைத்து, "செந்திலுக்கு நான் எவ்வளோ தடவை சொல்லிட்டேன். ஆனா அவர் கேட்கிறார் இல்ல, நான் என்ன செய்றது?" என்று அழுது புலம்புகிறார். ஒரு குடும்பம் சிதைவதைக் காண முடியாமல் மீனா தவிப்பது தெளிவாகிறது. இருவரும் கொஞ்ச தூரம் பேசிக்கொண்டே நடக்கும் காட்சிகள், குடும்பத்தின் துயரத்தை ஆழமாகப் பதிவு செய்கிறது.
கோமதியின் புது வீடு பிளான்
வீட்டிற்குள் ஏற்பட்ட சலசலப்பு ஒருபுறமிருக்க, வெளியேறும் முடிவில் இருக்கும் செந்தில், மீனாவிட்டமும் கோபமாக நடந்து கொள்கிறார். செந்தில் கிளம்பிச் சென்ற பிறகு, அவரை நினைத்து கோமதி அழுது கொண்டிருக்கிறார். ஆனால், செந்திலோ அதைக் கவனிக்காமல் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த கோமதி கோபப்படுகிறார். அதற்கு செந்திலோ, "ட்ராமா போடாமல் இருங்க" என்று பதிலளிக்கிறார்.
இதன் உச்சமாக, செந்தில், கோமதியிடம் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைச் சொல்கிறார்: "புருஷனோட டார்ச்சரில இருந்து தப்பிக்கிறதுக்கு என்னோட வீட்டில வந்திருங்க" என்று கோமதியை அழைக்கிறார். இதைக் கேட்ட கோமதி திகைத்துப்போகிறார். "என்னோட புருஷன் மேல பழி சொல்லாத" என்று அவர் மறுக்கிறார்.
செந்திலின் குழப்பமான இந்தச் சூழலில், கோமதிக்கு கதிர் ஆறுதல் கூறுவதுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. வீட்டை விட்டுச் செல்லும் முடிவில் செந்தில் உறுதியாக இருப்பதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் எப்போது ஒன்று சேரும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications